–
பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் காட்சி –
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாமல
மனதுக்கு மகிழ்ச்சி , உற்சாகம் தரும் காட்சி
மாலையில் அக முக மலர்ச்சியுடன் அவர்கள் வீடு திரும்புவது பார்ப்பவர்களுக்கு மாணவப் பருவத்தின் இளமையை அள்ளிக் கொடுக்கும்
திருச்சியில் நாங்கள் இருந்தபோது மாடி மாடத்திலிருந்து பார்ப்போம் – துவக்கப்பள்ளி குழந்தைகள் தோளில் ஒரு சிறிய பை தொங்கும். புத்தகச் சுமை அதிகம் இல்லை . வீட்டுப்பாடம் எழுதியது அழிந்து விடாமல் சிலேட்டுப் பலகையை கையில் பிடித்தபடி சாரிசாரியாக நடந்து போவர்கள்
குறிப்பாக ஒரு சிறுவன் காலையில் கண்ணீருடன் போவான் . ஆனால் அதே சிறுவன் மாலையில் வீடு திரும்பும்போது வாயெல்லாம் பல்லாக இருக்கும் . நடையில் ஒரு துள்ளல் , வேகம்
யாரும் தண்ணீரை சுமந்து கொண்டு போனதில்லை . பள்ளியில் இருக்கும் பானைத் தண்ணீரைக் குடிக்கும் அளவுக்கு எல்லோருக்கும் உடல் நலம் இருந்த்து
மதிய உணவு பள்ளியில் கொடுப்பார்கள் . இல்லாவிட்டால் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுப் போவர்கள் . எனவே சோத்துச் சுமையும் கிடையாது
நல்ல தரமான ஆங்கில வழிப் பள்ளிக்கூடங்கள் அப்போதே நிறைய இருந்தன . ஆனால் யாரும் தமிழ் வழிக் கல்வி அரசுப் பள்ளிகளை ஒரு தாழ்வாக எண்ணியதில்லை .
கடனை உடனை வாங்கியாவது ஆங்கில வழிக் கல்விதான் படிக்க வேண்டும் என்ற சமுதாயம் அழுத்தம் இல்ல
எங்கள் அத்தா அரசு உயர் அலுவலர்தான் .
இருந்தாலும் நாங்கள் எல்லோரும்
பள்ளி நிறைவு 11 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்விதான் படித்தோம் . பெரும்பாலும் நகராட்சிப் பள்ளிதான்
சில பள்ளிகளில் மாதம் 7 ரூபாய் கட்டணம் செலுத்திய நினைவு . பெற்றோர் வருமானம் அதிகம் என்பதால்
. நடந்துதான் பள்ளிக்குப் போய்வருவோம் . பெரும்பாலும் வெகு தொலைவாக பள்ளி இருந்த இடங்கள் தவிர மதிய உணவு வீட்டில் வந்து சாப்பிட்டுப் போவோம் .
இருந்தாலும் கல்லூரி ஆங்கில வழிக் கல்வியில் எந்தத் தடங்கலும் இல்லை
என்ன ஏதோ கனவு கற்பனை எனத் தோன்றுகிறதா ? அப்படித்தான் நிலைமை தலை கீழாக மாறி விட்டது
முதுகை ஒடிக்கும் ஒரு புத்தகச் சுமை . தண்ணி இல்லாக் காட்டுக்கு பயணிப்பது போல் தண்ணீர் சுமை, உணவுச் சுமை
நடந்து போவது என்பது அரிதிலும் அரிதான காட்சி ஆகி விட்டது .
சரி வண்டிகளிலாவது போகிறார்களே என்று இருக்கும்போது பெருந் தொற்று உலகெங்கும் பரவி கல்வி கற்க பள்ளி கல்லூரிக்குப் போவதே பகல் கனவாகிப் போனது
பலஆண்டுகளுக்குப்பின் இப்போது தொற்று கட்டுக்குள் வர, கல்விக்கூடங்கள் இயங்கத் துவங்கி விட்டன
நீண்ட இடைவெளிக்குப்பின் பள்ளிககுப் போகும் மாணவர்களுக்கு ஒரு இனம் புரியாத உற்சாகம்
நிகழ்நிலை (ஆன் லைன் ) வகுப்புக்கள் மாணவர், ஆசிரியர், பெற்றோர் என அனைவர் மனதிலும் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியது ஒரு மறுக்க முடியாத உண்மை
ஒரு வழியாக அவை தற்போது நிறுத்தப்பட்டு , வகுப்புகள் நடக்கின்றன
ஆனால் நிகழ் நிலை அலுவலங்கள் குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு பிரிகக முடியாத அங்கமாகிவிட்டன
இதனால் உண்டாகும் மன அழுத்தம் சொல்லில் அடங்காத ஓன்று
பணி புரியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ,அளவில்லா வேலைச் சுமை . வரையறை இல்லாத பணி நேரம்
உடன் பணிபுரிவோர்களைப் பார்த்து உரையாட , அவர்களோடு சேர்ந்து காபி சிற்றுண்டி சாப்பிட வாய்ப்பு இல்லாமை என பல இழப்புகள்
காலப்போக்கில் குடும்ப வாழ்கையில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் .
ஏற்கனவே மண(மன) முறிவு என்பது மிக அதிகமாகி உள்ள நிலையில் , ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிக்கப்படும் வாய்ப்பு
சரி எப்படிஇருந்தாலும் துவங்கிய ஓன்று நிறைவு பெற்றே ஆக வேண்டும் .
மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது என்று சொல்வது எளிதுதான் .
ஆனால் மாற்றங்கள் நல்லவையாக இருக்கவேண்டும்
வடைச்சட்டியை விட்டு அடுப்பில் குதிப்பது போல மாற்றங்கள் இருந்தால் நாடும் தாங்காது ,வீடும் தாங்காது
இ(க) டைச் செருகல்
ஐபிஎல் போட்டி
விலை அதிகமான நுழைவுச்சீட்டுகள் மளமளவென்று விற்றுத் தீர்ந்து விட ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள சீட்டுகள் விற்காமல் தேங்கிய நிலை
அதே சீட்டுகள் விலையை பன்மடங்கு அதிகரித்த
வுடன் வெகு விரைவில் விற்றுத் தீர்ந்தன
.இது முகநூலில் வந்த செய்தி
இந்த மனப்பாங்கு நிறையப் பேரிடம் இருப்பதே கல்வி கலை மருத்துவம் பக்தி என எல்லாம் வணிக மயமாகக் காரணம்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள்
தனிக்கல்வி (private tuition) யின் விசுவரூப வளர்ச்சி இதற்கு நல்ல எடுத்துக்காட்டு
இறைவன் நாடினால் மீண்டும். சிந்திப்போம்
12032022சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment