Tuesday, 4 January 2022

தமிழ் - ஓ ஓதல், ஆஅதும்

 ஈ இ, ஏ எ --இதுபோல் ஒரு உயிரெழுத்தின் நெடில், குறில் அடுத்தடுத்து வரும் தமிழ்ச் சொற்கள் எவை?

இறைவன் நாடினால் நாளை விடை விளக்கத்துடன் தமிழில் சிந்திப்போம்
விடை
ஓஓதல்
ஆஅதும்
,விளக்கம்
பல குறள்களில் இது போன்ற சொற்கள் வருகின்றன
குறள் 653
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]
ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் ஏன்னு மவர்
பொருள்
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.
.
ஓஓதல் –ஓவுதல் ,ஒழிதல், நீங்குதல் , நீக்குதல், முடிதல்
ஆஅதும் - ஆகுதல், (எண்ணிய திண்ணிய முடிதல்) உயர்வான மேன்மையைக் கொடுத்தல்:
ஆஅதும் –ஆகுதல் ,உயர்வான மேன்மையைக் கொடுத்தல்
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட்டது (குறள் 1176)
யாமும் உளேங்கொல் அவர் நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓ ஒ உளரே அவர் (குறள்1204)
சரியான விடை அனுப்பிய ஒரே
சகோ கணேசன் சுப்ரமணியன் அவர்களுக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
ஆர்வத்துடன் பங்கேற்ற
சகோ ஹசன் அலி, , ராஜேந்திரன் , அஷ்ரப் ஹமீதா ,
மெஹராஜ். பாடி பீர் ,ரவிராஜ் ,முத்துசாமி மீ மு இஸ்மாயில் ,செல்வகுமார்
அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௫௦௧௨௦௨௨ புதன்
05012022
சர்புதீன் பீ
May be an image of text that says "தமிழ்"
Like
Comment
Share

No comments:

Post a Comment