குரான் 2:45
“-------------------நிச்சயமாக அது (இறைவணக்கம்- தொழுகை ) பளுவானதுதான் (சிரமமானதுதான் )---------------------------------------“
திருமறையில் எங்கு இந்த வசனம் வருகிறது ?
விடை
திருமறை வசனம் 2(அல் பகரா ) :45
“நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தும் தொழுதும் (இறைவனிடம் ) உதவி கோருங்கள் .நிச்சயமாக அது பளுவானதுதான் உள்ளச்சம் உடையோர் மீது தவிர”
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர் :
சகோ
சிராஜுதீன் – முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷர்மதா
விளக்கம்
இதன் தொடர்ச்சி வசனம் 2: 46
“(அவர்கள் ) தங்கள் இறைவனை நிச்சயமாக சந்திப்பவர்கள்
அவனிடமே நிச்சயம் திரும்புவோம் என நம்புகிறவர்கள்
(
மறுமையில் இறைவனை சந்திக்கவேண்டுமே என்ற உள்ளச்சத்துடஅவனைத் தொழுபவரைத்தவிர மற்றவர்க்கு தொழுகை ஒரு சுமையாக இருக்கும்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
25032022வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment