Tuesday, 23 January 2024

சொந்த ஊர் 10 சு(சி)ற்றுலா தலமாக 24 01 2024 புதன்






 சொந்த ஊர் 10

சு(சி)ற்றுலா தலமாக
24 01 2024 புதன்
சொந்த ஊர் பற்றி நான் எழுதத் துவங்குமுன் அங்கு வாழ்த்த ,வாழ்ந்துகொண்டிருக்கும் சிலரிடம் பேசினேன்
“அந்த ஊரைப்பற்றி எழுத என்ன இருக்கிறது ?”
ஒரு சிலராவது இப்படிக் கேட்டார்கள்
எனக்கும் இது வீண் முயற்சியோ என்று லேசாக எண்ணம் அரும்பியது
அதைக் கிள்ளி எறிந்து விட்டு இறைவன் மேல் பாரத்தை சுமத்தி விட்டு எழுதத் துவங்கினேன்
இன்று பகுதி 10
இன்னும் எத்தனை பகுதி என்று இன்னும் கணக்குப் பார்க்கவில்லை
ஒரே ஒரு குறை
பெரிய அளவில் உங்கள் பங்களிப்பு வரவில்லை
இதுவரை அனுப்பியது சகோ ஷரமதா , ஜோதி , மெஹராஜ் சிக்கந்தர் என நால்வர்தான்
இவர்கள் எல்லோரும் திரும்ப தொடர்ந்து எழுதுவதாய்
சொல்ல்லியிருக்கிறார்கள்
இந்த நாலு பேருக்கு நன்றி
இந்தத் தொடரின் துவக்கப் பகுதியில் குறிப்புகள ,தகவல்கள் கொடுத்த
சகோ தல்லத் ,சிராஜுதீன் , பாடி பீர், அலியார் இவர்களுக்கும் நன்றி
இவர்கள் தொடரந்து எழுதவில்லை
இனி சு(சி)ற்றுலாபோவோம்
சுற்றுலா என்பது இன்பப் பயணம் என்பதைத் தாண்டி
சுவைப்யணம், நலவாழ்வுப் பயணம் என பல
பரிமாணங்களில் வளர்ந்து வருகிறது
எங்கள்ஊர் சிறப்புச் சுவைகள் பற்றி ஒரே தனிப் பதிவே போட்டேன்
அதில் விருந்து சிறப்பு உணவு
உணவு விடுதிகளில் சிறப்புச் சுவை
சாலை ஓர உணவகங்களின் சிறப்பு
மலைப் பயணத்துக்கான சண்ட வச்ச மொசசைக் குழம்பு எல்லாம் சற்று விரிவாகவே பார்த்து சுவைத்தோம்
விட்டுப்போன அன்றாட வீட்டுச் சமையலின் சிறப்புகள் பற்றி இப்போது சுருக்கமாக
தனிக்கறி என்பது எங்கள் ஊரின் சிறப்புகளில் ஓன்று
கறியில் எலும்புகளைக் களைந்து விட்டு தனிக்கறி என்று விலை கூடுதலாக விற்பார்கள்
எலும்பைத் தனியாக குறைந்த விலையில் விற்பார்கள்
அந்த எலும்பு சேர்த்து செய்யும் பருப்பு எலும்பு சாம்பார் மிகச் சுவையான வீட்டு சமையல்
(அதே போல எலும்புப் புளிக் குழம்பு )
(உப்புக்கண்ட சாம்பார் , உப்புக்கண்ட புளிக் குழம்பு)
( தலை, கால் குழம்பு , நுரையீரலில் செய்யும் தொக்குசா)
(அடைப்புக் குறிக்குள் இருப்பவை எனக்குப் பிடிக்காத, பிடிக்கவே பிடிக்காத சில உணவுகள்)
சைவம் என்றால்
கழனிப் புளிச்சாறு ,
புளி மிளகாய்
இவை இரண்டும் எண்ணெய் , தாளிப்பு இல்லாத மிகச் சுவையான வெஞ்சனங்கள் குறிப்பாக தயிர் சோறு, பழைய சோறுக்கு
இதில் கழனிப் புளிச்சாறு குழம்பு போலவும் பயன்படும்
எண்ணெய் தாளிப்பு இல்லாத இன்னொரு வெஞ்சனம் அட மாங்காய்
பெரிய மாங்காயை அரண்டு பக்க அலகுகளை கீறி விட்டு உப்புப் பொதிந்து ஊற வைப்பது
வயிற்றுக்கு சுவைப்பயணம்
அடுத்து மனதுக்கு
ஆன்மீகப் பயணத் தலங்கள்
ஊருக்குள் பெரிய கோயில்கள் இரண்டு
அருகில் குன்றக்குடி, பிள்லையார்பட்டி
மகிபாலன்பட்டியில் நிறைய கோயில்கள்
பிரான்மலை தர்ஹா , காட்டுபாவா பள்ளி தர்ஹா
மேரி மாதா ,தூய அந்தோணி, இம்மாகுலேட்
என தேவாலயங்கள்
அருகில் உள்ள ஒரு ஊரில் புத்தருக்கு ஆலயம் இருப்பதாக ஒரு நினைவு
ஆன்மீகம் போதும்
அடுத்து வரலாற்றுச் சின்னங்கள்
மருது சகோதரர்கள் தூக்கில் இடப்பட்டது திருவில்
ஊமைத்துரை ஒளிந்திருந்த குகை பிரான் மலையில் இருக்கிறது
மகிபாலன் பட்டிக்கு அருகில் குடகு என்றொரு இடம் , அங்கு குடைவரைக் கோயில்கள் இருக்கிறதாம்
இலக்கியம் என்றால்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று உலகளாவிய சகொதரத்துவக்கு அறைகூவல் விடுத்த
கணியன் பூங்குன்றனார் மகிபாலன் பட்டி என்ற பூங்குன்த்தைச் சேர்ந்தவர்
அந்தப்பாடலின் ஒவ்வொரு வரியும் படித்து உள்ளுணர்ந்து பின்பற்றவேண்டியவேண்டியவை
சற்றுத் தொலைவில் கண்ணதாசன் பிறந்த சிறுகூடல்பட்டி
ஆன்மிகம், வரலாறு இதெல்லாம் எனக்குத் தேவை இல்லை
போனோமா நாலைந்து நாள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருந்தோமா
இதுதான் என் நோக்கம் என்கிறீர்களா
அதற்கும் சிறந்த இடம் எங்கள் ஊர்
இது பொன்குஞ்சு கதை அல்ல
உண்மை
நூறாண்டுகள் கடந்த , கண்ணாஸ்பத்திரி என்று புகழ் பெற்ற Swedish Mission மருத்துவமனை எங்கள் ஊரின் பெருமைகளில் ஓன்று
உடல் நலத்துக்கு மிகவும் ஏற்ற இடம் என்று தெரிவு செய்யப்பட்டு அமைக்கப் பட்டது அது
(ஒரு ஆட்டுத் தொடையை திறந்த வெளியில் கட்டித் தொங்கவிட்டு அது எத்தனை நாள் ஈரம் காயாமல் இருக்கிறதோ அந்த அளவுக்கு நல்ல இடம் என்று தெரிவு செய்வார்களாம் )
எங்கள் ஊருக்குப் போகும் அனைவரும் உணர்ந்ததாக சொல்வது
நல்ல பசி, நல்ல செரிமானம் , நல்ல உறக்கம் –வேறென்ன வேண்டும் நல வாழ்வுக்கு அடையாளமாக
நீச்சல் பழக , நீந்திக் குளிக்க dive அடிக்க ஊருக்கு நடுவில் பெரிய குளம்—சீதேவி
மலை ஏறுதல் பயிற்சிக்கு பிரான்மலை
சிறுவயதில் பலமுறை ஏறி இறங்கியிருகிறேன்
பறவைகள் சரணாலயம் -
திரு-- மதுரை சாலையில் வேட்டங்குடியில்
கழுகு பிடிக்கும் காட்சி பார்க்கும் வாய்ப்பு ஒரேஒரு முறை எனக்கு கிடைத்தது
வற்றாத சீதேவி வற்றி தண்ணீர் தரை மட்டத்தில்
ஒரு குச்சியில் நடுவில் மீனைச் சொருகி இரண்டு ஓரங்களிலும் வஜ்ரப் பசை தடவி தண்ணீரில் விடுவார்கள்
மீனைபிடிக்கும் கழுகு பறக்க முயற்சிக்கையில் சிறகுகள் பசையில் ஒட்டிக்கொண்டு பறக்கமுடியாமல் போய்விடும் . எளிதாகப் பிடித்து விடுவார்கள்
இரண்டு திரை அரங்குகள்
காரைக்குடியில் நகரத்தார் வீடுகள் - பார்க்க வேண்டிய ஓன்று – குறிப்பாக சென்னை போன்ற பெருநகர வாசிகள்
வீடுகளின் உயரமும் , அலங்காரமும்
சொல்வதை விட பார்த்தால்தான் விளங்கும்
ஒரே ஒரு எடுத்துக்காட்டு
அண்மையில் ஒரு திருமணத்துக்கு காரைக்குடி போய் வந்த எங்கள் மருமகன் ஷேக்பீர் சொன்னது
வீட்டில்தான் திருமணம்
வீட்டில் உணவுக் கூடம் ம்ட்டும் 150 பேர் ஒன்றாக மேசை போட்டு அமரக்க்கூடிய அளவுக்கு
பெரிய் ய் ய து
இதில் இருந்து ஓரளவுக்கு வீட்டின் பரிமாணங்களை மனதில் வரைந்து பார்த்துக்கொள்ளுங்கள்
இன்னும் பெரிதாக இருந்த வீட்டை பராமரிக்க முடியாததால் சற்று மாற்றி
“சிறியதாகக்” கட்டியது இது என்பது கூடுதல் தகவல்
ஆண்டுக்கு ஒருமுறை குல தெய்வ வழிபாட்டுக்குக் கூடும்போதுதான் இந்த பெரிய மாளிகை பயன்படுத்தப்படும்
மற்றபடி இல்லத் திருமணங்களுக்கு
சற்றுத் தொலைவில் உள்ள கானாடு காத்தான் என்ற ஊரில் இதை விடப் பெரியதாக வீடுகள் இருக்கின்றன
அங்குள்ள செட்டிநாடு அரண்மனையில் உள்ள அறைகள் முப்பதுக்கும் மேல் என்கிறார்கள்
செட்டிநாடுகட்டிடக் கலை ,நகரத்தார் வாழ்வியலுக்கு சான்றாக விளங்கும் 150 ஆண்டுகள் கடந்த இந்த அரண்மனை பற்றி ஒரு தனிப்பதிவே எழுதலாம்
சொந்த ஊர் சு(சி)ற்றுலா தலமாக—நான் அதிகம் நினைக்காத தலைப்பு
மனதில் தோன்றியதை எழுத அது ஓரளவு நிறையவே வந்து விட்டது
ஒரு சில குறிப்புகள் தவிர்த்து எல்லாம் நினைவில் உள்ளதையே பதிவு செய்கிறேன்
இதில் மாற்றங்கள், விடுதல்கள் , பிழைகள் இருந்தால் தெரிவிக்கலாம்
இறைவன் நாடினால் நாளை திரு மறையிலும்
அடுத்த வாரம் சகோ ஜோதியின் பார்வையில் சொந்த ஊரிலும் சிந்திக்கலாம்
24012024 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment