தமிழ் (மொழி) அறிவோம்
குன்றி மணிக்கு ஒப்பாகச் சொல்லப்படுவோர் யார் ?
சொல்பவர் யார் ?
விடை
குன்றி மணியின் சிவப்பு நிறம் போல் வெளித்தோற்றத்தில் செம்மையாக இருப்பவர்கள் பலரின் உள்ளம் தூய்மை இல்லாமல் அந்தக் குன்றிமணியின் மூக்கில் உள்ள கரிய நிறம் போல் இருப்பார்கள்
சொன்னவர் திருவள்ளுவர்
புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி
மூக்கின் கரியார் உடைத்து
(அதிகாரம்:கூடாஒழுக்கம் குறள் எண்:277)
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறும் தமிழ் அறிஞர்கள்
சகோ ஹசன் அலி (முதல் சரியான விடை)
ஹிதயத், சிராஜுதீன் ,கரம் . ஜபருல்ல கான்
குன்றி மணியின் தெய்வீகப் பலன்கள் பற்றியும் ,நண்டின் கண்களோடு ஒப்பிட்டும் ஒரு சகோ எழுதியிருந்தார்
இன்னொரு சகோ தனக்குத் தெரிந்த புலவர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்
இவர்கள் இருவரும் பொறுமையாக சற்று நேரம் கூகிளில் தேடியிருந்தால் எளிதில் சரியான விடை கண்டிருக்கலாம்
குன்றிமணி – இறைவனின் படைப்பில் எல்லாமே அழகுதான் என்பதைப் பறை சாற்றும் ஒரு விதை . அந்த சிறிய விதையில் பெரும்பகுதி அழகிய சிவப்பு நிறம் . ஒரு பொட்டுப்போல் முனையில் கருப்பு நிறம்
இந்த அழகிய விதை முன்பெல்லாம் நிறைய கண்ணில் படும் .இப்போது காணாமல் போய்விட்டது
திருக்குறளில் இடம் பெற்ற ஒரே விதை என்னும் சிறப்பும் இதற்கு உண்டு
குன்றி மணி இடம்பெறும் இன்னொரு குறள்
குறள் 965:
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
மு.வரதராசன் விளக்கம்:
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௨௦௩௨௦௨௨புதன்
02032022
சர்புதீன் பீ
No comments:
Post a Comment