திருமறை குரான் – எல்லாப்புகழும் இறைவனுக்கே
எல்லாப் புகழும் இறைவனுக்கே – அல்ஹம்துலில்லாஹ் اَلۡحَمۡدُ لِلّٰ
என்று துவங்கும் குரான் அத்தியாயங்கள் (சூராக்கள் ) எவை ?
விடை : அல் பாத்திஹா( அல்ஹம்து சூராஹ் )(1)
அல்அனாம் (6) அல் காஹ்ப் (18)
அல் சபா (34) பாடிர்(35)
சரியான விடை அனுப்பி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ பீர் ராஜா (முதல் சரியான விடை )
ஹசன் அலி, முத்தவல்லி அக்பர் அலி, ஷர்மதா, ராஜாத்தி
சிறப்புப் பாராட்டு
சகோ ரவி ராஜுக்கு – 5 சுராக்கள் என்ற விடையோடு அல்ஹம்து லில்லாவுக்கும் அல்ஹம்து சூராவுக்கும் பொருளும் விளக்கமும் அனுப்பியிருந்தார்
இன்னும் சற்று முயற்சித்திருந்தால் முழு விடையும் கண்டிருக்கலாம்
அவருடைய ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் வாழ்த்துகள் ,பாராட்டுகள்
விளக்கம்
அல்பாத்திஹா சூராஹ்
பிஸ்மில்லாஹ் என்ற சொல்லில் துவங்குவதால் இந்த வரிசையில் சேராது என்று ஒரு கருத்து இருந்தாலும் அந்த சூராவின் பெயரே அல்ஹம்து சூராஹ் என்று பழக்கத்தில் வந்து விட்டது
ஹம்த் حَمۡدُ என்ற அரபுச் சொல்லுக்கு புகழுதல், நன்றி தெரிவித்தல் ஏன இரு பொருள் உண்டு
அந்த இரண்டு பொருளிலும் ஹம்து என்று இங்கே வருகிறது. இந்த உலகமும் அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஏக இறைவனுக்கே உரியன. . ஒவ்வொன்றையும் முழுமையாகவும் அழகாகவும் படைத்து அவற்றின் , நலன்களையும் பயன்களையும் மனிதனுக்கு அள்ளிக் கொடுத்த இறைவனைத் தவிர புகழுக்கும் நன்றிக்கும் உரியவர் வேறு யார் இருக்க முடியும் ?
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
04032022வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment