சூராஹ் மர்யம்
திரு மறை குர்ஆனில் ஒரு நபியின் தாயின் பெயரில் உள்ள சூரா எது ?
மிக எளிய வினா . விடை பலருக்கும் தெரியும்
சூரா19 மர்யம் (மேரி)
நபி ஈசா அவர்களின் தாய்
இந்த எளிய விடையில் பல செய்திகளும் கருத்துகளும் நிறைந்துள்ளன
அவற்றை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்
குர்ஆனில் பெயரால் குறிப்பிடப்படும் ஒரே பெண் மரியம்
பெருமானார் ஸல் அவர்களின் தாய் பற்றி குர்ஆனில் எந்தக் குறிப்பும் இல்லை.
பெருமானார் அவர்கள் பெயரே குர்ஆனில் 4 முறைதான் வருகிறது
மரியம் என்ற பெயர் 34 முறை வருகிறது இந்தப்பெயர்
நபி ஈசா பற்றி சொல்லும்போதெல்லாம் பெரும்பாலும் மரியமின் மகன் ஈசா என்று குர்ஆனில் வருகிறது
பைபிளின் புதிய ஏற்பாட்டில் வருவதை விட குர்ஆனில் மரியமின் பெயர் அதிகமாக மிக கண்ணியமாக வருகிறது
Prof Garry Miller கனடாவில் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். சிறந்த மத போதகர் .இசுலாமில் உள்ள குறைகளை கண்டு பிடிக்க குரானை ஆழ்ந்து படித்தவர் .
இசுலாம் ஒரு சத்திய வழி என்பதை உணர்ந்து அப்துல் அஹத் என்ற பெயருடன் இசுலாத்தில் இணைந்தவர் அவருடைய மன மாற்றத்திற்கான காரணங்களில் ஒன்று மர்யம் சூரா
மேலே நான் சொன்னவை எல்லாம் குறிப்புகள் மட்டுமே. விவரித்து எழுதினால் நிறைய வரும்
சரியானா விடை எழுதி பாராட்டைப் பெறுபவர்கள்
சகோ இ ச பீர் முகமது, ஹசன் அலி,ஷிரீன் பாருக், , பர்வேஸ் , மெகராஜ், அஷ்ரப் ஹமீதா
சிறப்பு பாராட்டு சகோ ஞாழல் மலருக்கு
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
25122020 fri
SherfuddinP
No comments:
Post a Comment