"..........இறைவன் அருளிய உணவுகளில் இருந்து உண்ணுங்கள் பருகுங்கள்..............."
திருமறையில் இந்த வசனம் எங்கு வருகிறது ?
விடை.
திருமறை வசனம் 2:60
மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, "உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!" என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; "அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்" (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறும்"
சரியான விடை அனுப்பி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ முத்தவல்லி அக்பர் அலி
-முதல் சரியான விடை
ரவிராஜ்
ஹஸன் அலி
ஷர்மதா&.
பர்ஜானா
சிறப்பு பாராட்டுகள் சகோ ரவிராஜுக்கு
அவர் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவானாக
சகோ பர்ஜானா அனுப்பிய விடை
7:31
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
(இன்றும் 12 துளைகளுடன் அந்தப் பாறை சினாய் பகுதியில் காணப்படுகிறது)
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
18032022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment