Sunday, 25 May 2025

தமிழ் (மொழி)அறிவோம் கிழிந்தது ககன முட்டை 25052025 ஞாயிறு

 





தமிழ் (மொழி)அறிவோம்

கிழிந்தது ககன முட்டை

25052025 ஞாயிறு

மூன்று சொல்லில் ஒரு பழமொழி

5+3+3=11 எழுத்துக்கள்

முதல் சொல்லின் முதல் எழுத்து வல்லின இகரம்

(குறில்)

மூன்றாவது சொல்லின் மூன்றாவது எழுத்து வல்லின ஐ

இந்தப் பழமொழி

. ஒரு வேடிக்கையான அல்லது சாத்தியமற்ற நிகழ்வை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

என்ன அந்தச் சொற்றொடர்?

விடை

கிழிந்தது ககன முட்டை

விளக்கம்

நரசிங்கம் தூணைப் பிளந்து வெளித் தோன்றி, பெரு வடிவு கொள்ளுதல்

பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும் அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்? கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும். 130

கம்பராமாயணம்/யுத்த காண்டம்/இரணியன் வதைப் படலம்

பிற்காலத்தில் வான் வெளி ஆராய்ச்சியாளர்கள்

நாம் வாழும் பிரபஞ்சத்தின்

மேல் பகுதி ஒரு மிகப்பெரிய முட்டை வடிவத்தில் இருப்பதாக கண்டறிந்தார்களாம்

இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்

உரு0ருஉ0உரு

25052025: ஞாயிறு

சர்புதீன் பீ

No comments:

Post a Comment