திரு மறை குரான்
தானாக உயிர் இழந்த வில ங்கினங்களை உண்பது
இஸ்லாத்தில் தடை செய்யபட்டது ஹராம் என்பது தெரியும்
பசியினால் உயிர் போகும் நிலையில் உயிரைக் காப்பாறிக் கொள்ள அப்படிப்பட்ட உணவையும் உண்ணலாம் என அனுமதிகிகபட்டதும் தெரியும்
இது போக ஒரு சிலவற்றிற்கு உயிரோடு இருந்தாலும் தன்னால் உயிர் இழந்தாலும் அவற்றை உண்ணலாம் என ஒரு குரான் வசனத்தின் அடிப்படையில் அறிஞர்கள் விளக்குகிறார்கள்
1 அந்த உயிரினங்கள் எவை ?
2 குரான் வசனம் எது ?
3 இதற்கு அறிவியல் அடிப்படையில் சொல்லப்படும் விளக்கம் என்ன ?
விடை :
படிப்பதற்கு எளிதாக மூன்று வினா க்கள்
ஆனாலும் விடை எளிய ஒன்றுதான்
1 கடல் வாழ் விலங்குகள் குறிப்பாக மீன்
2 வசனம் 5:96, 16 :14
உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
5:96
16:14. நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். 16 :14
3 அறிவியல் விளக்கம் :
1 மீன்கள் செதில்கள் வழியாக சுவாசிப்பதால் அவற்றின் குருதி ஆடு,மாடுகளின் குருதி போல கெடுதலான ஒன்று இல்லை
2 உயிர் போன மீன்களின் குருதி கொஞ்சம் கொஞ்சமாக நீரில் கலந்து விடுகின்றன
எனவே உடலில் குருதி தங்குவதில்லை
இதனால்தான் மீன்களை ஹலால் முறையில் அறுப்பதும் தேவை இல்லை
ஓரளவு சரியான விடை எழுதிய
சகோ சீராஜூதீனுக்கு வாழ்த்து பாராட்டு
விளக்கம்
கடல் வாழ் விலங்குகள் எல்லாம் ஹலாலா என்பதில் ஒத்த கருத்து இல்லை
எல்லோரும் ஒத்துப்போவது மீன்கள் என்பதில்
அதிலும் சுறா மீன்கள் பற்றி தெளிவு இல்லை
இறைவன் நாடினால் நாளைதமிழில் சிந்திப்போம்
17 துல்கq தா (11 ) 03
16 05 2025 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment