எளிய நல வாழ்வுக் குறிப்புகள் பகுதி 2
(08012022ல் வெளியான பதிவின் தொடர்ச்சி )
முதலில் ஒரு வினா- தண்ணீருக்கு அடுத்து உலகமெங்கும் அருந்தப்படும் பானம் எது ?
இதற்கான விடையை நிறைவுப்பகுதியில் பார்ப்போம்
இன்றைய பகுதியில் பார்வைத்திறன், காற்று முத்திரை ,இன்னும் சிலவற்றைக் குறிப்பிட்டுப் பார்ப்போம்
ஆழ்ந்த தூக்கம்
இதற்கு மிக எளிய முறை ஓன்று இருக்கிறது .படுக்குமுன் ஒரு சில துளிகள் தேங்காய் எண்ணெய் இரு உள்ளங்கால்களில் நன்றாகத் தேய்த்துக் கொள்ளுங்கள் .
நினைவிருக்கட்டும் ஒரு சில துளிகள் எண்ணெய் போதும்
பார்வைத் திறன் மேம்பாடு
கண் கண்ணாடி என்பது பள்ளிச் சீருடையின் ஒரு பகுதி போல ஆகிவிட்டது .துவக்கப்பள்ளி மாணவர்கள் கூட கண்ணாடி அணிவது மிகவும் அதிகமாகி விட்டது
சில எளிய பயிற்சிகள் மூலம் பார்வையைப் பாதுகாக்கலாம்
முதல் பயிற்சி
சூரியக் கதிர்கள் அதிகம் இல்லாத சூரியன் உதயமாகும் காலை நேரம் அல்லது சூரியன் மறையும் மாலை நேரத்தில் சூரியனை நோக்கி நிற்க வேண்டும் .
கண் இமைகள் மூஒடியிருக்க வேண்டும் .ஆனால் கண்ணை இறுக்கமாக மூடக்கூடாது
இதே நிலையில் கழுத்தை மெதுவாக வலது புறமும் இடது புறமும் திருப்பவேண்டும்
நூறு முறை செய்தால் போதும்
சூரியக் கதிர்கள் நம்முள்ளே பாய்ந்து கண் பார்வையை ஒளிரச் செய்வதை மனதால் உணர வேண்டும்
இதை அடுத்து உடனே
அடுத்த பயிற்சி
தரையில் அல்லது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இதை செய்ய வேண்டும்
கண்கள் திறந்து இருக்க வேண்டும்
கைகளை கிண்ணம் போல் குவித்து கண்கள் மேல் வைத்து மூட வேண்டும் . கண்கள் திறந்து இருந்தாலும் வெளிச்சம் எதுவும் தெரியாமல் இருட்டாக இருக்க வேண்டும் . அந்த அளவுக்கு கைகளால் கண்களை மூட வேண்டும் .கையின் வெப்பத்தை கண்கள் உணர வேண்டும்
முழுதும் கருப்பான ஒரு கரும்பலகையை பார்ப்பது போல் நினைத்துக்கொள்ள வேண்டும்
இது மூன்று, நான்கு நிமிடங்கள் செய்யலாம் படம் பார்க்கவும் )
இரண்டும் சேர்ந்து ஒரு பத்து நிமிடம் கூட ஆகாது . சிறு வயதில் – ஒன்பது பத்து வயதில் இந்தப் பயிற்சியைத் தொடங்கி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
பயிற்சி என்னமோ மிகவும் எளிதுதான் , ஆனால் பரபரப்பான காலை மாலை நேரங்களில் சூரியனைபார்த்துக் கொண்டு நிற்க முடியுமா என்ற ஒரு வினா எழும் .
அப்படி நேரம் கிடைக்காது என்று நினைத்தால் கண்ணாடி வேண்டுமா வேண்டாமா என்பது உங்கள் விருப்பம்
காற்று (வாயு) முத்திரை
உங்கள் ஆட்காட்டி விரல் (index finger) நுனி அதே கையில் உள்ள பெருவிரலின் அடிப்பாகதைத் தொடட்டும் .
பெருவிரல் ((thumb) ஆட்காட்டி விரல் மீது லேசாக அழுத்தட்டும்
அப்படியே கைகளை உங்கள் தொடைகள் மேல் வைத்துக்கொள்ளுங்கள் உள்ளங்கை மேல் நோக்கி(facing upward ) இருக்க வேண்டும் உடலும் மனதும் அமைதியாக இருக்கும்படி உட்காருங்கள்
அவ்வளவுதான் வாயு முத்திரை
இவ்வளாவு எளிமையான இந்த முத்திரையால்
தீரும் நோய்கள்
காற்று (வாயு) தொடர்பான பல நோய்களை சரி செய்கிறது
வயிறு ஊதிக்கொள்ளுதல், அதனால் உடலெங்கும் ஏற்படும் ஒரு விதமான அசௌகரியமான உணர்வு
செரியாமை, அமில எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான பல் நோய்கள் சரியாகின்றன
இஞ்சி சுக்கு கடுக்காய்
சாப்பிடுவது உடல் நலம், இளமையைக் காக்கும் என்கிறது சித்தர் பாடல் ஓன்று
இதில் மிகவும் கவனிக்க வேண்டியது
இஞ்சியில் தோலை நீக்கி விட் வேண்டும்
கடுக்காயில் விதையை நீக்கி விட வேண்டும்
இஞ்சித் தோலும் கடுக்காய் விதையும் நஞ்சு என்பார்கள்
பேரிச்சம் பழம், பாதாம் , தேன் இவை உடலுக்கு வலுவூட்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
வேர்க்கடலை (ground nut) ஊட்டச் சந்து நிறைந்த ,ஓரளவு மலிவான விலையில் கிடைக்கும் பண்டம் . சிறிது வெல்லம் சாப்பிட்டால் கடலையினால் உண்டாகும் பித்தம் சரியாகும்
இந்தப்பகுதியில் சொன்ன குறிப்புகள் பலவும் ஏற்கனவே விரிவாக தனித்தனியாக நான் எழுதியவை
அதனால்தான் சுருக்கமாக எழுதியிருக்கிறேன் . அப்படியும் நீண்டு கொண்டே போகிறது
எனவே இந்த அளவோடு இதை நிறைவு செய்து விட்டு தேவைபட்டால் அடுத்த பகுதியில் பல் , தலை முடி, மன அழுத்தம், நினைவுத்திறன் போன்ற பலவும் பற்றி எழுத எண்ணுகிறேன்
நிறைவு செய்யுமுன் துவக்கத்தில் கேட்ட வினாவுக்கு விடை :
உலக அளவில் தண்ணீருக்கு அடுத்து அதிகமாகப் பருகப்படும் பானம்
தேநீர்(டீ) . கருப்புத் தேநீர் , பால் தேநீர் , பச்சைத் தேநீர் என பல விதமாகப் பருகப்படும் தேநீருக்கு மூலப்பொருளான , தேயிலை பற்றி காதில் விழுந்த ஒரு தகவல்
: தேயிலைத் தோட்டத்துக்கு வேலி தேவையில்லையாம் . ஆடு, மாடு, காட்டெருமை, யானை என எந்த விலங்குமே தேயிலையை உண்ணாதாம் . காரணம் அதில் உள்ள ஒரு வேதிப்பொருள்
இறைவன் நாடினால் மீண்டும் நலவாழ்வில் சிந்திப்போம்
15012022சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment