என்ன ஒரு அழகான ஆண்டு
இது போல் ஒரு வடிவான எண்ணுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டுமே
இந்த ஆண்டு பற்றிய என் எண்ண ஓட்டங்கள் :
இயல்புக்கு மாறான பல நிகழ்வுகள் இயல்பை திரும்பக் கொண்டு வந்தது போல் எனக்கு தோன்றியது
பயணங்கள் பல தவிர்க்கப்பட்டன .குறிப்பாக திருமணம் ,நெருங்கியவர்கள் மறைவு இதற்கெல்லாம் போக முடியாத நிலை
சில பல திருமணங்கள் ஆடம்பரம் , வீண் செலவு தவிர்த்து எளிமையாக நடந்தன
காற்று மாசு,ஒலி மாசு வெகுவாக் குறைந்தது பல புதிய பறவைகளைப் பார்க்க முடிந்தது
.மனிதர்கள் , வண்டிகள் நடமாட்டம் குறைய விலங்குகள் விடுதலை பெற்றது போல் நடமாடத் துவங்கின
நாட்டுக்குள், மாநிலத்துக்குள் பயணிக்கக் கூட கடவுச் சீட்டு வாங்க வேண்டும் .இதனால் குற்றங்கள் கட்டுப்படுத்தப் பட்டதாக சொலப்பட்டது
Childish innocence எனப்படும் குழந்தைத் தனமான வெகுளித் தனம் குழந்தைகளிடமே காணாமல் போய் விட்ட நிலை மாறி வயது வந்தோர் , கற்றோர் அறிவாளிகள் எல்லாம் குழந்தைகளாக மாறி கை தட்டி, மணியடித்து விளக்கேற்றி புத்துணர்ச்சி பெற்று மகிழ்ந்தோம்
பணிப்பெண் இல்லாமல் வீட்டு வேலைகளை சமாளித்து விடலாம் என ஒரு ஞான நிலை உண்டானது
அங்கிங்கெனாதபடி பரவி நிற்கும் இறை எனும் பரம்பொருளை வணங்க ஆலயங்கள் , தேவாலயங்கள் பள்ளிவாசல்களில் மட்டுமே இடம் இல்லை எங்கும் வணங்கலாம் என்றஒரு தெளிவு பிறந்தது
இதையும் மீறி இறை மறுப்புக் கொள்கையும் வலுப்பெற்றது
இறைவனின் ஆற்றலுக்கு முன் அறிவியல் , மருத்துவ வளர்ச்சி விளையாட்டுப் பொம்மை ஆகி நின்றது
அரசியல் பின்புலம் இல்லாமலே பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பெறலாம் என்று சான்றளித்தது எஸ் பீ பீ , மறைவு , சித்ராவின் முடிவு
தீப ஒளி திருநாள் போன்ற விழாக்களுக்கு துணிக் கடைகளில் கூடும் பெரும் கூட்டம் காணாமல் போய் விட்டது
அதல பாதாளத்தை நோக்கி நாட்டின் பொருளாதாரம் சரிவதற்கு சொல்ல ஒரு நல்ல காரணம் கிடைத்து விட்டது
அப்படியே சரிந்தாலும் ,தனி ஒருவருக்கு உணவுக்கும் உடைக்கும் தினமும் லட்சக் கணக்கில் செலவு .எட்டாயிரம் கோடி – விமானம் எல்லாம் நம் நாட்டை மிகச் செல்வச் செழிப்பாகக் காண்பிக்க முயற்சி
நாங்கள்தான் உலகுக்கே முன்னோடி என்று கூசாமல் சொல்லும் துணிவு.
அதையும் பாராட்டி தலைவணங்கும் ஒரு கூட்டம்
எல்லாவற்றிற்கும் மேலாக மிகச் செழிப்பான் அறுவடை -Bumper crop
அரசியல் வாதிகளுக்கும் ஊழல் அதிகாரிகளுக்கும்
மருந்தே இல்லாத ஒரு நோய்க்கு லட்சக் கணக்கில் பணம் வாங்கி வைத்தியம் செய்யும் மருத்துவ மனைகள் – அவற்றிற்கு துணை போகும் அரசு விதிகள்
அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவானது
இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்
2021 நெருங்கி வருகிறது
எனவே நிறைவில்லாமல் நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் 2021ல் சிந்திப்போம்
31122020thu
Sherfuddin P