பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதோ அறுவடை செய்வதோ இல்லை ------------.ஆனால் தேவன் (இறைவன் ) அவற்றைப்பதுகாக்கிறார்
“நீங்களோ (மனிதர்கள் ) பறவைகளைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள் ------
எதை உண்போம் ,எதைக்குடிப்போம் --------குறித்துக் கவலைப்படாதீர்கள் --------அவை உங்களுக்குத் தேவை என உங்கள் தந்தைக்கு (இறைவனுக்குத்) தெரியும் (
(லூக்கா12 )
இது ஒரு புகழ் பெற்ற பைபிள் வசனம்
இந்தக் கருத்துடைய திருமறை குரான் வசனம் எது ?
விடை
சூராஹ் 29 அந்கபூத் ( சிலந்தி )வசனம் 60
விலங்குகள் எதுவும் தம் உணவைச் சுமந்து திரிவதில்லை
ஏக இறைவன்தான் அவற்றிற்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான்
அவன் எல்லாவற்றையும் செவியுறுகிறான் . அவன் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன் (குரான் 29:60)
சரியான விடை அனுப்பிய
சகோ
ஹசன் அலி (முதல் சரியான விடை )
முத்தவல்லி அக்பர் அலி
இருவருக்கும்
வாழ்த்துகள் பாராட்டுகள்
சுராஹ் ஹூத் வசனம் 6
“பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றிற்கு உணவளிப்பது இறைவன் பொறுப்பாகும் -------“(குரான் 11:6)
பைபிளும் ,குரானும் சொல்லும் கருத்து
அற வழியில் போராடும்போது, பயணம் செய்யும்போது, இடம் பெயர்ந்து செல்லும்போது உணவு, உடை இருப்பிடம் போன்றவற்றை ஏக இறைவன் பார்த்துக்கொள்வான் .
அவன் உங்கள் தேவைகளை நன்கறிந்தவன் .
எனவே உங்கள் முழு கவனம் அற வழி வெற்றியில் இருக்கட்டும்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
13012022 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment