Saturday, 3 May 2025

தமிழ் [மொழி]அறிவோம் தட்டுவாணி 04 05 2025 ஞாயிறு

 




தமிழ் [மொழி]அறிவோம்

 

தட்டுவாணி

  04  05   2025  ஞாயிறு

 

முதல் மூன்று எழுத்தும் வல்லினம்

முதல்  அகரம் (குறில்)

5 மெல்லினம் 

இடையில் இடைஇனம்

முதல் மூன்றுக்கு பொருள்கள் பலப் பல

அதில் ஒரு சில

குற்றம்

காவல்

அறை

 

அதே போல நிறைவு இரண்டு எழுத் து க்கும் மிகப்பல பொருள்கள்

அம்பு

நீர்

குரல் இவை ஒரு சில

 

குதிரை என்றும் இன்னொரு பொருளும் கொண்ட 

அந்த 5 எழுத்துச் சொல் என்ன

 

 

 

விடை

தட்டுவாணி

 

விடை எதுவும் வரவில்லை

 

 

விளக்கம்

தட்டுவாணி=

ஒருகுதிரைவகை; விலைமகள்.

 

எங்கள் பகுதிப்பேச்சு  வழக்கில் பெண்களைப் பெண்கள் வசை பாட மிக இயல்பாகச் சொல்லும் சொல்

அகராதியில் இகற்கு இப்படி ஒரு பொருள் இருக்கும் என்று நான் நினைத்ததில்லை 

சொல்பவர்கள், கேட்பவர்கள் யாருக்கும் இது தெரியாது என நினைக்கிறேன்

தட்டு

. தட்டு-. 1. [K. taṭṭu.]Knocking, patting, breaking; தட்டுகை. 2. Stroke,beat, rap; அடி கடைக்கட் டட்டுக்கு உரித்தாகலின்(சிலப். 3, 27, உரை).

vāṇi   n. vāṇī. 1. Word, langu-age, speech; சொல். (பிங்.) நன்கல்ல வாணிகிளத்தலடக்கி (பிரமோத். 22, 19). 2. Learning;கல்வி. துதி வாணி வீரம் (பெருந்தொ. 418). 3.Sarasvatī, as the Goddess of Learning; சரசுவதி.(பிங்.) வாணியு மல்லிமென் மலரையனும் (சீகாளத்.பு. நான்மு. 147). 4. The river Sarasvatī; சரசுவதிநதி. கங்கை காளிந்தி வாணி காவிரி . . . நதிகள் (திருவிளை. தல. 11). 5. Source of vocal sounds;நாதத்தோன்றும் இடம்.

இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை

 

 

இறைவன் நாடினால் நாளை

 ஆங்கிலத்தில்

சிந்திப்போம்

 

௦௪ ௦௫     ௨௦௨௫

  04  05  2025  ஞாயிறு

சர்புதீன் பீ

No comments:

Post a Comment