சுராஹ் 30அர் ரும்(ரோம் ) வசனம் 38
எனவே உறவினருக்கும் ,வறியவருக்கும் வழிப்போக்கருக்கும் அவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து விடுங்கள்
இறைவனின் அருளை நாடுவோருக்கு இதுவே சிறந்ததாகும்
இவர்களே வெற்றியாளர்கள் (குரான் 30:38)
தருமம் எனும் சக்காத் பற்றிய இறைவசனம் இது .
இதில் மிகச் சிறப்பான செய்திஓன்று பொதிந்துள்ளது.
அது ஏன்ன?
விடை
உற வி னருக்கும் வறியவருக்கும் வழிப்போக்கருக்கும்
தருமம் செய்யுங்கள் என்று இறைவன் சொல்லவில்லை
அவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து விடுங்கள்
என்று கட்டளை இடுகிறான்
நீங்கள் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறீர்கள், கடன் பட்டிருக்கிறீர்கள் , ,அவர்கள் உரிமைகளைக் கொடுத்து உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள் கடனைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்கிறான்
அரபு மொழியில் haqqahu his right 5حَقَّهٗ و
உரிமை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது
இந்த வசனம், அதன் பொருள் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையின் அடித்தளமாக அமைந்து செல்வம் பகிர்ந்து அளிக்கப்படுவதை வலியுறுத்தி பொருளாதார சீர் திருத்தத்துக்கு வழி வகுக்கிறது
உலகில் உள்ள செல்வம் அனைத்தும் இறைவனுக்கே உரியது. ஒரு சிலருக்கு அவர்கள் தேவைக்கு மேல் அதிகமாகக் கொடுத்து இறைவ்ன் அவர்களை சோதிக்கிறான் – அவர்கள் தங்கள் செல்வத்தை முறைப்படி பிறருக்குக் கொடுத்து தங்கள் சமுதாயக்டமையை நிறைவேற்றுகிறார்களா என்று
இங்கு சொல்லப்படுவது சக்காத் சதக்கா இரண்டுக்கும் பொருந்தும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்
சக்காத் அளவுக்கு சதக்கா கட்டாயமில்லை , முக்கியமில்லை என்ற கருத்து தவறு என்கிரார்கள அறிஞர்கள் .
சக்காத் என்பது சில விதகளுக்கு உட்பட்டு செலவு போக மிஞ்சி இருப்பதில் 2.50 % என்று கணக்கிடப்படுகிறது
சதக்காவுக்கு இந்த வரைமுறை கிடையாது . உங்கள் வசதியான வாழ்க்கைக்கு ,உங்கள் குடும்பத் தேவைகள் என அனைத்துக்கும் தேவையான பொருளை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் . அதற்கு மேல் மிஞ்சி இருப்பதெல்லாம் , அது எவ்வளவாக இருந்தாலும் அது சதக்கா என்னும் தர்மத்துக்கு உரியதாகும்
சக்காத் சதக்காவை எல்லோரும் ஒழுங்காக் கொடுத்தால் உலகில் பொருளாதார ஏற்றத் தாழ்வு பெருமளவில் சீராகும்
சரியான விடை அனுப்பிய
சகோ முத்தவல்லி அக்பர் அலிக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
பங்கேற்ற சகோ சிக்கந்தருக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
21012022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment