Friday, 7 January 2022

எளிய நலவாழ்வுக் குறிப்புகள்

 





எளிய நல வாழ்வுக் குறிப்புகள்

 

அக்குபஞ்சர், யோகா, வர்மக்கலை , பஞ்சகர்மா ,நினைவுத் திறன் மேம்பாடு என பல படிப்புகள் படித்து தேர்ச்சி பெற்றிருக்கிறேன் .

இருந்தாலும் சில நடைமுறைச் சிக்கல்களால்   மருத்துவக் குறிப்புகள் எதுவும் நான் பதிவு செய்வதில்லை .

குறிப்பாக சில நுட்பமான செய்திகளை புரியும்படி சொல்வதில்,அதைப் புரிந்து கொள்வதில் உள்ள பிரச்சினை

 

முத்திரைகள் பற்றி அவ்வப்போது எழுதுகிறேன் .- ஏனென்றால் அதில் மருந்துகள் , யோகா  போன்ற உடல் வளைத்தல்,, கருவிகள் , உணவுக்கட்டுப்பாடு எதுவும் தேவை இல்லை

 

இப்போது நான் எழுதப்போவதும் அது போல் மிக எளிய குறிப்புகள்தான் .பெரும்பாலும் நம் முன்னோர்கள் வாழ்வில் நடை முறையாகக் கொண்டவைதான்

 

உள்ளே நுழையுமுன்

 

உங்களைப்பற்றி சில சொற்கள்

 

நீங்கள் ஒரு மிகச் சிறந்த மருத்துவர்

உங்கள் உடல் , உங்கள் மனம் பற்றி உங்களுக்குத்தானே நன்றாகத் தெரியும் .உங்கள் உடல் காட்டும் குறிப்புகளை நீங்கள் புரிந்து கொண்டு செயல்பட்டால் பெரும்பாலான உடல் பிரச்சினைகள் சரியாகி விடும்

 

பசித்தால் சாப்பிடவேண்டும் . தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க வேண்டும் தூக்கம் வந்தால் தூங்க வேண்டும் . சாப்பாடு எத்தனை கலோரி, இதில் கொழுப்புச் சத்து இருக்கிறதா , தண்ணீர் எப்போது எவ்வளவு குடிக்க வேண்டும்  இதெல்லாம் எடுத்துச் சொல்ள மருத்துவர் , ஊட்டச் சத்து நிபுணர் , இவர்கள் எல்லாம் தேவை இல்லை

 

அது போல் படுக்கும்போது வலது பக்கமா, இடது பக்கமா , தலையணை வேண்டுமா,  நடைபயிற்சி நேரகவா எட்டுப்போட்டா  இதில் எல்லாம் குழப்பமே தேவை இல்லை . உங்களுக்கு எது எளிதாக, வசதியாக இருக்கிறதோ அதைச செய்யுங்கள்

 

உணவு பற்றி எவ்வளவு குழப்பங்கள் !

 

காலையில் ஒரு சொம்பு தண்ணீர் (பல் விளக்காமல் ) குடித்தால்   எந்த நோயும் அண்டாது என்பார் ஒருவர்

 

உடனே வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் வயிற்றுக் கோளாறு வரும் என்பார் இன்னொருவர்

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்காதீர்கள் என ஒரு குரல் வரும்

 

 வெந்நீர் மட்டுமே குடிக்கவேண்டும் என்று ஒருவர் சொன்னால்

அது உயிரற்ற நீர் ,குடிக்கக் கூடாது என மற்றொருவர்

 

முட்டை முழு சதது உணவு

முட்டை மஞ்சள் கரு கெடுதல்

வெள்ளைக்கரு கெடுதல்

முட்டையே சாப்பிடக் கூடாது

என பல மாறுபட்ட கருத்துக்கள்

 

 

இதே போல் காபி, தேநீர் , பச்சைத் தேநீர் , அசைவ உணாவு , எல்லாவற்றிலும் குட்டையைக் குழப்புவார்கள்

 

இந்த வரிசையில் அண்மையில் நான் கண்டது

காலையில் இட்லி , தோசை சாப்பிடக் கூடாது  என்பது

 

இந்தக் குழப்பங்களுக்கு ஒரே தீர்வு – உங்கள் மனம், உங்கள் முடிவுதான் .திரும்பவும் சொல்கிறேன், - நீங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த மறுத்தவர்

 

 

இனி குறிப்புகள்

 

சின்ன வெங்காயம்

இதை பச்சையாக் மோர் சோறில் கலந்து சாப்பிட்டால் குருதி தூய்மை ஆகும் . .நுண்ணுயிர்  தாக்கம்  கட்டுப்படும் குருதிக் கொதிப்பு போன்ற பல பிரச்சினைகள் சரியாகும்

 .சாப்பிட்டு முடித்தவுடன் சில இனுக்குக்ள ஏலக்காயை மென்று விட வேண்டும்

இது பற்றி நான் பலரிடசொல்லியிருக்கிறேன். பெரும்பாலும் செய்ய மாட்டார்கள்

சோறு சாப்பிடும் பழக்கம் இல்லை , சின்ன வெங்காயம் வாங்குவதில்லை , மோர் சோறு சாப்பிடுவதில்லை –இ[ப்படி பல சாக்குப்போக்குகள்

 

சோறு

சோறு ஒரு தவறான உணவு, தவிர்க்கப்பட வேண்டிய ஓன்று என்ற கருத்து பரவலாக இருக்கிறது . சோறு என்ற சொல்லே சற்று நாகரீகம் இல்லாத ஒன்றாக நினைக்கப்பட்டு . சாதம் , ரைஸ் போன்ற சொற்கள் இடம் பெறுகின்றன

 

சோறு நமது அடிப்படை உணவு (staple diet ) .உடல், மன நலத்துக்கு இது தேவை .மோர் சோறும் வயிறு வாய்க்கு  நல்லது

 

இயற்கை உணவு, பழ,உணவு  சிறு தானிய  உணவு,முளை கட்டிய பயிறு,  கற்கால உணவு (பேலி யோ டயட் ) எல்லாம் சாப்பிடலாம் – அவ்வப்போது – வாரம் ஓரிரு வேளை – என்று ஒரு மாறுதலுக்காக சாப்பிடலாம்

இதே போல் பர்கர் ,பிட்சா புரோட்டா எல்லாம் எப்போதாவது  சாப்பிடலாம்

 

அடிப்படை உணவு  காலை இட்லி, தோசை , சட்னி சாம்பர் , மதியம் சோறு குழம்பு மோர் , ரசம் , இரவு சோறோ சிற்றுண்டியோ இருக்கவேண்டும்

 

 

இயற்கை அழைப்பு (

 

இயற்கை அழைப்பு (call of nature) ஒழுங்காக, சரியாக் இல்லை என்பது பலபேர் சொல்வது . இயற்கையை விட்டு நாம் விலகி விட்டோம் . அது நம்மை விட்டு விலகிப் போகிறது

உணவில் கீரை, காய்கறிகள் , கருணைக்கிழங்கு இதெல்லாம் சேர்த்துக்கொண்டால் நல்லது

 

கொய்யாப்பழம், அத்திப்பழம் வயிற்றை சரி செய்யும்

 

ஓன்று இரண்டு நாட்கள் வரவில்லையா – விட்டு விடுங்கள் . ஒரேடியாக முயற்சித்தால் அது மன அழுத்தமாகி பல நோய்களை உண்டாக்கும்

காற்று முத்திரை (வாயு முத்திரை) செய்து பார்க்கலாம்

படுக்கை அறை அருகிலேயே ஒய்வு அறை ( attached bath room)  தேவை அற்றது என்பது என் கருத்து

 

 

தூக்கம்

 

இரவு பத்து மணிக்குத் தூங்கி ,காலை ஐந்து மணிக்கு எழுந்தால் நல்லது என்று சொன்னால் அடிதான் விழும் . .இரவுப் பணி ஆற்றும் காவலர்கள், மென் பொருள் பணியாளர்கள் , ஓட்டுனர்கள் – இவர்களுக்கெல்லாம் இரவு கண் விழித்தல் தவிர்க்க முடியாத் ஓன்று .

இதை எல்லாம் தாண்டி சும்மாவே இரவு ,நடு  இரவு அதிகாலை வரை தூங்காமல் தொலைக்காட்சி, கைப்பேசி பார்ப்பது உடல் நலத்தை மிகவும் சீர் குலைக்கும்

 

நல்ல பசி, நல்ல தூக்கம் ,நல்ல குடும்ப உறவு , எளிதான காலைக்கடன்

இவையெல்லாம் நல்ல உடல் நலத்தின் பொதுவான அறிகுறிகளில் சில

 

பார்வைத்திறன் பயிற்சி, மன நலப் பயிற்சி, காற்று முத்திரை  என இன்னும் சில குறிப்புகள் அடுத்த பகுதியில்

 

இறைவன் நாடினால் மீண்டும் அடுத்த வாரம் நலவாழ்வில்  சிந்திப்போம்

 

08012022 சனி

சர்புதீன் பீ

 

 

 

No comments:

Post a Comment