Friday, 1 April 2022

கதை சொல்லும் குரான் - முன்னுரை

 கதை சொல்லும் குரான்

புனித ரமலான் மாதம் விரைவில் துவங்க உள்ளது . சென்ற சில ஆண்டுகள் போல இந்த ரமலான்மாதம் முழுதும் இறைவன் அருளால் குரான் பதிவுகள் போட எண்ணம் .
எண்ணத்தில் மாற்றம் , குழப்பம் இல்லை . ஆனால் என்ன போடுவது என்பதில் கொஞ்சம் தெளிவின்மை,
முதலில் குரான் வசனங்கள் சொல்லும் வரலாற்றுக் கதைகளை முழுமையாக பதியலாம் என்ற எண்ணத்தில் நபி இப்ராகிம் அலை அவர்கள் கதையைத் துவக்கினேன் , ஏறத்தாழ நிறைவு செய்யும் அளவுக்கு எழுதிவிட்டேன் .
ஆனால் அதன் நீளம் அளவு எல்லாம் பார்க்கும்போது இது போல் ஒரு சில நபிமார்களின் கதையைப் போட இந்த மாதம் முழுதும் போதாது எனத் தோன்றியது .
எனவே அதை மாற்றி குரான் வசனங்கள் அடிப்படையில் அமைந்த சிறு நிகழ்வுகளை கதைகளை எழுத எண்ணம் .இறைவன் நாட வேண்டும்
“நபியே ! உமக்கு இந்த குரான் மூலம் நீங்கள் அறியாதிருந்த பல வரலாறுகளை அழகிய முறையில் எடுத்துச் சொல்கிறோம் “ 12:3
என்ற கருத்துடைய இந்த வதனம் யூசுப் சூராவில் வருகிறது .பல சிறப்பு வாய்ந்த இந்த சூராவ மிகப்பல சிறப்புகள் வாய்ந்த நபி யூசுபின் கதை முழுமயாகச் சொல்கிறது
இப்படி குரான் முழுதும் சிறிதும் பெரிதுமாக பல நபிகள் வரலாறு, முதல் மனிதன் வானுலகில்இருந்து பூமிக்கு அனுப்பபட்டது, சைத்தான் , பல போர்கள் ,
என எண்ணற்ற வரலாறுகள் பரவி இருக்கின்றன .
முன்னோட்டமாக குரான் அமைப்பு பற்றி மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்
குரான் என்பது முழுக்க முழுக்க இறைவனின் படைப்பு -.
அந்தப் புனிதப் படைப்பு பூமிக்கு வந்து மக்களை சென்றடைய ஒரு ஊடகமாக விளங்கிய பெருமை நபி முருமான் அவர்களுக்கு
ஒவ்வொரு நபிக்கும் அற்புதங்களை இறைவன் கொடுத்திருக்கிறான்
அந்த வகையில் முகமது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கிய அற்புதம் புனிதக் குரான்
வேறு வேறு கால கட்டங்களில் மக்காவிலும் மதினாவிலுமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறிது சிறிதாக் இறக்கப்பட்டது குரான்
குரானை படைத்த இறைவனே அதைப்பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டான்
குரான் வசனங்கள வானவர் தலைவன் ஜிபரில் அலை மூலமாக இறைவனிடமிருந்து நபி அவர்களுக்கு வந்து வஹி வழியாக இறங்கும். அப்போது நபி அவர்கள் இயல்பு நிலையில் இருந்து மாறி ஒரு வித இறைதியான நிலைக்குப் போய்விடுவார்கள் . வியர்வை ஆறாகப் பெருகும் . நபி அவர்கள் அந்த வனங்க்ளைச் சொல்லச சொல்ல அருகில் உள்ள நபித்தோழர்கள் அவற்றை மனதிலும் எழுத்திலும் பதித்துக் கொள்வார்கள்
முதலில் இறங்கிய வசனம்
“ஒதுவீராக , உம்மை படைத்த இறைவனின் திருப்பெயரை ஒதுவீராக “
இது சூராஹ் 96 : 1 ஆக வருகிறது
“--------இன்று உங்கள் மார்க்கத்தை நான் உங்களுக்கு முழுமையாக்கி விட்டேன் “
என்ற நிறைவு வசனம் சூராஹ் 5:3 ல் வருகிறது
அதாவது இப்போது நாம் காண்பது போல் முதலில் முதல் சூராஹ், இறுதியில்
114 என்று வரிசைப்படி இறங்கவில்லை
அதனால் புதிதாகப் படிப்பவர்களுக்கு சற்று குழப்பமாக் இருக்கும் .புரியாதது போல இருக்கும்
ஒவ்வொரு சூராவுக்கும் இரு முன்னுரை இருக்கும் . அதில் வசனங்கள் இறக்கப்பட்ட காலம் , தேவை எல்லாம் இருக்கும். அதைப் படித்த பின் சுராவைப் படித்தால் ஓரளவு புரியத் துவங்கும்
குர்ஆனில் சிறிதும் பெரிதுமாக 114 அத்தியாயங்கள் - சூராக்கள் இருக்கின்றன
இந்த 114 சூராக்கள் ஓரளவு சம அளவிலான 30 ஜூசுக்களாக்ப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன
இது போக 7 மன்ஜில்கள் என பல பிரிவுகள் இருக்கின்றன
சூராவின் பெரும்பகுதி இறக்கப்பட்ட இடத்தைப் பொறுத்து மக்கா சூராஹ், மதீனா சூராஹ் என சொல்லப்படுகின்றன
இப்படிபல ஆண்டுகளில் வேறு வேறு இடங்களில்அருளப்பட்ட இந்த புனித நூலின் நடை மொழி,.இலக்கிய, இலக்கண , கவிதை அமைப்பு ,அரபு மொழி மட்டுமல்லாது எல்லா மொழி அறிஞர்களையும் வியக்க வைக்கிறது
குறிப்பாக சூராஹ் 55 அர்ரஹ்மான் – குரானின் அழகு எனப்படும் இதில் உள்ள 78 வசனங்களில் ஒரே வசனம் 31 முறை திரும்பத் திரும்ப வருகிறது . எந்த மொழியிலும் இல்லாத இந்த கவிதை அமைப்பு மனித சக்திக்கு அப்பாற்பட்டது
இதற்கு மேல் சுராஹ் 2 அல்பகரா – குரானின் மிக நீளமான சுராஹ் - இது முழுதும் மோதிர ( ring structure) வடிவில் அமைந்துள்ளது தெள்ளத் தெளிவாக இது இறைவன் படைப்பு என்பதைச் சொல்கிறது
114 சூராகளில் என்ன சொல்கிறது குரான் ?
என்ன சொல்லவில்லை என்றுதான் கேட்கத் தோன்றும்
சமயக் கோட்பாடுகள், சமுதாயக் கடமைகள் , அரசு நிர்வாகம், சட்டம் , நீதி
குடும்ப உறவுகள்,திருமணம் .மண முறிவு, சொத்துப்பங்கீடு பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் , பொருளாதாரம், இதெல்லாம் போக etiquette எனப்படும் நுட்பமான நல்லொழுக்கங்கள், -- அனுமதி இல்லாமல் யார் வீட்டிலும் நுழையாதீர்கள் , ஒரு வயதுக்கும்மேல் பெற்றோர் அறைக்குப் போவதற்கு குழந்தைகள் அனுமதி பெற வேண்டும் , அழைப்பில்லாமல் உணவுக்குப் போகாதீர்கள், ,அழைப்பு வந்தால் , சாப்பிட்ட பின் உடனே கிளம்பி விடுங்கள் -இது போல ஏராளமான அறிவுரைகள்
மேலும் நூலின் மையக் கருத்தான ஏக இறை கொள்கையை தொடர்ந்து வலியுறுத்திச் சொல்கிறது
என் சிற்றறிவுக்கு (பேரறியாமைக்கு ) எட்டிய சில அற்புதங்கள்
குரானை எத்தனை முறை படித்தாலும் புதுமையாகவே இருப்பது
குரான் படிக்கும்போது உண்டாகும் ஐயங்களுக்கு குரானிலே விடை கிடைத்து விடுவது
இன்னும் குரான் பற்றி எழுதிக்கொண்டே போகலாம் . ஒரு அளவுக்கு மேல் படிக்க முடியாது , படித்தாலும் மனதில் நிற்காது
குரானைப் பற்றி என்ன எழுதினாலும் அது எனக்கு மிகப்பெரிய பாரமாகவே இருக்கும்
அந்த பாரத்தையும் பொறுப்பையும் இறைவன் மேல் சுமத்தி விட்டு எழுதத் துவங்குகிறேன்
படிக்கும் பெருமக்கள் அதில் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டி, பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன்
புனித ரமலான் மாதத்தின் பலன் நம் அனைவருக்கும் குறைவின்றி முழுமையாகக் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .
இறைவன் நாடினால் நாளை குரான் கதையில் சிந்திப்போம்
02042022 சனி
சர்புதீன் பீ
May be an image of one or more people and text
Like
Comment
Share

No comments:

Post a Comment