“லக்கேஜுகள்
பாசஞ்சர்களின்
ஓன் ரிஸ்கில்”
இந்தத் “தமிழ்” அறிவிப்பு பற்றி செய்தி பின்னால்
காதர் அம்பலம்
இது எங்கள் ஐயா (அத்தாவின் அத்தாவின்) பெயர் முனுசு அம்பலம் என்ற பட்டப்பெயருடன் ஊரை ஆண்ட அவரைப்பற்றி அறிந்த செய்திகள் வெகு சிலவே
எங்கள் அத்தா அண்ணாமலையில் ஹானர்ஸ் பட்ட நிறைவுத் தேர்வு எழுதும்போதே
எங்கள் ஐயா தனது அறுபதாவது வயதில் காலமாகி விதவே எங்கள் குடும்பத்தில் யாரும் அவரைப் பார்த்ததில்லை
நேர்மை கண்டிப்பு ஒழுக்கம் இவைதான் எங்கள் ஐயாவின் அடையாளங்கள்
அதற்கெல்லாம் மேல் சுத்தம் சுத்தம் சுத்தம்
சிங்கப்பூரின் சுத்தம் பற்றி பழுத்த இலை கூட உதிரத் தயங்கும் என்பார்கள்
அதே போல் எங்கள் ஐயா முன்பு யாரும் இருமவோ,தும்மவோ செருமவோ தயங்குவார்களாம்
எங்கள் ஐயாவைப் பற்றி தெரிந்ததை விட ஐயாவின் அம்மா அதாவது எங்கள் பாட்டி பற்றி பலருக்கும் தெரிந்திருக்கிறது
நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த பாட்டி வாழ்நாள் முழுதும் சுறுசுறுப்பாக தேனீ போல் உழைத்துக்கொண்டே இருப்பாராம் அவர் போல் சுவையாக சமைக்க இனி ஒருவர் பிறந்து வரவேண்டும் என்று எங்கள் பெரியத்தா சொல்வாரம் .பல பேத்திமார்களுக்கு பேறுகாலம் பார்த்த சிறப்பும் பெற்றவர்
பாட்டிதான் ஐயாவுக்கு சாப்பாடு வைப்பது போன்ற பணிவிடைகள் செய்வராம் பாட்டியின் சுத்தம் , நறுவிசுதான் ஐயாவுக்கு ஒத்து வருமாம்
இதற்காகவே எங்கள் பாட்டி தன் மகன் வாழ்நாள் முழுதும் தானும் இருக்கவேண்டும் என்று இறைவனிடம் கேட்பாராம்
ஐயாவின் நீதி,நேர்மை பற்றிய ஒரு நிகழ்வை நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன் . இருந்தாலும் நல்ல செய்திகளை திரும்பக் கேட்பது நல்லதுதானே . அதனால் திரும்பவும் எழுதுகிறன்
ஊராரின் வழக்குகளை கேட்டு நீதி வழங்கிக் கொண்டிருந்த எங்கள் ஐயா மேல் ஒரு புகார் வருகிறது
உடனே தன் இருக்கையை விட்டு இறங்கிய எங்கள் ஐயா அந்த இடத்தில் தகுதியான வேறொருவரை உட்கார வைத்து தன் மேல் குற்றம் எதுவும் இல்லை என்று உறுதியான பின்பே அந்த இருக்கையில் உட்கார்ந்தாரம்
ஐயாவுக்கு மூத்தவர்கள் நீதி வழங்கும் நிலையில் இருக்கும்போது கூட கொஞ்சம் சிக்கலான வழக்குகள் வந்தால் காதர் அம்பலத்தை கூட்டி கொண்டு வா என்று ஆள் அனுப்புவார்களாம்
ஊர் மக்களிடையே நிறைந்த செல்வாக்குப் பெற்றிருந்த எங்கள் ஐயாவை யாரவது கொஞ்சம் தரக் குறைவாக பேசினால் பொது மக்கள் பொங்கி எழுந்து விடுவார்களாம்
அதிகம் பேசாத எங்கள் ஐயா சிரமமான வேலை ஏதும் சொன்னால் கூட எங்கள் அத்தாவும் பெரியத்தாவும் மிக உற்சாகத்துடன் செய்வார்களாம் – அத்தா நம்மிடம் பேசிவிட்டார் என்ற மகிழ்ச்சியில்.
மதுரை தேவகோட்டை இடையே பேருந்து சேவை அந்தகாலத்தில் எங்கள் மூதாதையர்கள் நடத்தினார்களாம் . சக்கரங்கள் கல்லினால் ஆனவை..
சிறிய உதிரிப்பாகம் தேவைப்பட்டாலும் லண்டனைத் தொடர்பு கொண்டுதான் கேட்க வேண்டும் . லண்டனிலிருந்து அவர்கள் பம்பாய்க்கு அனுப்பி அங்கே போய் வாங்கி வர வேண்டும்
வாங்கியது பழைய பேருந்து. அதில் இது போல் அடிக்கடி செலவு வரும்
அந்தப் பேருந்தில் காணப்படும் அறிவிப்புதான் இந்தப்பதிவின் துவக்கத்தில் இருப்பது
“லக்கேஜுகள்
பாசஞ்சர்களின்
ஓன ரிஸ்கில்”
பூலாங்குறிச்சி சிற்றூரை எங்கள் ஐயா வெள்ளைக்காரர்களிடம் குத்தகைக்கு எடுத்ததாகவும் ஒரு செய்தி
ஐயாவுக்கு மூன்று ஆண் குழந்தைகள் மூன்று பெண் குழந்தைகள்
சாகுல் அமீது அம்பலம் – எங்கள் பெரியத்தா
எங்கள் அத்தா பீர் முகமது – கமிஷனர் பீர் முகமது என்றே அறியப்பட்டதால் அம்பலம் என்று யாரும் சொல்வதில்லை எங்கள் அத்தாவை சின்ன துரை என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்
அடுத்து சையது அம்பலம் எங்கள் சச்சா –அம்பலம் என்ற சொல்லை தன் பெயர் கையொ.ப்பத்தில் வாழ்நாள் முழுதும் கட்டிக்காத்தவர்
பெண்களில் மூத்தவர் மைவாலம்பட்டி (மகிபாலன் பட்டி) பாத்துக்குப்பி
அடுத்து கோட்டைஇருப்பு அமீர் குப்பி
ஜமீலாக் குப்பி
சச்சா சையது அமபலம் தான் கடைக்குட்டி
ஐயாவின் துணைவி (அத்தம்மா ) மீராம்பீவி பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்
ஐயாவின் பெற்றோர்
பீர் முகமது அம்பலம் – சையது அம்மாள்
உடன்பிறப்புகள் இரண்டு (தம்பிகள் )
சையது அம்பலம் -
முகமது மீரா அம்பலம் ஜவஹர்லால் நேரு திருப்பத்தூருக்கு வந்த போது அவருக்கு மாலை அணிவித்தவர் .இதற்கெல்லாம் சான்றாக ஒரு புகைப்படம் கூட இல்லை
மூன்று சகோதரர்களும் தங்கள் மகன்களுக்கு
பீர் முகமது என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்
காதர் அம்பலம் மகன்- எங்கள் தந்தை பீர் முகமது
சையது அம்பலம் மகன் – சச்சா பாடி பீர் முகமது
முகமது மீரா அம்பலம் மகன் எம். பீர் முகமது (எம்.பீ)சச்சா )
க(இ)டைச் செருகல்
இந்தப்பதிவு எனக்கு சற்றுப் புதுமையானது .எல்லாத் தகவல்களும் கேள்விபட்டவை – நான் அறிந்தது அல்ல. இருந்தாலும் வாழ்வாங்கு வாழ்ந்த எங்கள் ஐயா பற்றி யாருக்கும் எதுவும் தெரியாமல் போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் தெரிந்தவற்றைப் பதிவு செய்கிறேன்
அத்தா சொன்னவை சில .
எங்கள் பெரியத்தா மகன் ஜமால் அண்ணன் ,தல்லத், பாடி பீர் சச்சா, அமீர் குப்பி மகன் அஜ்மீர் , ஜமிலாக்குப்பி மகள் சர்மதா இவர்களிடமிருந்து பெற்றது பல என்று கிடைத்தவற்றைத் தொகுத்து எழுதியிருக்கிறேன்
தகவல் கொடுத்துதவிய அனைவருக்கும் நன்றி
விடுதல்கள்,தவறுகள் இருந்தால் தெரிவிக்கலாம்
நிறைவாக போன பதிவு போல ஒரு சிறிய புதிர்- மனக்கணக்கு
ஓன்று பத்து ரூபாய்க்கு வாங்கி பத்து ஒரு ரூபாய்க்கு விற்றால் இழப்பு (நஷ்டம் ) எத்தனை %
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
19122020sat
SherfuddinP
,
No comments:
Post a Comment