திருமறை
குர்ஆனில் முதல் சஜ்தா சூராஹ் எது ?
விடை
முதலில் சஜ்தா
பற்றி ஒரு சிறு விளக்கம்
இசுலாமிய இறை
வணக்கத்தில் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய
நிலைகளில் ஓன்று நெற்றி நிலத்தில் படும்படி வணங்கும் சஜ்தா நிலை எனபது
இந்தக்கட்டாயா
சஜ்தா தவிர திருமறையில் சஜ்தா என்ற சொல் வரும் சில இடங்களில் இறைவணக்கத்தில்
உள்ளவர்களும் குரானை படிப்பவர்களும் உடனே சஜ்தா நிலைக்குப் போய் அந்த நிலையில்
சிலவற்றை ஓதி விட்டு திரும்ப பழைய நிலைக்கு வருவது மிகவும் நன்மை தரும் செயலாகும்
இது போன்ற சஜ்தா
என்ற சொல் வரும் 14c குரான் சூராக்கள் சஜ்தா சூராக்கள் என்று
சொல்லப்படுகின்றன .
அவற்றுள்
முதலாவது அல் அரப் என்ற ஏழாவது சூராவாககும் . இந்த சூராவின் நிறைவு வசனம் எண் 206 ல் சஜ்தா என்ற சொல் வருகிறது
சஜ்தா நிலை
யோகாசனங்களில் ஒன்றான பாலாசனதுக்கு ஒப்பானது .மூளைக்கு தேவையான அளவு குருதி
பாய்ந்து உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெரும்
சரியான் விடை
எழுதிய
சகோ. பர்வேஸ் ,
சிராஜுதீன் , மெஹராஜுக்கு
வாழ்த்துக்கள்
,பாராட்டுகள் நன்றி
இறைவன் நாடினால்
மீண்டும் சிந்திப்போம்
11122020fri
Sherfuddin P
No comments:
Post a Comment