தமிழ் அறிவோம்
*தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்*
பொருள் என்ன ?
இதற்கு வந்த விடைகள் சில
தட்டான் என்பது தட்டையான அரிசியை குறிக்கும். சட்டை போட்டால் என்பது அரிசியின் மேல் உள்ள தோல். குட்டை பையன் என்பது அறுவடை செய்யும் நபர் விவசாயி. கட்டையால் அடிப்பான் என்பது நெல் அறுத்தவுடன் களத்தில் போட்டு கட்டையால் அடிப்பார்கள் அப்போது தான் நெற்கதிரை விட்டு நெல் தனிய வரும்.
.
..வாமனர், 'நான் வர சற்று தாமதம் ஆகி விட்டது. இருப்பினும் எனக்கு பெரிய தானங்கள் எதுவும் தேவையில்லை. என் உயரத்தை போன்றே இந்த உலகில் மூன்று அடி மண் கொடுத்தால் போதும்' என்றார். அவரது வேண்டுதலை தட்டமுடியாமல் தானம் கொடுக்க ஒப்புக்கொண்டான் மகாபலி.
உயர்ந்து நின்ற வாமனர் முதல் அடியைக் கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்து முடித்தார். பின்னர் மகாபலியிடம், 'சக்கரவர்த்தியே! நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது' என்று கேட்டார். 'இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்' என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான். மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலை மீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார். மகாபலியின் பெருமையை உலகறியச் செய்தார்.
அப்புறம் என்ன பின் சுக்ராச்சாரியார் தன் தவறை உணர்ந்தார். அவரை மன்னித்து, கொடுப்பதில் வள்ளலான மகாபலிச் சக்கரவர்த்தியின் புகழை உலகறிய செய்தவர் பெருமாள். இது தான் "தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்..." என்பதற்கான விளக்கம்
.போஸ்ட்டு கவர். உறையிலட்ட அஞ்சல் தான் அது. தட்டான் - கடிதம், சட்டை போட்டால் - உறையிலிட்டால், குட்டைப் பையன் கட்டையால்- அஞ்சல் முத்திரை, அடிப்பான் - பதித்தல்..
.
இவையெல்லாம் ஓரளவு சரியான விடைகளே
ஆனால் முழுமையான பொருள் வரவில்லை
குறிப்பாக விவசாயி எப்படி குட்டைப் பையன் ஆகிறார் என்பது தெரியவில்லை
.
நான் படித்தது :
இந்த விடுகதையில் ஒரு புராணக்கதை இருக்கிறது
தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான். ( தட்டான் - மஹாபலிச் சக்கரவர்த்தி )
தட்டானுக்கு சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள்.
மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும்போது பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் தானம் கேட்கிறார். ( குட்டை பையன் - வாமன அவதாரத்தை குறிக்கிறது. ) ஆனால் சுக்ராச்சாரியார் மஹாபலி தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது நம் குட்டைப் பையன் வாமனர் என்ன செய்யறார்?
ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தி சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி விடுமாறு செய்கிறார். பின் சுக்ராச்சாரியார் தன் தவறை உணர்ந்தார்.
அவரை மன்னித்து, கொடுப்பதில் வள்ளலான மஹா பலிச் சக்கரவர்த்தியின் புகழை உலகறிய செய்தவர் பெருமாள்.
இது தான் “தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…” என்பதற்கான விளக்கம்
பங்கேற்று ஓரளவு சரியான விடை அனுப்பிய அறிஞர்கள்
சகோ ரவிராஜ்
செல்வக் குமார் &
விஸ்வநாதன்
அனைவருக்கும் நன்றி
.
.
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
2303022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment