திருமறை குரான்
குரானில்
முதன் முதலாக நிறைவாக (இறுதியாக )
அருளப்பட்ட இறைவசனங்கள் எவை ?
விடை :
முதலில் அருளப்பட்டது வசனம் 96: 1
“ஓதுவீராக, உம்மைப் படைத்த இறைவனின் திருப் பெயரை ஓதுவீராக "
இறுதியாக அருளப்பட்டது 1) 2:281
“நீங்கள் இறைவனிடம் திரும்பும் நாளை அஞ்சிக்கொள்ளுங்கள் . அப்போது ஒவ்வொருவருக்கும் அநீதி இல்லாமல் அவரவர் சம்பாதித்த அளவுக்கு கூலி வழங்கப்படும்
அல்லது
2) 5:3
“---------------இன்று உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்கு நான் முழுமையாக்கி விட்டேன் . எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்து விட்டேன் ------------ “
சரியான விடை அனுப்பிய சகோ.கள்
சிராஜுதீன் - முதல் சரியான விடை-
-ஒரு நிமிட இடைவெளியில் இரண்டாவது இடம் பெற்ற
ரவிராஜ் சிறப்புப் பாராட்டுக்குரியவர் . அவருடைஆர்வமும் முயற்சியும் தொடர இறைவமன் அருள் புரிவானாக--
தல்லத் , பர்சான( ஹபீபா ), முத்தவல்லி அக்பர் அலி
பீர் ராஜா , ஷர்மதா
அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
இங்கு திருமறை அமைப்பு பற்றி ஒரு சிறு விளக்கம்
1.இது முழுக்க முழுக்க இறைவனின் மொழி
2. 1, 2,நாட்களல்ல , வாரங்களல்ல ,மாதங்கள் அல்ல , ஆண்டுகள் அல்ல –
23 ஆண்டுகளில் சிறு சிறு பகுதிகளாக அருளப்பெற்று நபித் தோழர்கள் மனதிலும் எழுத்து வடிவிலும் நிலை நிறுத்திக் கொள்ளப் பட்டன
நபிகளுக்குப் பின்னால் வந்த ஆட்சியாளர்கள் பெருமுயற்சி செய்து நபித் தோழர்களிடமிருந்து உள்ளவற்றை சேகரித்து, பலமுறை சரிபார்த்து இன்று திருறை இருக்கும் வடிவில் தொகுக்கப்பட்டது
எனவே வசனம் அருளப்பட்ட காலம் என்பது அதன் பொருளில் இருந்து கணிக்கப்பட்டு, நம்பத் தகுந்த செவி வழிச செய்தியாகக் கிடைக்கிறது
ஒரு சகோ “ முதல் அல்கம்து சுராஹ்(1), கடைசி அந்நாஸ்(114) என்று விடை :அனுப்பியது இந்தத் தெளிவு இல்லாததால்தான்
புனித ரமலான் மாதத்தில் குரான்,சூராக்கள் அமைப்பு பற்றி இறைவன் அருளால் எழுத முயற்சிக்கிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
110320222வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment