Wednesday, 9 December 2020

தமிழ் மொழி அறிவோம் தாதிது தோதீது

தாதிது தோதீது

தாதிது தோதீது தத்தைத்து தோதாது துதிது தொத்தித்த தூததே - தாதொத்த துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது தித்தித்த தோதித் திதி
இது கவி காளமேகத்தின் தனிப்பாடல் ஓன்று
எல்லாச் சொற்களும் தகர வரிசையில் (த, தா , தி தீ ........) துவங்குவது இதன் சிறப்பு.
இரண்டு வினாக்கள்
இந்தப்பாடலின் பொருள் என்ன?
திரைப்படப்பாடல் ஒன்றின் வரிகள் சில ஏறத்தாழ இதே போல் இருக்கும்
அந்தப்பாடல் எது ? பொருள் என்ன ?
இறைவன் நாடினால் நாளை
விடை
காளமேகத்தின் பாடல்
காதலுக்கு தூதினால் பயன் இல்லை என்ற பொருளில்
அடிமைப்பெண்கள்,கிளி தோழி போன்ற எதுவும் காதலுக்குத் துணை போகாது என்பது போல் பாடல் அமைத்திருக்கிறார்
தாதி துதோ தீது - அடிமைப் பெண்கள் சென்று உரைக்கும் - துதோ பயன்படாதது.
தத்தை தூது ஒதாது கிளியோ போய்த் தூது உரைக்க மாட்டாது;
துதி தூது ஒத்தித்த தூததே தோழியின் தூதானது நாளைக்கடத்திக்கொண்டே போகும் தூதாயிருக்கும்
தேதுதித்த தொத்து தீது - தெய்வத்தை வழிபட்டுத் தொடர்தலும் பயனற்றதாகும்;
(அதனால்) தாதொத்த துத்தி தத்தாதே - பூந்தாதினைப் போன்ற தேமல்கள்என்மேற் படர்ந்து மிகாது;
தித்தித்தது ஒதித் திதி - எனக்கு இனிமையான தான என் காதலனின் பெயரையே நான் ஒதிக்கொண்டிருப்பேனாக,
இதே போன்ற வரிகள் கவிஞர் கண்ணதாசனின் வானம்பாடி படத்தில் ஆண் கவிக்கும் பெண்கவிக்கும் இடையே நடக்கும் போட்டியில் பெண் கவி பாடுவதாய் அமைத்திருக்கிறார் (ஆண் கவியை வெல்ல வந்த என்று துவங்கும் பாடல்)
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது
தூதி தூது ஒத்தித்தது தூது செல்லாது
தேது தித்து தொத்து தீது தெய்வம் வராது
இன்று துத்தி தத்தும் தத்தை வாழ தித்திததோது
பொருள்
அடிமை தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்பு தோழி தூது சென்றால்
விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது
நின்றால் பயன் இருக்காது
இளம் தேமல் கொண்ட கன்னி வாழ
இனியது கூறு
இரண்டு வினாக்களுக்கும் சரியான விடை கூறி சிறப்பான பாராரட்டைப் பெறுபவர்
தோழர் செங்கை சண்முகம்
தோழர் ஞாழல் மலர் காளமேகத்தின் பாடலுக்கு பொருள் கூறி திரைப்படபாடல் தெரியாது என்று சொல்லியிருக்கிறார் பாராட்டுகள்
திரைப்பாடல் பற்றி விடை சொன்ன தோழர்கள்
தெய்வசிகாமணி ஆர் சுந்தரம் , அஷ்ரப் கமீதா , நடராசன் அழகப்பன் , கரம் சந்திர மோகன் , சோமசேகர், ஜோதி, அனைவருக்கும் பாராட்டுகள்
முயற்சித்த அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
09122020wed
SherfuddinP
No photo description available.
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment