தமிழ் (மொழி )அறிவோம்
திரைப் (பாடல்) புதிர்
பூவும் பொட்டும்
அந்தி மந்தாரை
07012024 ஞாயிறு
இது போல் இன்னொரு (திரைப்) பாடலில்
ஒரு மலரை பொட்டுக்கு உவமையாகச் சொல்லிஇருக்கிறார்
கவிஞர்
அது என்ன பூ?
எந்தப்பாடல் ?
(எந்தப்படம் ?)
இது வரை யாருமே விடை சொல்லவில்லை என்பது வியப்பான உண்மை
திரைப்பாடல்கள் , குறிப்பாக சற்று பழைய பாடல்கள் கேட்கும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது
சகோ ஹசன் அலி இலக்கியம் ,--- இறைவழி சிந்தனை என்ற பன்முகத் திறமையோடு திரைப் பாடல்களும் அவருக்கு அத்துபடி –குறிப்பாக எம் ஜி ஆர் படப் பாடல்கள்
திரைப்பாடல் வினாவுக்கெல்லாம் விடை சொல்வதா என்ற தயக்கமோ என்னமோ தெரியவில்லை
சரி நானே விடையும் சொல்கிறேன்
அந்திமந்தாரைப்பூ
பாடல் இரவினிலே என்ன நினைப்பு
படம் என் கடமை
அந்தி மந்தாரை பூப் போலே
அழகிய குங்குமம் நெற்றியிலே
படம் பார்த்த நினைவில்லை
பாடல் ஒரு இனிமையான , இரவின் அமைதியைக் குலைக்காத மெல்லிய இசையில் இனிய குரலில் ஒலிக்கும்
அந்தி மந்தாரைப் பூவை பார்த்த பிறகுதான் இந்த வரிகளின் பொருளையும் அழககையும் கவிஞரின் புலமையை யும் உணர முடிந்தது
பூவின் நிறம் மட்டும் அல்ல
மொட்டும் பார்பதற்கு நெற்றிக் குங்குமம் போலவே இருக்கும்
பொழுது மங்கி மயங்கும் அந்தி நேரத்தில் மலர்வதால் இந்தப் பெயர்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
07012024 ஞாயிறு
௦௭௦௧௨௦௨௪
சர்புதீன் பீ
No comments:
Post a Comment