மனம் ஒரு குரங்கு
சிங்கம் படத்தில் ஒரு காட்சி
சூர்யா வீட்டில் சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை சந்தானத்துக்கு . அந்த வீட்டுக்கு குடுகுடுப்பைக்காரன் போல் வேடமிட்டு சந்தானம் போய்
“இந்த வீட்டுக்கு வந்து தங்கப் போகிறவரை நன்கு கவனித்து நல்ல சாப்பாடு கொடுங்கள் “ என்று அருள் வாக்கு போல் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் குடுகுப்பைக்காரன் வேடத்தைக் கலைத்து விட்டு சூர்யா வீட்டுக்குப் போவார்
இது ஒரு பற்பனையான நகைச் சுவைக் காட்சி .
ஆனால் நிஜம்தான் நிழலாகிறது என்பது போல் மிகப்பெரிய அளவில் – நாட்டின் பொருள் ஆதாரத்தையே உலுக்கும் அளவுக்கு – இது போல ஒன்றுஅரங்கேறியிருக்கிறது என்பது நம்ப முடியாத அளவுக்கு வியப்பான கசப்பான உண்மை
ஊடகங்களில் இது பற்றி நிறையவே வந்துள்ளன
சுருக்கமாக இது பற்றி விளக்க முயற்சிக்கிறேன்
பங்குச் சந்தை – புரிகிறதோ இல்லையோ எல்லோர் காதிலும் விழும் சொல்
பலரும் பங்கெடுத்து முதலீடு செய்யும் ஒரு மிகப்பெரிய களம்
இதில் ஒரு பெரும்பங்கு வணிகம் தேசிய பங்குச் சந்தை National Stock Exchange (NSE)
வழியே நடக்கிறது
பெரும்பங்கு என்றால் எவ்வளவு ?
ஒரு நாளைக்கு 2லட்சம் கோடி ரூபாய்
20, 00,00,00,00,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது .
இரண்டுக்குப்பின் 12 சுழியங்கள் ( 0 ) –
சரிதானே
இந்த மிகப் பிரமாண்டமான அளவுதான் – ஆண்டுக்கு எழுநூறு லட்சம் கோடி (தேவைப்.பட்டால் எண்ணால் எழுதிப்பார்த்து பெரு மூச்சு விட்டுக்கொள்ளுங்கள் .மூர்ச்சையாகி விடாதீர்கள் -7க்குப்ப்பின் 14 சுழியங்கள் ( 0 )
இது ஒரு தனியார் நிறுவனம்தானே என்று எளிதாக ஒதுக்க முடியாமல் பிரச்சினயை பூதாகர்மாக உருப்பெருக்குகிறது
ஆம் தே ப ச இன்னும் ஒரு தனியார் நிறுவனம்தான் . ஆனால் SEBI- Securities and Exchange Board of India என்ற ஒரு சட்ட பூர்வமான (Statuary Body), மிகப்பல அதிகாரங்கள் கொண்ட அமைப்பு க்கு இதைக் கண்காணித்து நெறிமுறைப்படுத்தும் பொறுப்பு இருக்கிறது
சரி என்னதான் நடந்தது ?
சுருக்கமாகப் பாப்போம்
2010ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கோ லோகஷன் – என்ற ஒரு வசதி மூலம் பங்குச் சந்தை தரகர்கள் தே ப சவின் இணைய வழியே சந்தை நிலவரங்களை துல்லியமாக அறிந்த கொள்ள முடியும்
(எளிதில் புரிவதற்காக மட்டும்
இணைய வழி வங்கி சேவை ( ஆன் லைன் பாங்கிங் போல என்று வைத்துக்கொள்ளலாம் )
இந்த அமைப்பினால் பல முறைகேடுகளுக்கு பெரிதும் வாய்ப்புண்டு . முறை கேடுகளும் நடந்தன . இது பற்றி ஒரு செய்தித் தாளில் செய்தி வெளிவர , இது பொய்யான தகவல் , எனவே நூறு கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று செய்திதாளின் மேல் என் எஸ் ஈ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதோடு என் எஸ் ஈ தான் செய்தித் தாளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என நீதி மன்றம் ஆணையிட்டது
2015 இல் நடந்த இதுதான் முதல் எச்சரிக்கை மணி
விழித்துக்கொண்ட செபி தீவிர புலனாய்வில் இறங்கியது
அதில் கிடைத்தவை பல அதிர்ச்சிகள்
என் எஸ் ஈ யின் தலைமை நிர்வாகியாக 2013 முதல் 16 வரை இருந்தவர் சித்ரா .
இவர் பதவி ஏற்ற உடனே ஆ .சுப்ரமணியன் என்பவரை நிறுவனத்தின் தலைமை ஆலோசாகாராக நியமித்தார்
முந்திய பதவியில் ஆண்டுக்கு15 லட்சம் ஊதியத்தில் இருந்தவருக்கு இங்கு ஆண்டு ஊதியம் பத்தே பத்து மடங்கு( 1000% கூட்டி 1.5 கோடி . அடுத்த சில மாதங்களில் இது
4 கோடியாக உயர்ந்தது + மற்ற உயர் அதிகாரிகளுக்கு இல்லாத் வசதிகள் சலுகைகள்
அப்படி அவருக்கு என்ன சிறப்புத் தகுதி ? விடை இல்லாத வினா .
பிறகு என் இப்படி ? இதற்கு விடைதான் ஒரு பேரதிர்ச்சி
சித்ராவின் பதவிக்காலத்தில் அவரது பணிகளை , செயல்பாடுகளை இயக்கியவர் இமய மலையில் உள்ள ஒரு யோகி
பங்குச் சந்தை பற்றி பல தலையாய தகவல்கள் , முடிவுகள் அந்த யோகிக்குத் தெரிவிக்கப்பட்டன
ஆ. சு மணியனின் நியமனமும் அந்த யோகியின் பரிந்துரைப்படிதான்
உளவியல் நன்கு அறிந்த அந்த யோகியும் ஆ.சு. மணியும் ஒருவரே என்பது செபியின் கருத்து . .இதே கருத்தை ஈ &ஓய ஏன்ற தணிக்கை நிறுவனமும் தெரிவித்துள்ளது
இருந்தாலும் என் எஸ் ஈ நிர்வாகமோ , முன்னால் தலைமை இயக்குனர் ரவி நாராயணனோ பெரிய அளவில் எதிர் நடவடிக்கை எடுக்கவில்லை
2016 ஆம் ஆண்டு ஆ சு மணியும் அடுத்து சித்ராவும் பதவியை விட்டு விலகினர்
இப்போது சித்ரா , மணி, என் எஸ் ஈ ஒழுங்கு அதிகாரி ஆகியோருக்கு தண்டம் (fine) விதித்துள்ளது செபி
கோ லோகேஷன் முறைகேடு தொடர்பான வழக்கில் ஆ சு மணி கைதாகி இருக்கிறார்
இவ்வளவு பெய்ய விதி மீறலில் செபி யின் பங்கு என்ன ?
உடன் நடவடிக்கை எடுக்காமல் வளர விட்டது ஏன்?
பொதுமக்களின் முதன்மை முதலீட்டுத் தேர்வாக விளங்குகிறது பங்குச் சந்தை
தினசரி இரண்டு லட்சம் கோடி வர்த்தகம் நடக்கும் இவ்வளவு பெரிய பொருளாதார் அமைப்பின் செயல்பாட்டிலும் கண்காணிப்பிலும் இவ்வளவு பெரிய ஓட்டைகள் ஏன்?
யாரைத்தான் நம்புவது ?
கேள்வியின் நாயகர்கள் விடை அளிப்பார்களா என்பதே ஒரு கேள்வியாகிறது
அதற்குமேல் என்ன மாதிரி விடை வருமோ என்ற ஒரு தயக்கமும் வருகிறது
ஒன்று தெளிவாகிறது
நடுத்தர வர்க்கம் விரைவில் காணமல் போகும்
இந்த நிலையில் எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் துணை இருப்பது இறை நம்பிக்கை ஒன்றே
(தமிழ் இந்து 2802022 இதழில் முகமது ரியாஸ் என் எஸ் இ விவகாரம்–யாரைத்தான் நம்புவது? என்ற தலைப்பில் வெளிஇட்ட பதிவைத் தழுவி எழுதியது . அவரது மின்னஞ்சல் முகவரி riyas.ma@hindutamil.co.in )
நிறைவாக ஒரு சிறு கதை – எப்போதோ எங்கோ படித்தது
மலையைச சார்ந்த ஒரு சிற்றூர் . அங்கு விலை உயர்ந்த மகிழுந்து ஒன்றில் ஒரு செல்வந்தரும் அவரது உதவியாளரும் வந்து இறங்குகிறார்கள்
அவார்களுக்க் நிறைய குரங்குகள் தேவைப்படுவதாகவும் ஒரு குரங்குக்கு பத்து ரூபாய் விலை கொடுப்பர் என்றும் ஒரு செய்தி வருகிறது
உடனே பலரும் மலைக்குச் சென்று குரங்குகளைப் பிடித்துக்கொடுக்க , அவரும் பத்துப் பத்து ரூபாய் கொடுத்து விடுகிறார் .
சில நாட்களில் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்து விட இப்போது இருபது ரூபாய் தருவதாக செல்வந்தர் சொல்ல புதிய உற்சாகத்துடன் குரங்குகளைத் தேடிப்ப்பிடித்து மக்கள் விற்றுப் பணம் பாக்ர்கிறார்கள்
இப்படிப் படியாக உயர்ந்து ஒரு குரங்கு நூறு ரூபாய் வரை விலை போகிறது .
தனக்கு இன்னும் குரங்குகள் தேவைப்படுவதகவும் அதற்கான பணத்துடன் விரைவில் வருவதாகவும் செல்வந்தர் புறப்படுகிறார்
ஆயிரக்கணக்கான குரந்குகளுடன் தங்கியிருக்கும் உதவியாளர் ஒரு செய்தியை பரப்புகிறார்
“ செல்வந்தருக்கு இன்னும் நிறையக் குரங்குகள் தேவைப்படுகின்றன ஒன்றுக்கு ஐநூறோ அதற்கு மேலோ கொடுப்பார் .”
மேலும் தான் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் தன்னிடம் இருக்கும் குரங்குகளில் ஒரு பகுதியை இருநூறுக்குக் கொடுக்க விரும்புவதாகவும் சொல்கிறார்
இருநூறுக்கு வாங்கி சில நாட்களில் ஐ நூறுக்கு விற்றால் நிறையப் பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பலரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் என்று பல வழிகளில் பணத்தைத் திரட்டி முடிந்த அளவுக்கு குரங்குகளை வாங்குகிறார்கள்
சில நாட்களில் இரவோடு இரவாக ஊரை விட்டுப்போகிறார் உதவியாளர்
சரி விரைவில் அவரும் செல்வந்தரும் வந்து குரங்குகளை நல்ல விலைக்கு வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் ஊர் மக்கள் காத்திருக்கிறாகள் - ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் காத்துக்கொண்டே இருக்கிறார்கள்
இ (க)டைச் செருகல்
இந்தக்கதைக்கும் மேலே உள்ள பதிவுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் உங்களுக்குத்தோன்றுகிறதா ?
தோன்றினாலும் தோன்றும்
மனம் ஒரு குரங்குதானே
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
05032022 சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment