Friday, 4 December 2020

உம்மி الْأُمِّيَّ

 



உம்மி الْأُمِّيَّ என்ற சொல் திருமறையில் எந்த இடங்களில் வருகிறது ? பொருள். விளக்கம் என்ன ?

விடை

நபி பெருமான் (ஸல்) அவர்களுக்கு உள்ள பல சிறப்புப் பெயர்க்ளில் ஓன்று உம்மி நபி என்பதாகும் உம்மி என்ற அரபுச் சொல்லுக்கு கல்வி கற்காதவர் என்று பொருள் இதற்கு விளக்கம்

;இஸ்ரவேலவர்கள் தாங்கள் மட்டுமே கல்வி கற்றவர்கள்  மற்ற எல்லா நாட்டவரூம்  கல்வி அறிவு இல்லாத உம்மிகள் என்ற மன நிலையில் இருந்தார்கள் .அதிலும் ஒரு உம்மி நபியாக வருவது அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஓன்று .இந்த செருக்கைத் தகர்க்கவே இறைவன் நபி (ஸல்) அவர்களை உம்மியாக்ப் படைத்தான்

திருமறை வசனங்கள் 7;157, 7:158 இரண்டிலும் உம்மி நபி என்ற சொல் வருகிறது .

சுராஹ் ஜும்மா போன்ற  வேறு சில இடங்களிலும் உம்மி என்ற சொல் வருகிறது . ஆனால் அது நபியைக் குறிக்கும் சொல்லாக வரவில்லை

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

04122020 fri

SherfuddinP

No comments:

Post a Comment