கேடில் விழுச் செல்வம்
சாந்தியும் சமாதானமும் உலகெங்கும் பரவட்டும்
இப்படித்.தான் எண்ணுகிறோம், ஆசைப்படுகிறோம் சொல்கிறோம்
ஆனால் நடப்பது அப்படி இல்லை
மிக எளிதாக 21,000 மாணவிகளின் படிப்பை சீர் குலைத்து விட்டார்கள்,
வெண்ணெய்திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்து விட்டார்கள்
தங்கள் குறிக் கோளை , இலக்கை அடைந்து விட்டர்கள்
. இது ஒரே ஒரு மாநிலத்தின் எண்ணிக்கை
அதுவும் அமைதிபூப்ங்காவாகக் கருதப்படும் தென் பகுதியில் --
நாடு முழுதும் பரவினால் ?
ஆனால் சற்று சிந்தித்து ஓன்று பட்டு செயல் பட்டால் விரைவில் இதற்கு ஒரு தீர்வு காணலாம்
நம்மிடம் இறைவனருளால் மனித வளமும் செல்வமும் நிறைய குவிந்து கிடக்கின்றன
20 கோடி மக்கள் என்பது ஒரு மிகப்பெரிய பலம்
மனித வளம் சரி , பணம் எங்கே என்பது ஒரு இயல்பான ஐயம் , வினா
ரமலான் மாதம் நெருங்கி விட்டால் என் மனதில் தோன்றும் முதல் எண்ணம்
சக்காத்து , சதக்கா போன்ற தருமத் தொகைகளை முறைப்படுத்தி சமுதாய முன்னேற்றத்துக்கு , வளர்ச்சிக்கு பயன் படுத்தினால் ,இல்லாமை, அறியாமை , கல்லாமை எல்லா ஆமைகளையும் பெருமளவில் குறைத்து விடலாம்
இந்தியாவின் ஆண்டு சக்காத்து, சதக்கா தொகை எவ்வளவு என்பதற்கு தெளிவான கணக்கு இல்லை
ஆனால் இந்தத் தொகை7,500 கோடி முதல் 40 ஆயிரம் கோடிவரை இருக்கலாம் என நம்பப் படுகிறது
இரண்டுக்கும் நடுவில் 20 ஆயிரம் கோடி என்று வைத்துக்கொள்வோம்
அதில் பாதி 10 ஆயிரம் கோடி கல்விக்கு ஓதிக்கினால் கூட சமுதாயம் நினைக்க முடியாத உயர்த்தை , சிகரத்தை அடையும்
10 ஆயிரம் கோடி
ஒரு கோடி – நூறு லட்சம்
10 ஆயிரம் கோடி என்றால் 10 லட்சம் மாணவர்களுக்கு லட்சம் ரூபாய் ஆண்டு தோறும் கொடுக்கலாம்
ஆனல் நான் சொல்ல வந்தது அதுவல்ல
இந்தப் பெருந்தொகையை வைத்து பள்ளிகள், கல்லூரிகள் – கலை அறிவியல், மருத்துவம், பொறியியல் , விவசாயம் மேலாண்மை சிறப்புக் கல்லூரிகள் – IIT, AIMS , IIM போல நாடெங்கும் துவக்கப்பட வேண்டும் .அங்கு சமயக் கல்வியும் சொல்லித்தர வண்டும்
இப்போதும் சில பள்ளிகள், கல்லூரிகள் எல்லாம் இருக்கின்றன , ஆனால் பெரும்பாலும் எளிய மக்களுக்கு எட்டாத தொலைவில்
நல்ல மதிப்பெண் எடுத்த மாணவருக்கு மேல் படிப்புக்கு உதவும் திட்டமும் இருக்கிறது ஆனால் அப்படிப் படித்த மாணவர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளானார்கள் எனபது அவர்குக்குத்தான் தெரியும் . அவர்களுக்கு தனி சீருடை, வகுப்பில் தனியாக உட்கார வைத்தல் , மற்ற மாணவர்கள் ஏளனமாகப் பார்த்தல் என ஒரு மிகப் பெரிய அளவிலானா தனிமைப் படுத்தல்
இந்தக் குறைகளைக் களைந்து வணிக நோக்கில் இல்லாமல் சமுதாயப் பார்வையில் பள்ளி, கல்லூரிகள் இயங்க வேண்டும் . கட்டணம் மிக எளிதான ஒன்றாக் இருக்க வேண்டும்
அவ்வளவு எளிது அல்ல இது . ஆனால் மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொள்ள சற்று சிரமப்பட்டுத்தான் ஆகவேண்டும்
ஒரு எடுப்பெடுத்து முழு மூச்சோடு முயற்சித்தால் இறைவன் அருளால் வரும் கல்வி ஆண்டிலேயே பள்ளி, கல்லூரிகளைத் துவக்கி விடலாம் ..
தேவ்வைபட்டால் பள்ளிவாசல்களை இப்போதைக்கு பள்ளி, கல்லூரியாகப் பயன்படுத்தலாம்
மதரசாக்களில் உலகக் கல்வியுடன் இணைந்த பாடத்திட்டம் இருக்க வேண்டும் .அங்கிருந்து பட்டம் பெற்று வருபவர் அரச வேலைக்குத் தகுதி உள்ளவராய் இருக்க வேண்டும்
இதெல்லாம் பெரிய எடுப்புகள் இதில் நான் என்ன செய்யமுடியும் என்று கேட்கலாம்
தனி மரம் தோப்பாகதுதான் . ஆனால் மரம் எல்லாம் சேர்ந்தால்தானே தோப்பு .
தனி மரமும் தன் பங்குக்கு நிழல் , காய் கனி கீரை என்று அள்ளிக் கொடுப்பதைப் பார்க்கிறோம்
ஒரே ஒரு வாழை மரம், முருங்கை மரம் காய்த்து விட்டால் என்ன செய்வது , யாருக்குக் கொடுப்பது என்று திகைக்க வைக்கிறது
நாம் ஆறறிவு படைத்த மனித குலம் . இறைவன் படைப்பில் மிகச் சிறந்த படைப்பு
உங்கள் தருமத் தொகையில் பாதிக்குக் குறையாமல் கல்விக்கு மட்டுமே கொடுப்பது என்று உறுதி செய்து கொள்ளுங்கள்
முடிந்தால் உங்கள் மகன் , மகள் போன்ற குடும்ப உறவுகளையும் இணைத்துக் கொள்ளுங்கள் .பிறகு மற்றவர்கள்
இந்த ஆண்டே அதை செயல்படுத்துங்கள்
சமுதாயத் தலைவர்கள் பங்கு இதில் மிகப் பெரிது . கல்வி நிலையங்களைத் திறப்பது இப்போது ஒரு அவசியத் தேவையாகி விட்ட்து . நாடு தழுவிய அளவில் ,மாநில அளவில் ஜமாஅத் அளவில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல் படுத்தப் பட வேண்டும்
எல்லா நல்ல முயற்சிகளுக்கும் இறைவன் துணை இருப்பன்
சிந்திப்போம் . ஓன்று படுவோம் , செயல் படுவோம்
நல்ல நோக்கத்தில் முயற்சித்து இறைவன் அருளும் கிடைத்து விட்டால் குதிரையை என்ன யானையைக் கூட பறக்க வைக்க லாம்
எல்லோரையும் படிக்க வைக்கலாம்
இ(க)டைச்செருகல்
1.,ஒரு கல்லூரி முதல்வர் மனம் நொந்து நிற்கும் மாணவர் ஒருவருக்கு ஆறுதல் சொல்கிறார்
“என்னைப்பார் , என் தோற்றத்தையும் குலத்தையும் வைத்து ஆடு மாடை விரட்டுவது போல் விரட்டுவார்கள் ஒரு காலத்தில் . படிப்பு பதவி வந்தவுடன் அவர்களே தலை வணங்குகிறார்கள்
எப்படியாவது படித்து விடு “
2.கல்விக்கு முதல் இடம் கொடுத்த ஒரு சமுதாயம் எப்படி உயர்ந்து நிற்கிறது !
நாட்டுபற்றுக்காக் ஆங்கிலத்தைப் புறக்கணித்த சமுதாயம் எவ்வளவு பின் தங்கி விட்டது !!
இப்போது நம் நாட்டுப்பற்று என்ன ,குடியுரிமையே கேள்விக்குறியாகி வருகிறது
வழக்கம்போல மனதில் தோன்றியவற்றை அப்படியே எழுத்தில் வடித்து விட்டேன் . பிழையிருந்தால் அந்த இறைவன் மன்னிப்பான்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
01042022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment