யாமாமா நீ யாமாமா
யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா
மாமாயா நீ மாமாயா
இந்தப்பாடலின் அமைப்பில் உள்ள சிறப்பு ஏன்ன?
விடை, விளக்கம் :
“விகடகவி” எல்லோருக்கும் தெரிந்த ஒரு சொல் .இதை இடமிருந்து வலமாகப் படித்தாலும் வலமிருந்து இடமாகப் படித்தாலும் “விகடகவி”தான்
இது போன்றவை “மாலை மாற்று “ அல்லது “இருவழியொத்த சொல்” எனப்படும் ( Palindrome )
இந்த அமைப்பில் இயற்றப்பட்ட பாடல்தான் “யாமாமா “
இப்போது திருப்பி படித்துப்பாருங்கள் புரியும்
திறமையும் புலமையும் நிறைந்தவர்கள் மட்டுமே இது போல் எழுத முடியுமாம் .
இது திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களில் ஒன்று
இனி பொருள்:
யாம் ஆமா?= ஆன்மாக்களாகிய எங்களைக் கடவுள் என்பதா ? நீ ஆம் ஆம் = நீதான் கடவுள் ஆயாழி = பெரிய யாழை மீட்டுபவனே காமா = பேரழகனே காண் நாகா =அனைவரும் காண நாகங்களை அணிந்தவனே காணா காமா = காமனைக் காண முடியாதவாறு எரித்தவனே காழியா =சீர்காழியில் உறைபவனே மாமாயா = மா எனப்படும் திருமகளின் துணைவனான மாயோனே நீ மாமாயா =மாயை முதலான மும்மலங்களில் இருந்து நீ எம்மைக் காப்பாயாக
சுருக்கமாக:
இறைவானகிய நீ,மனிதர்களை மாயை யிலிருந்து காப்பாயாக .
சரியான விடை அனுப்பிய தமிழ் அறிஞர்கள்
சகோ கணேச சுப்ரமணியன் (முதல் சரியான விடை )
ஹசன் அலி, தல்லத், ஹிதயத்
அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
முயற்சித்த சகோ ராஜாத்தி , முயற்சிக்க முயற்சித்த சகோ நஸ் ரீன்
இருவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௨௬ ௦௧ ௨௦௨௨ புதன்
26012022
சர்புதீன் பீ
No comments:
Post a Comment