Thursday, 27 January 2022

குரான் 2:233 ,31:14 ,46:15 தாய்ப்பால் புகட்டல், கருக்காலம்

 தாய் தன் சேய்க்கு தாய்ப்பால் புகட்டும் கால அளவு பற்றி திருமறை குர்ஆனில் வரும் செய்தி என்ன ? எங்கு வருகிறது ?

விடை விளக்கம்
2:233 அல்பக்ரா( மாடு )---------(தந்தை விரும்பினால்)-------தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்
31:14 லுக்மான் : ------அவனுக்கு பால்குடி மறக்கவைப்பது இரண்டு ஆண்டுகளில் ஆகும்
இந்த இரண்டு இறை வசனங்களும்
வாய்ப்பு இருந்தால் இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் புகட்டலாம் என்ற கருத்தை சொல்கின்றன
46:15 அல் அஹ்காf (மணல் திட்டுகள்) ------------அவனுடைய தாய் அவனை வயிற்றில் சுமப்பதும் அவனுக்கு பால்குடி மறக்கச் செய்வதும் (மொத்தம் ) முப்பது மாதங்களாகும்
இந்த வசனத்தில் உள்ள சட்ட நுணுக்கத்தை வைத்து ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட வரலாறு ஓன்று இருக்கிறது .
அதை சுருக்கமாகச் சொல்கிறேன்:
திருமணம் ஆன ஆறு மாதத்தில் ஒரு பெண் முழுமையான, ஆரோக்கியமான குழந்தயைப் பெற்றெடுக்கிறார்
பெண்ணின் துணைவன் தொடுத்த வழக்கில் கலிபா உத்மான் அவர்கள் அந்தப்பெண் ஒழுக்கம் தவறியவர் என்ற அடிப்படையில் மரண தண்டனை விதிக்கிறார்கள்
இதைக் கேள்விப்பட்ட அலி அவர்கள் உத்மானிடம்
இந்த மூன்று இறை வசனங்களை எடுத்துச் சொல்லி இறை வசனம் 46:15 சொல்லும் முப்பது மாதங்களில், மற்ற இரண்டு வசனங்களில் சொல்லப்பட்ட பால்புகட்டும் இருபத்தி நான்கு மாதங்கள் போக மீதம் ஆறு மாதம் ஒரு குழந்தை கருவில் முழுமையாக உருவாகப் போதுமான காலம்
என்று சொல்கிறார்
உத்மானும் அதை ஒப்புக்கொண்டு அந்தப் பெண்ணை விடுதலை செய்து விடுகிறார்
(அண்மையில் மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சிகளில் கண்ட முடிவின்படி ஒரு குழந்தை கருவில் முழுமையாக உருவாக 28 வாரங்கள் -196 நாட்கள் ஆகும் )
(Source Towards understanding Quran V 46:15 Expl note 19)
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுகள் பெறுவோர்
சகோ பீர் ராஜா (முதல் சரியான விடை)
ஹசன் அலி , தல்லத்,ஷிரீன் பாருக் ,
பர்வேஷ்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
28012022 வெள்ளி
சர்புதீன் பீ
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment