(இரு வாரங்கள் முன்பு வெளியான பதிவின் தொடர்ச்சியாக நிறைவுப்பகுதி)
எங்கள் குடும்ப புகைப்படங்களில் இடம் பெற்ற ஒரே பணிப்பெண் மேட்டூரில் வேலை பார்த்தவர்தான் தம்பி சஹாவை தூக்கி வைத்துக்கொண்டே இருப்பார் . பெயர் அமிர்தமோ அற்புதமோ என நினைவு. எப்போதும் வெள்ளந்தியான ஒரு சிரிப்பு
அடுத்து சிதம்பரத்தில் அம்மாவும் மகளும் வருவார்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பது போல் தோன்றும் ..மகளுக்குப் பிள்ளை பிறந்த சில நாட்களில் வேலைக்கு வந்தவரை எங்கள் அம்மா நாற்பது நாள் கழித்து வரச் சொல்லி விட்டது
காரைக்குடியில் பணிப்பெண்ணும் நகராட்சி ஊழியரும் (Peon)கணவன் மனைவி. ஓயாமல் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள் . மணமுறிவு வரை போனதாக நினைவு
திருநெல்வேலியில் வேலை பார்த்த செல்லம்மாள் மிகவும் நட்புடன் பழகுவார் .திருப்பத்தூரில் நடந்த தம்பி சஹாவின் திருமணத்தில் கலந்து கொண்டார்
இன்னொரு நெல்லைப் பணிப்பெண் லட்சுமி . மறக்க முடியாத ஒருவர் எனக்கு பணி இட மாறுதல் வந்து நாங்கள் கேரளாவுக்குப் போகையில் அவரும் வந்து ஒட்டிகொண்டார் . பத்து வயது பையனை அப்படியே விட்டு எங்களோடு வந்து விட்டார் .
இரண்டு ஆண்டுகள் நல்ல பணிப்பெண்ணாக இருந்தார் மகன் பைசலுக்கு அங்குதான் பள்ளிப்படிப்பு துவக்கம.. அவனைத் தூக்கிக்கொண்டு போய் பள்ளியில் விட்டு மாலை கூட்டிக்கொண்டு வருவார் .காலையில் போய் புத்தம புதிதாக மத்தி மீன் வாங்கி வந்து விடுவார் -ஒரு ரூபாய்க்கு பத்துப் பதினைந்து கிடைக்கும்
என்ன நடந்தது என்று தெரியவில்லை . நாங்கள் எல்லோரும் விடுமுறையில் ஊருக்குப் போய் திரும்பி வரும்போது அவர் சற்று மனம் பேதலித்தது போலஇருந்தார் ..
இரண்டு ஆண்டு ஊதியம் பயணச் செலவு, கொடுத்து நெல்லை நண்பர் ஒருவருடன் ஊருக்கு அனுப்பி வைத்தோம் மிகவும் சிரமப்பட்டு கொண்டு போய் அவர் வீட்டில் சேர்த்து விட்டார்
இது ஒரு மறக்க முடியாத, சற்று கசப்பான அனுபவம்
திருச்சியில் நல்ல பணிப்பெண்கள் -குறிப்பாக சகாயம் என்பவர் ஒரு தேவை என்றால் சமையல் கூட செய்து விடுவார் . வாயைத் திறக்காமல் வேலை செய்வர் . கிருத்துமஸ் பண்டிகை அன்று கூட நிறைய பலகாரங்களுடன் பணிக்கு வந்தார் .என் துணைவி நாளைக்கு வா என்று சொல்லி அனுப்பி விட்டார்
மிக நன்றாக வேலை பார்த்த ஒரு பெண்- வீடு துடைத்தால் தரை கண்ணாடி போல் பளபளக்கும் . ஆனால் நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் – மிக நட்போடும் அன்போடும் பழகும் குடும்பம் – தெருக்கூட்டும் அந்தப்பெண்ணை நீங்கள் வைத்திருந்தால் நீங்கள் கொடுக்கும் எதையும் நாங்கள் வாங்க மாட்டோம் என்று அன்பாக மிரட்டவே அந்தபெண்ணை நிறுத்த வேண்டியதாகி விட்டது
பஞ்சாப் ஜலந்தரில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வருவார்கள் .அவர்கள் நடை உடை பாவனை எல்லாம் வசதியானவர்கள போல் தோன்றும் .ஆனால் அவர்கள் அடிக்கடி சொல்வது “நாங்கள் மிகவும் ஏழைகள் -தாராளமாக கொடுங்கள் “ என்பதுதான்
ஏறுவாடியில் நாங்கள் இருந்த பகுதியில் இருந்த அனைவரும் நல்ல வசதி படைத்தவர்கள்தான் .ஆனால் யாரும் பணிப்பெண் வைத்துக்கொள்ளவில்லை அதனால் எங்களுக்கும் பணிப்பெண் அமைவது சற்று சிரமமாக இருந்தது .
இதற்கு ஈடு செய்வது போல் வாணியம்பாடியிலும் சென்னையிலும் நல்ல பொறுப்பான் பெண்கள் அமைந்தது இறைவன் அருள்
இ(க)டைச் செருகல்
சகோ ஜோதி சென்ற பகுதி பற்ற சொன்னது போல் பணிப்பெண்கள் நம் வாழ்வில் பிரிக்க முடியாத் ஒரு அங்கமாகி விட்டார்கள் .மேலை நாடுகள் போல் பணிப்பெண் கிடைக்கத நிலையெல்லாம் இப்போது வராது . போகிற போக்கைப்பார்த்தால் வேலை இல்லாத் திண்டாட்டம் மிக அதிகம் ஆகும் போல் தோன்றுகிறது
இறக்கைகட்டிப்பறக்கும் விலை வாசியைப் பார்த்தால் நடுத்தர வர்க்கம் என்ற ஓன்று காணாமல் போய்விடும் போல் இருக்கிறது
இதுவும் ஒரு வளர்ச்சி, சாதனைதானே !
புதிர் போட்டு நீண்ட காலம் ஆகி விட்ட்து
ஒரு சிறிய எளிய வினா
ஒரு ரூபாய்க்குப் பத்து என்று வாங்கி பத்து ரூபாய்க்கு ஓன்று என்று விற்றால் லாப சதவீதம் % எவ்வளவு ?
பேனா பேப்பர் கால்குலேடர் இல்லாமல் மனக்கணக்காக போட முயற்சி செய்து பார்ப்போமா !?
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
12122020sat
SherfuddinP
No comments:
Post a Comment