மயிலும் அலறிடும் ஆந்தை பகலிற்
துயிலாது கூவும் !மிகவும் ஒயிலாய்க்
குயில் கீச்சுங்குருவி பேசும் !வெயிலில்
பயிலாக் கிளியகவும் !
இந்தப்பாடலில் குறை/ சிறப்பு என்ன ?
விடை
மேலோட்டமாகப் படித்தால் தவறான பொருள் தரும் இந்தப்பாடல்
கடை மொழி மாற்று அணியில் அமைந்துள்ளது
ஈற்றடியின் ஈற்றுச் சொல்லை (அதாவது பாடலின் இறுதிச் சொல்லை ) பாடலின் முதல் சொல்லாகக் கொண்டு பொருள் காணும் அணியாகும்
---அணி என்பது பெண்ணுக்கு அணி (நகை ) போல கவிதைக்கு அழகூட்டும் சொல் அலங்காரம் என்று எளிமையாகப் புரிந்து கொள்ளலாம் -----
அகவும் என்ற இறுதிச் சொல்லை முதலில் கொண்டு வந்து அகவும் மயிலும் என்று படித்தால் பொருள் சரியாக வரும்
நல்ல தேர்ச்சி பெற்ற புலவர்கள் மட்டுமே இதுபோல் பாடல் வடிக்க முடியுமாம்
கவி காளமேகம் இந்த அணியில் சில பாடல்கள் இயற்றியுள்ளார்
நான் சொன்ன மயிலும் என்ற பாடல் விவேக் பாரதி பக்கம் என்ற முகநூல் பக்கத்தில் வெளியானது
அவர்களுக்கு என் நன்றி
சரியான விடை எழுதியவர்கள்
சகோ
ஹசன் அலி – முதல் சரியான விடை –இவர் கொண்டு கூட்டுபொருள்கோள் அணி என்றும் ஒரு விடை கொடுத்திருக்கிறார் .
கரம்
இருவருக்கும் வாழ்த்துகள் . பாரட்டுகள்
சற்று சிரமமான வினா . இருந்தாலும் ஆர்வத்துடன் முயற்சி செய்து விடைக்கு அருகில் வந்து விட்ட அனைவருக்கும் நன்றி .
அவர்கள்
சகோ
ரவிராஜ் , மெஹராஜ் , ,ஷர்மதா.
,தல்லத்,,அஷ்ரப் ஹமீதா, ,,சிவசுப்ரமணியன், ,
கிரசன்ட் சேக்
சிறப்பு நன்றி சகோ கணேசன் சுப்ரமணியனுக்கு- தாயைப் பிரிந்த சில நாட்களிலேயே தாய் மொழி ஆர்வம்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௧௨௦௧௨௦௨௨புதன்
12012022
சர்புதீன் பீ
No comments:
Post a Comment