என் மக்கள் போல்கின்றீர் யார் மக்காள் “
இது எந்த இலக்கியத்தில் வரும் வரி ?
பொருள் , விளக்கம் என்ன ?
இறைவன் நாடினால் நாளை
விடை
புகழேந்திப் புலவர் எழுதிய நளவெண்பா
400க்கும் மேற்பட்ட வெண்பாக்களால் அமைந்த இந்த நூலில் நான் மிகவும் வியந்தது சுவைத்தது மிக எளிய தமிழ் நடை
அடுத்து அழகின் வருணனை
இன்பச் சுவை விஞ்சி நிற்கும் இந்த நூலின் கதை மிகச் சுருக்கமாக
தேவர்களே மயங்கும் அழகு கொண்டவர் தமயந்தி அவர் நளனை துணையாகத் தேர்வு செய்ய, அதில் சினம் கொண்ட கலி புருஷன் நளனை சூதாட்டத்தில் தோற்கடித்து நாட்டை விட்டு வெளியேற்றுகிறான் .உரு மாறிய நளன் ஒரு இடத்தில் சமையல் வேலை செய்யும்போது அவனைக் கண்டு அறிவதற்காக தமயந்தி தன் மக்களை அங்கே அனுப்பி வைக்க அவர்களைப் பார்த்து நளன்
என் மக்கள் போல்கின்றீர் யார் மக்கள்
என்று கேட்கிறான்
பாடல் இதோ
. மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிராப்
புக்கெடுத்து வீரப் புயத்தணையா - மக்காள்நீர்
என்மக்கள் போல்கின்றீர் யார்மக்க ளென்றுரைத்தான்
வன்மக் களியானை மன்.
தமிழில் புலமை பெற்று கவிதை பாட விரும்புவோர் நளவெண்பாவைப் படிக்க வேண்டும் என்று சொல்வார்கள்
தமயந்தியை வர்ணிக்கும்
நாற்குணமும் நாற்படையா , ஐம்புலனும் நல்லமைச்சா ,
போன்ற பல பாடல்கள் எளிதில் மனதில் நிற்கும்
சரியான விடை அனுப்பி பாராட்டுப் பெறும் தமிழ் அறிஞர்கள்
செங்கை சண்முகம் , அசன் அலி (விரிவான விடை )
நடராசன் அழகப்பன்
முயற்சித்த அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
30122020wed
SherfuddinP
No comments:
Post a Comment