மழையும் குளிரும்
நடுக்கும் குளிர்
இதை நான்
உணர்ந்தது சிவானில்தான் . பீகார் மாநிலத்தில் நேபாளத்துக்கு அருகில் உள்ள ஊர்
இரவில்
படுக்கும்போது கட்டிலில் ஒரு மெத்தை அதற்கு மேல் கம்பளி
கையில் காலில்
உறை.கால் முழுதும் மறைக்கும் ஒரு உள்ளாடை அதற்குமேல் கால் சராய் பனியன் சட்டை
அதற்குமேல் கம்பள உடை தலையில் கம்பளி தொப்பி மேலே போர்த்திக்கொள்ள ரசாய் எனப்படும்
ஒரு மெத்தை
இதை எல்லாம் மீறி
ஒரு குளிர்
இந்தக்குளிரிலும்
தினமும் பச்சை தண்ணீரில் குளித்தது ஒரு சுகமான் அனுபவம்
குளித்து
வரும்போதே அறைப்பையன் சூடான தேநீருடன்
வணக்கம் சொல்வார்
சூடாகக்
கிடைக்கும் காலை சிற்றுண்டி – பூரி கிழங்கு ,தேநீர் , மதியமும் இரவும் அடுப்பில்
இருந்து நேரடியாக் எடுத்து வைக்கும் சப்பாத்தி .அவ்வப்போது கிடைக்கும் எலுமிச்சை
சாறு கலந்த கருப்புத்தேநீர் எல்லாமே குளிருக்கு மிக மிக சுவையாகவும் சுகமாகவும்
இருக்கும்
சிவான் குளிரோடு
ஒப்பிட்டால் ஜலந்தர் குளிரே இல்லை என்று தோன்றியது எனக்கு .. துணைவிதான் சற்று
சிரமப்பட்டார்
குளிர் காலம்
நெருங்கி விட்டால் ஜலந்தர் பெண்கள் கம்பளி ஆடைகள் பின்னுவது ஒரு அழகான கண்
குளிர்ச்சி
பஞ்சாபி இளைஞர்கள்
குளிர் கால இரவில் வலைப்பந்து
(டென்னிஸ்) ஆடுவார்கள் நடு இரவில் ஒரு வெப்பநிலை வரும். அப்போது பனிக்கூழ்(ஐஸ்
கிரீம் ) சாப்பிட்டு மகிழ்வார்களாம் வாழ்க்கை வாழ்வதற்கே
காலையில் பள்ளி
செல்லும் எங்கள் குழந்தைகள் சற்றுத் தொலைவிலேயே கண்ணுக்குத் தெரியாமல் பனி மறைத்து
விடும்
குளிருக்கு
சிவான் என்றால் மழைக்கு திரூர் (கேரளம் ) ஜூன் முதல் நாள் எதோ குழாயை திறந்து
விட்ட்து போல மழை கொட்டத் துவங்கிவிடும் ஆனால் குளிர் இருக்காது மழை சற்று நேரம் நின்றால் கூட வியர்ப்பது போல்
இருக்கும் .இன்னொரு சிறப்பு மழை நீர் எங்கும் தேங்கி நிற்காமல் வடிந்து விடும்
குளிரையும்
மழையையும் ஓன்றாக உணர்ந்து அனுபவித்தது கர்நாடகா குட்டாவில் . கேரளா மழை எல்லாம்
மழையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆண்டுக்கு இருநூறு நாள் மழை பெய்யும்
மழைபிடிப்பு பகுதி
மழைஅளவு 39,40 செ மீ என்றுதான் சொல்கிறோம் நாம். ஆனால்
குட்டாவிலோ 20,30 அங்குலக் கணக்கு . மழையோடு சேர்ந்து குளிரும்
கடுங்காற்றும் .வீட்டுக்குள்ளேயே காலணி இல்லாமல் ஒரு அடி கூட நடக்க முடியாது
இவற்றையெல்லாம்
மறக்கடிப்பது குட்டாவின் இயற்கை எழில் . பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண மலர்கள் ,
மரம் செடி கொடிகள், பறவைகள் பூச்சிகள் வண்டின் ஒலி நாம் காண்பது கனவா என நினைக்க வைக்கும்
குட்டாவின் மழை
குளிர் எல்லாம் இப்போது கடலூரிலேயே காண்பது இறைவன் அருள்
பணி ஓய்வில் இதை
எல்லாம் நன்கு அனுபவித்து உணர முடிகிறது
க(இ)டைச் செருகல்
சிவானில் தமிழ்
நாட்டு வங்கி நண்பர் ஒருவர் என்னை இந்தக் குளிர் எல்லாம் ஒன்றும் செய்யாது என்று
வாய்ச்சொல் வீரம் காட்டி இரவு முழுதும் தூங்க முடியாமல் தவித்து அடுத்த நாள் விரைந்து ஓடி ரசாய் ,கம்பளி எல்லாம் வாங்கியது இன்றும் நினைவில் நிற்கிறது
இறைவன் நாடினால்
மீண்டும் வேறொரு பதிவில்
(சென்ற வாரம்
வந்த உமா சுசீலா -அடுத்த பகுதி அடுத்த வாரம் இறைவன் நாடினால் )
05122020sat
SherfuddinP
No comments:
Post a Comment