Friday, 25 March 2022

பரபரப்புச் செய்திகள் -சனிக்கிழமை ப்பதிவு

 பரபரப்புச் செய்திகள்

“காட்சி ஊடகங்களும் செய்தித் தாள்களும் பரபரப்புச் செய்திகளுக்காக அலைகின்றன ,அவற்றை வெளியிடுவதில் போட்டி போடுகின்றன" என்பது ஒரு பொதுவான கருத்து
போட்டியில் முந்திக்கொள்ளும் வேகத்த்தில் செய்தி உண்மையயா என்பதை சரிபார்ப்பதில்லை “
இவைஎல்லாம் வெறும் கருத்துக்கள், குற்றச்சாட்டுகளாக இல்லாமல் உண்மையாகவே இருக்கின்றன
முன்னாள் மாநில முதல்வர பற்றி தொலைக்காட்சியில் வந்த செய்தி இதற்கு ஒரு சரியான சான்று
இந்த ஊடகங்கள் எல்லாம் வணிக அடிப்படையில் பொருள் ஈட்டும் நோக்கத்தில் அமைந்தவை
ஆனால் இதே தவறை பொழுது போக்கு , தகவல் பரிமாற்றத்தை அடிப்படையாக் கொண்ட கட்செவி, முகநூல் போன்ற (சமூக ) ஊடகங்களின் உறுப்பினர்களும் செய்கிறார்கள்
ஒரு செய்தி வந்து விட்டால் அதை மற்றவர்களுக்கு பார்வார்ட் செய்வதில் முந்திக்கொள்ள எண்ணி உண்மையைக் கோட்டை விடுகிறார்கள்
“அந்த நடிகை காலமாகி விட்டார்
இந்த நடிகரின் அப்பாவுக்கு விபத்தில் பெரும் காயம்
இவற்றை எல்லாம் எதற்காக போடுகிறார்கள் என்று விளங்கவில்லை .
இது ஒரு குரூரமானமனப்பாங்கோ என்று தோன்றுகிறது
நல்ல செய்திகள் , பயனுள்ள குறிப்புகள் நிறைய வருகின்றன .ஆனால் அவை கூட திருப்பித் திருப்பி வரும்போது அவற்றை படிக்காமலே விட்டு விடுகிறோம்
சமூக் ஊடகங்களின் மிகப் பெரும் பயன் மருத்துவக் குறிப்புகள் – வெள்ளம் போல் பாய்ந்து வருகின்றன
எல்லோருமே மருத்துவராகி விட்டார்கள் .
எளிய சளியிலிருநது கொடிய புற்று நோய் வரை இவர்கள் சொல்லும் செலவில்லாத எளிய மருத்தவம் நம்மை வியக்க வைக்கிறது
அடுத்து நலவாழ்வு சார்ந்த உணவுக் குறிப்புகள் . அவற்றைத் தொடர்ந்துபடித்தால் தாகத்துக்கு தண்ணீர் குடிக்ககூட தயக்கம் , அச்சம் வரும்
சற்றும் சிந்திக்காமல் செய்திகளை பிறருக்கு அனுப்பும் வேகம் கேலிக்குரியதாகி விடுகிறது
ஒரு சில எடுத்துக்காட்டுகள் சில மாற்றங்களுடன்
“ இன்று இரவு 12 மணிக்கு மலேசியா அருகில் சூரியனும் சந்திரனும் சந்திக்கப் போகின்றன
இதனால் உலகம் வெடித்துச் சிதறலாம்
உங்கள் செல் போனை மறக்காமல் பாதுகாப்பாக ஆப் செய்து வையுங்கள் “
“ 2020- ஒரு அற்புதமான ஆண்டு
இந்த எண்ணில் இருந்து நீங்கள் பிறந்த ஆண்டைக் கழித்தால் உங்கள் வயது மிகச் சரியாக வரும் “
இது போன்ற அறிவார்ந்த செய்திகள் பல நூறு முறை வலம் வந்தன
கொள்ளை நோய் உச்சத்தில் இருந்தபோது வந்த செய்தி
“ இன்றிரவு வானில் இருந்து மருந்து தெளிக்கப்படும்
பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
----ஆணையர் அறிவிப்பு “
எந்த ஊரில் ? எத்தனை மணிக்கு ? அறிவிப்பவர் காவல் துறை ஆணையரா
நகராட்சி ஆணையரா ?
அதெல்லாம் தெரியாது
என் கடன் பார்வர்ட் செய்வதே !
அரசியல் பதிவுகள் , ஒரு சாராரை தாழ்த்தி எழுதும் பதிவுகள் இவற்றின் பக்கம் நான் போகவில்லை
பொய் அடையாளம் பேக் ஐ டி – பணம் திருடுவது , முக நூல் நட்பை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவது எல்லாம் மிக அதிகமாகிக் கொண்டிருக்கின்றன
காவல் துறை திரும்பத் திரும்பசொல்வது :
“புகைப்படம் – ஆண் , பெண் , சிறுவர், சிறுமியர் குழந்தைகள் – யாருடைய படமும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் .
அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்த விதமான பணப் பரிமாற்றமும் வேண்டாம் “
இப்படிப் பல எச்சரிக்கைகள் வருகின்றன
முழுவதும் மூத்த குடிமக்கள் அதுவம் தனிமையில் இருப்பவர்கள் கொண்ட ஒரு கட்செவிக் குழுவில் ஒரு பழக்கத்தை ஏற்படுதியிருக்கிறார்கள்
வருகைப் பதிவு செய்வது போல் காலை மாலை ஒரு குறிப்பட்ட நேரத்தில்
Good Morning / Good Evening செய்தி அனைவரும் குழுவுக்கு அனுப்ப வேண்டும்
அப்படி அனுப்பாதவர்கள் இருக்கும் இடத்துக்கு மற்றவர்கள் போய் , செய்தி அனுப்பாததன் காரணத்தை அறிந்து தேவைக்கேற்றார் போல் உதவிகள் செய்வார்கள்
இது ஒரு நல்ல பயனுள்ள நடை முறை
மற்றபடி தினமும் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக்கொள்வது தேவை அற்றது என்பது என் கருத்து மட்டுமல்ல .
சமூக ஊடகங்களுக்கான நடை முறையில் இது போன்ற ஒரு அறிவுரை இருப்பதாக படித்த நினைவு
நம் எண்ணங்களைப் பதிவு செய்யவும் , நம் படைப்புகளை வெளியிடவும் ,செய்திகள் , நல்ல நகைச் சுவைத் துணுக்குகள் இவற்றைப் பரிமாறிக் கொள்ளவும் கட்செவி,யும் முக நூலும் பெருமளவில் பயன் படுகின்றன
வெள்ளம் போல் பாய்ந்து வரும் செய்திகளில் நல்லவற்றை மட்டும்
தேர்ந்தெ டுப்பது நம் கையில்தான் இருக்கிறது
நினைத்ததை விட சற்று அதிக நீளமாகி விட்டது இந்தப் பதிவு . இருந்தாலும் நிறைவாக முக நூலில் நான் படித்த துணுக்குகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
துணைவி :“\ இன்று நானே சமைக்கிறேன் உங்களுக்கு எது பிடிக்கும் சொல்லுங்கள்.
“ உனக்கு எது நன்றாகத் தெரியுமோ அதை சமை” இது ஆண்
“நெய்ச்சொறு மிக நன்றாகச் செய்வேன் “ என்கிறார் துணைவி தொடர்ந்து “ ஆனால் அசிசி எவ்வளவு போட வேண்டும் என்பது எனக்குத் தெரியாது . அதை மட்டும் நீங்கள் சொல்லுங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் “ என்கிறார். நம் இருவருக்குத்தானே=அரை டம்ளர் அரிசி போதும் “ இது கணவன்
எதோ போர்க்களத்துக்குப் போவது போல் வீர நடையுடன் அடுப்படிக்குப் போகிறார் துணைவி
ஐந்து நிமிடம் ,பத்து நிமிடம் , கால் மணி , அரை மணி ஒரு மணி நேரம் ஓடி விட்டது
சமையல் வாசம், சத்தம் ஏதும் இல்லை
பொறுமை இழந்த கணவன் துணைவியைத் தேடிபோகிறான்
அவரோ ஒரு டம்ளரை கத்தியால் நறுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்
வியப்புடன் பார்த்தகணவரிடம் “ வீடு முழுக்கத் தேடிப் பார்த்து விட்டேன் .அரை டம்ளர் கிடைக்கவில்லை . அதனால் ஒரு முழு டம்ளரை அரையாக நறுக்குகிறேன் ஆனால் நறுக்க முடியவில்லை “ என்கிறார்
இதற்கு மேலும் துணைவியின் சமையல் திறனை சோதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தொலைபேசியில் உணவுக்கு சொல்ல சிறிது நேரத்தில் சுவையான நெய்ச்சோறும் பொருத்தமான பக்க உணவுகளும் வீடு வந்து சேர்ந்தன.
இன்னும் ஒன்றே ஓன்று
இதுவும் கணவன் மனைவிதான் – ஆனால் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் இணை
கணவன் ஒரு குடும்ப நல ஆலோசகரைத் தொடர்பு கொண்டு சொல்கி. றார்
“சண்டைஎன்று வந்து விட்டால் என் மனைவி உடனே தன் தம்பியிடம் . புகார் செய்கிறார் . மும்பையில் இருக்கும் அந்தத் தம்பி விமானத்தில் பறந்து வந்து என்னைக் குத்து குத்தென்று குத்திவிட்டு அடுத்த விமானத்தில் மும்பை திரும்பி விடுகிறார் .
போக வர விமானக் கட்டணத்துக்கு என் கடன் அட்டையைப் பயன்படுத்துகிறார் –எனக்கு தகுந்த ஆலோசனை சொல்லவும் “
ஆலோசகர் சொன்ன அறிவுரை : “ மன அழுத்தம் நிறைந்த இன்றைய வாழ்க்கை முறையில் இது போன்ற சண்டை, அடி உதை எல்லாம் இயல்பாகிப் போய்விட்டது .
இப்போதைக்கு நான் உங்களுக்கு சொல்வது உடனே வீட்டை மும்பைக்கு மாற்றிக் கொள்ளுங்கள் . விமானக் கட்டணம் மிச்சம் ஆகும் “
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
26032022சனி
சர்புதீன் பீ
May be an image of flower and text
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment