:செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்”
தமிழ் இலக்கியப்ப்பாடலில் வரும் ஒரு வரி
அது ஏன்ன பாடல் ?
விடை
குற்றாலக் குறவஞ்சி 18 ஆம் நூற்றாண்டில் திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய சிற்றிலக்கியம்
அதில் வரும் ஒரு பாடல்
வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்...
மந்தி சிந்தும் கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்...
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்...
கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விழைப்பார்...
தேனருவி திரையெழும்பி வானின் வழியொழுகும்...
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்...
கூனலிளம் பிறை முடிந்த வேணியலங்காரர்...
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே...
குற்றாலத்தின் இயற்கை பேரழகை மிக எளிய தமிழில் நம் கண் முன்னே நிறுத்தும் பாடல்
குறிப்பாக தேனருவி திரைஎழும்பி வானின் வழி ஒழுகும் என்ற வரி குற்றாலத்தை நேரில் கண்டு களித்தவர்களுக்கு நன்கு விளங்கும்
மற்றபடி பெரிய விளக்கம் தேவை இல்லாத எளிய நடைப் பாடல்
சரியான விடை எழுதிய தமிழ் அறிஞர்கள்
மெகராஜ் , சோமசேகர் , அசன் அலி, ஞாழல் மலர் , வழிக்கரை வடிவேலன் , பாடி பீர் முகமது ,, இதயத்
அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
23122020wed
SherfuddinP
No comments:
Post a Comment