முத்திரை பதிப்போம் 8
பிராண முத்திரை –உடல் மனம் உற்சாகத்துக்கு
மிக எளிதான , எண்ணற்ற பலன்கள் தரும் காற்று(வாயு) முத்திரை பற்றி முன்பு பார்த்தோம்
இப்போது அதனுடன் தொடர்புடைய
பிராண முத்திரை பற்றிப் பார்ப்போம்
பிராண முத்திரையும் செய்வதற்கு மிக மிக எளிது . பலன்கள் ஏராளம் பொதுவாக எல்லா முத்திரைகளுமே செய்வதற்கு எளிதானவை, பொருட் செலவு இல்லாதவை ,கருவிகள் எதுவும் இல்லை, பக்க விளைவுகளும் இல்லை .
பிராண முத்திரை – பிராணா என்பது உயிர் சக்தியைக் குறிக்கும் சொல் .
பேச்சு வழக்கில் “ பிராணனை வாங்காதே “ என்று சொல்கிறோம் . உயிர் வாழ மிகவும் தேவையான ஆக்சிஜனை “பிராண வாயு” என்று அழைக்கிறோம்
இந்த உயிர் சக்தி நமது உடலின் அடிப்பாகத்தில் உள்ள மூலாதாரத்தில் இருப்பதாக யோகக்கலை சொல்கிறது .இந்த மூலாதாரத்தில் உள்ள உயிர் சக்தியை உடல், மனதுக்குள் செலுத்த யோகப்பயிற்சி , மூச்சுப் பயிற்சி, தியானம் என் பல வழிகள் இருக்கின்றன
அவற்றில் மிக எளிதானது யோகா முத்திரைகளில் ஒன்றான இந்த பிராண முத்திரை .
செய்முறையைப் பார்க்கு முன் இதன் பலன்களைப் பார்ப்போம்
உண்மையிலேயே நம்ப முடியாத் அளவுக்கு நன்மைகளை அள்ளித் தருவது இந்த பிராண முத்திரை
உயிர் (பிராண )சக்தி ஓட்டம் அதிகரித்து உடலில் ஒரு மின்சாரம் பாய்ந்த உணர்வு உண்டாகும்
தெளிவற்ற ஒரு மன நிலை, எதிர் மறை எண்ணங்கள், மனம் ,உடல் சோர்வு ,வலிகள் , கை கால்கள் மரத்துப்போதல் , செரிமானம் குறைவு, குடும்ப வாழ்வில் ஒழுங்கின்மை,
இவை எல்லாம். உடலில் உயிர் சக்தி (பிராண சக்தி ) குறைவதன் அறிகுறிகள்
எளிய பிராண முத்திரை உயிர் சக்தி ஓட்டத்தை ஒழுங்கு படுத்தி இது போன்ற பல குறைகளை சரி செய்கிறது
பிராண முத்திரை செய்யும் முறை
சுண்டு விரல் , மோதிர விரல், பெருவிரல் – இந்த மூன்று விரல்களின் நுனிகள் ஒன்றை ஓன்று தொடும்படி வைக்கவேண்டும் . அவ்வளவுதான் . இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்
முதுகு வளையாமல் நிமிர்ந்து உட்கார வேண்டும் . தெரிந்தவர்கள் ,முடிந்தவர்கள் தாமரை (பத்ம) வஜ்ராசனத்தில் உட்காரலாம் . தெரியாவிட்டால் இருக்கவே இருக்கிறது சம்மணம் கூட்டி உட்காரும் சுகாசனம்
இயல்பான மூச்சு- சற்று நிறுத்தி மெதுவாக விடலாம்
செய்யும் நேரம் காலம்
எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் இந்த முத்திரையை செய்யலாம் . . .ஒரு முறைக்கு 10 நிமிடம் ஒரு நாளைக்கு மூன்று முறை செய்வது நல்ல பலன் கொடுக்கும்
தீரும் நோய்கள், பிரச்சினைகள்
உலகெங்கும் சிறார் முதல் மூத்த குடிமக்கள் வரை உச்சரிக்கும் சொல் டென்ஷன்
இந்த டென்ஷன் எனும் மன அழுத்தத்தைக் குறைப்பதில் பிராண முத்திரை உதவுகிறது .
மன அழுத்தம் குறைந்தால் சிந்தனை தெளிவாகி குழப்பங்கள் மறைகின்றன
எதிர்மறை எண்ணங்கள் விலகி புதிய ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் தோன்றுகின்றன
மனம் மகிழ்ச்சி அடைகிறது ; உற்சாகம் தன்னம்பிக்கை வளர்கிறது
பதட்டம் நீங்கி, பொறுமை வளர்கிறது
மனித நேயம் வளர்கிறது
செரிமானம் சீராகிறது
சோர்வு நீங்கி உடல் வலிமை பெறுகிறது
உடல் வலி, தலை வலி, தசை வலி , மூட்டு வலி குறைகிறது
நோய் எதிர்ப்புத்திறன் கூடுகிறது
கண் பார்வை சீராகிறது
தோலைப் பாதுகாக்கவும் , ஆழ்ந்து உறங்கவும் உதவுகிறது
கை விரலகள் மூன்றை சேர்த்து வைப்பதால் இவ்வளவு பலன் கிடைக்குமா என்று ஒரு எண்ணம், ஐயம் இயல்பாக மனதில் தோன்றும்
இதற்கு யோக அறிவியல் அறிஞர்கள் கூறும் விளக்கம் பஞ்ச பூதக் கொள்கை எனப்படும் ஐந்து மூலகக் கொள்கை
அது பற்றி சுருக்கமாக
இந்த உலகம் ஐந்து மூலகங்களால் ஆனது
அதே ஐந்து மூலகங்கள் நம் உடலிலும் இருக்கின்றன்
கை கால்களில் உள்ள ஐந்து விரல்களில் இந்த ஐந்து மூலகங்களின் ஆற்றல் இருக்கிறது –
பெரு விரல் – நெருப்பு ஆள்காட்டி விரல் – காற்று
நடுவிரல் –வானம் மோதிர விரல் – நிலம்
சுண்டு விரல் –தண்ணீர்
விரல்கள் ஒன்று சேரும்போது ஐந்து மூலகங்களும் சம நிலைக்கு வந்து உடல். மனதை சரி செய்கின்றன
இதெல்லாம் நடக்கிற காரியமா என்று வீண் ஐயம் கொள்வதை விட்டு விட்டு பொருட் செலவில்லாத செய்வதற்கு எளிதான முத்திரைகளை செய்து பார்த்து பலன் அடையலாமே
இறைவன் நாடினால் மீண்டும் முத்திரை பதிப்போம்
29012022 சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment