Tuesday, 9 January 2024

சொந்த ஊர் 8 பண்பு நலன்கள் 1001 2024 புதன்






 சொந்த ஊர் 8

பண்பு நலன்கள்
1001 2024 புதன்
சென்ற பகுதியல் சொந்த ஊரின் மணம், சுவைகள் பற்றிப் பார்த்தோம்
நாக்கு சற்று நீளமோ ஊராருகுக்கு என சிந்தனை வரும் அளவுக்கு சில செய்திகள்
ஆம் நாக்கு நீளம் என்பது ஒரு ரசனையின் வெளிப்பாடுதானே
பேச்சில் எழுத்தில், அன்றாட வாழ்க்கை முறையில் இலக்கிய இலக்கணம் விரவி நிற்கும்
பண்பு என்று சொன்னால் எனக்கும் மற்றவர்களுக்கும் மனதில் முதலில் தோன்றுவது
மத நல்லிணக்கம்
ஆம் , சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாட்டை எங்கும் எதிலும் சிறிதும் காண முடியாது
இதற்கு சான்று பகரும் முதல் செய்தி
பெரிய பள்ளிவாசலை அடுத்து உள்ள பிள்ளயார் கோயில்
இரண்டுக்கும் இடையே உள்ளது பொதுச் சுவரோ என்று எண்ணும் அளவுக்கு ஒட்டியிருக்கும்
பள்ளிவாசலில் தொழுகை அழைப்பு (பாங்கு ) ஒலிக்கும்போது கோயிலின் ஒலி குறைக்கப்படும்
தீபாவளி, ரம்ஜான் ,பக்ரீத் என்றால் எல்லோரும் பலகாரங்களை பகிர்ந்து கொள்வார்கள்
ரம்ஜான் ,பக்ரீத் அன்று வடை, அதிரசம், சுசியம் , போன்ற சிற்றுண்டிகள் செய்யும்பழக்கம் இன்னும் ம்ச்சமிருக்கும் சில இடங்களில் எங்கள் ஊரும் ஓன்று
இஸ்லாமிய ஆண்டுப் பிறப்பை ஒட்டி வரும் முஹர்ரம் பண்டிகையை
இரு மதத்தினரும் சேர்ந்து அல்லா சாமி பண்டிகை என்று அனுசரிப்பார்களாம்
என் பார்வைக்கு வந்த செய்திகள் சில
ஒரு ஏழைத் தொழிலாளி உடல் நலம் குன்றி தொழிலுக்குப் போக முடியாமல் இருந்தபோது அவரைப் பள்ளிவாசலில் தங்க வைத்து மருத்தவ உதவி கொடுத்தார்கள்.அவர் மகனுக்கு வேலை வாங்கிக் கொடுத்து வருமானத்துக்கும் வழி செய்தார்கள்
அதற்கெல்லாம் மேல் அவர் மறைவுக்குப்பின் அவர் மதச்சடங்கின்படி பள்ளிவாசல் செலவில் அவர்உடல் அடக்கம் செய்யப்பட்டது
அருகில் உள்ள சில ஊர்களில் அனைத்து மதத்தினரும் ஓன்று சேர்ந்து பள்ளிவாசலகள் கட்ட்டியிருக்கிறார்கல்
சீதேவியின் பெண்கள் படித்துறை ஓன்று கடைத் தெருவில் அமைந்திருந்தது
பள்ளிவாசல் நிர்வாகிகள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதை ஆண்கள் படிதுறையாக மாற்றிக் கொடுத்தது கோயில் நிர்வாகம்
மத நல்லிணக்க மாநாடு, கூட்டம் எல்லாம் எங்கள் ஊரில் நான் கேள்விப்பட்டதில்லை
அதெல்லாம் தேவைப்படாத அளவுக்கு அது இருப்பதே தெரியாமல் மக்கள் மனதில் ஒன்றியிருக்கிறது மத நல்லிணக்கம்
இந்த மத நல்லிணத்துக்கு வித்திட்டிவர்கள் மருது சகோதரர்கள் என்றுசொல்லப்படுகிறது
பாகுபாடு இல்லாமல் பள்ளிவாசல்கள்.தேவாலயங்கள் பலவும் கட்டிக் கொடுத்தார்கள்
ஆடம்பரமில்லாத எளிய வாழ்க்கை முறை எங்கள் ஊரின் சிறப்புகளில் ஓன்று
குளியல் அறை, ஓய்வறை எல்லாம் தேவையில்லை
நாள்தவறாமல் சீதேவியில் துணி துவைத்துக் குளித்து விடுவார்கள்
ஒரு சிலர் இ னா தோட்டத்துக்குப் போவார்கள்
நடக்க அஞ்ச மாட்டர்கள் ‘
புறம் பேசுதல், நக்கல், பகடி ,நையாண்டி எல்லாம் நிறையவே இருக்கும்
அதை எல்லாம் தாண்டி , ஒரு புரிதல் ,நெருக்கம் உதவும் மனப்பாங்கு , இன்ப துன்பங்களில் பங்கெடுப்பு இருக்கும்
எதிர் பாராமல் விருந்தாளி வந்து விட்டால் அக்கம் பக்கத்தில் சோறு, குழம்பு , வெஞ்சனம் வாங்கி சமாளித்து விடுவார்கள்
அமெரிக்காவில் உள்ள சிற்றூர்களில் இப்படி ஒரு பழக்கம் இருப்பதாக
தன் பயணக் கட்டுரை ஒன்றில் மணியன் குறிப்பிட்டிருந்தார்
சும்மாவா சொன்னார்கள்
கற்றுக் கொடுக்கும் இனம் தமிழினம்
என்று
சிறப்பானஉணவுவகைகள் சமைத்தால் நெருங்கிய ஒன்றிரண்டு பேருக்கு கொடுத்து விடும் வழக்கம்
பண்ட மாற்று எல்லாம் உண்டு
“அடியே ராசாத்தி நாளக்கி மத்தியானம் வாவரிசிச் சோறு
வாவரிசியாக ஒரு ஆள் வந்திருங்க “
“சரி அண்ணே பொஞ்சாதி வந்துர்றேன் “
இவ்வளவுதான் விருந்துக்கு அழைப்பு
வீட்டுகுக்குள் நுழையக்கூட நேரம் இல்லாமல் வாசலில் நின்றே சொல்லி விடுவார்கள்
முறைப்படி அழைக்கவில்லை என்று யாரும் வருத்தப்படவும் மாட்டர்கள்
(வாவரிசி = வாழ்வரசி = சுமங்கலி )
இதவும் ஒரு மத நல்ல்லினக்கதின் அறிகுறிதான்
புர்கா என்பது மக்கள் அரபு நாடுகளுக்கு வேலைக்கு போனபின் வந்த ஒரு மாற்றம்
அதற்கு முன்ஒரு சிலர் குறிப்பாக பள்ளிக்கூடம் செல்லும் பெண்கள் வெள்ளை நிற துப்பட்டா போடும் பழக்கம் இருந்தது
எல்லோரும் தலையை மூடும்படி முக்காடு போட்டிருப்பார்கள் பின் கொசுவம் வைத்து சேலை கட்டும் முறையில் முக்காடு விலகாது என்று சொல்வார்குள்
ஒரு பருவத்தில் பல குடும்பங்களில் பெண்கள் படிப்பை நிறுத்தி விடுவார்கள்
அதற்காக பெண்கள சும்மா இருக்க மாட்டார்கள்
தையல் ,பூத்தையல் (எம்ப்ராய்டரி), நெகிழி கூடை பின்னுதல்
என பல்கலைகளைக் கற்றுத் தேர்வார்கள்
திருமறை முழுமையாக ஓதுவார்கள்
பெண் குழந்தை நிறைய பிறந்தால்
“பெண்(ங்) குடிதாம்மா பெருங்குடி நீ ஒன்னும் கவலைப்படாதே ““
என்று ஆறுதல் சொல்லி வாழ்த்துவார்கள்
அடுத்து விடை பெற்றுப் போகும்போது “
“ம் இந்த அரசுக்குத் துணையாக ஒரு அரசு பிறந்திருக்கலாம் “
என்று சொல்வார்கள்
ஒருவர் இருவர் சொல்வது அல்ல இது .
கூட்டம் கூட்டமாக பிள்ளை பிறந்ததைப் பார்க்க வீட்டுக்கோ
ஆஸ்பத்திரிக்கோ வருவது ஊர் வழக்கம்
அவர்கள் அனைவரும் ஒரே மாதிரி சொல்லுவது இது
ஆஸ்பத்திரி என்பது ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவ மனையைக் குறிக்கும்
அரசு மருதுவ மனை சின்னாஸ்பத்திரி என்றும் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவ மனை பெர்யாஸ்பத்திரி என்றும் அறியப்படும்
பெயருக்கு ஏற்றாற்போல் மிகப் பரந்த வளாகத்தில் எல்லா வசதிகளும் கொண்ட சிறந்த மருதுவமனை –மிக மிக மலிவான கட்டணத்தில்
பொதுப்பிரிவு,தனியறை, குளிர் அறை இவைபோக
நகரத்தார் பிரிவு என்று ஓன்று தனியாக
எங்கள் ஊரில் நகரத்தார் ஒருவர் கூடக் கிடையாது..(அதற்கு என்ன காரணம் தெரியவில்லை )
ஆனால் அருகில் உள்ள மகிபாலன் பட்டி, கண்டர மாணிக்கம் , பொன்னமராவதி போன்ற ஊர்களில் வசிக்கும் அவர்களுக்காக தனிப்பிரிவு
அவர்ர்கள் பேறுகாலத்துக்காக மருத்துவ மனைக்கு வரும்போது உற்றார் உறவினர் நிறைய வருவார்கள் .. உடன் சமையலுக்கும் ஆள் கூட்டி வருவார்கள்
ஒரு சிற்றுலா போல வந்து வீடு படித்து தங்கி, வித விதமாக செட்டி நாட்டு சமையல் செய்து சாப்பிடுவார்கள்
“பெத்துப் பொழச்சிட்டயாமா “
இது அவர்கள் வாழ்த்தும் முறை –எல்லோருமே
அறைக்குள் வராமல் வாசலில் நின்றே வாழ்த்துவார்கள்
பிள்ளைபிறந்த 40 ஆவது நாளில் சீதேவியில் எல்லோருக்கும் எண்ணெய் , சிகைக்காய் கொடுப்பார்கள்
விடிவதற்குள் குளியல் துவையல் எல்லாம் முடித்து கிளம்பி விடுவார்கள்
மிகத் திறமையாக கட்டியிருக்கும் சீலையை துவைத்து , காய வைத்து மறுபடி கட்டிக்கொல்வார்கலாம்
40 அன்று பாச்சோறு (பால் சோறு –சர்கரைப் பொங்கல் போல் இருக்கும)
விநியோகம் செய்வார்கள்
“களி கிண்டி பாத்தியா “ ஷபே பராத் (விடுதலை ) இரவு வரும் நாளில் ஓதி களி எல்லோருக்கும் கொடுத்து விடுவார்கள்
புனித ரமலான் மாதம் பத்தாம் நாள்
“ரொட்டி சுட்டுப் பாதியா “ஓதி பகிர்ந்துண்பார்கள்
எங்கள் ஊரின் கைமணம் மிகப் பரவலாக அறியப்பட்டது
எங்கள் பாட்டி (அத்தாவின் அத்தம்மா ) மிகச் சிறந்த சமையல் வல்லுனி என்பார்கள் அது அப்படியே அவர் மக்கள், மருமக்கள் , என்று வாழையடி வாழையாகத் தொடர்கி.றது
எங்கள் ஊரின் எளிமையான சுவையான சமையல் பற்றி சகோ ஜோதி தன் ப்திவில் சொல்லியிருக்கிறார்
விரைவில் அது வெளியிடப்படும் இறைவன் நாடினால்
சுருக்கமாக்
இன , மத , வேறுபாடு , இருப்போர் இல்லாதோர் வேற்றுமை இவை எல்லாம் இல்லாமல் இணக்கமாக, சுமுகமாக ,எளிமையாக ,சுகமாக் . நிம்மதியாக வாழும் சமூகம் எங்கள் ஊர்
என் குறுகிய கால சொந்த ஊர் வாழ்க்கையில் அறிந்தவை, கேள்விப்பட்டவை , நினைவில் நிற்பவை , சகோ தல்லத், மெஹராஜிடம்
--இருவருக்கும் நன்றி -
கேட்டுத் தெரிந்தவை இவற்றை தொகுத்து எழுதி இருக்கிறேன்
விடுதல், பிழைகள் இருந்தால் தயங்காமல் எடுத்துச் சொல்லுங்கள்
இறைவன் நாடியால் நாளை திருமறையில், அடுத்த வாரம் சொந்த ஊரில் சிந்திப்போம்
10012024 புதன்
சர்புதீன் பீ



திரு - பள்ளிவாசல் , 
பிள்ளயார் கோயில் அருகருகே
சகோ சிக்கந்தர் அனுப்பியது 







[10:55, 11/01/2024] SHERFUDDIN P: அல்லாவும் ஆனைமுகனும் அருகருகே அடுத்தடுத்து கோயில்கொண்ட தழகழகே எல்லோரும் ஓர்குலம் தான் இகமிதிலே இந்த காட்சி எங்கும் வேண்டும் எனதுறவே நமாஸ் என்ன நாமம் என்ன பணிவதிலே நன்னெறிகள் ஊட்டத்தான் பரம்பொருளே ஆமென் சொல்லும் ஆலயத்தில் அவன்தானே அனைத்து மதமும் சொல்லுவது அன்புதானே மனிதத்தில் மதமிருந்தால் மறுப்பே இல்லை மதத்திற்கு மதம் பிடித்தால் மருந்தே இல்லை புனிதராய்த்தான் பிறப்பெடுத்தோம் பொய்யே இல்லை பொய்யுரைத்து இனம்பிரித்தார் பூசலின் தொல்லை கருவறைதான் முதல் நமக்கு கருத்து வேறில்லை கல்லறைதான் முடிவுரைக்கு மாறுபாடில்லை இருக்கும்வரை இணைந்து வாழ்வோம் இடரே இல்லை இந்து முஸ்லீம் கிறிஸ்து எல்லாம் தடையே இல்லை [10:58, 11/01/2024] SHERFUDDIN P: நீங்கள் அனுப்பிய படத்துக்கு கிடைத்த கவிதை சகோ சோமசேகர் Retd. DM canra Bank போட்டது

[09:56, 11/01/2024] Cb rtd Raviraj: மனம் குதுகலிக்கிறது…
[09:58, 11/01/2024] Cb rtd Raviraj: இன்னும் கோயில், பள்ளிவாசல் மற்றும் தேவாலயம் ஒன்னாக இருக்கும் இடங்களை காண ஆவல் …

No comments:

Post a Comment