Wednesday, 20 April 2022

கதை சொல்லும் குரான் கதை 19 நன்றி சுராஹ் 11 ஹூத் j 12

 கதை சொல்லும் குரான்

கதை 19
நன்றி
சுராஹ் 11 ஹூத் j 12
“ஹூத் சுரா என்னை முதுமை அடையச் செய்கிறது”
என நபி பெருமான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்
அபூபக்ர் அவர்கள் நபியைப் பார்த்துக் கேட்கிறார்கள்
கொஞ்ச நாளாக நீங்கள் மிகவும் முதுமையாகத் தோன்றுகிறீர்கள். என்ன காரணம் ?
அதற்குத்தான் நபி அவர்கள்
“ஹூத் சூராவும் அதை ஒத்த மற்ற சூராக்களும் என்னை முதுமை அடையச் செய்கின்றன” என்று சொல்கிறார்கள்
அந்த அளவுக்கு நபிகளின் வாழ்வில் சோதனையும் வேதனையும் நிறைந்த கால கட்டம்
ஒருபக்கம் ஏக இறைக்கொள்கையை முறியடிக்க குறைஷிகள் செய்து வரும் பெரு முயற்சிகள்
இன்னொரு பக்கம் தொடர்ந்து இறைவன் அனுப்பும் மறுமை பற்றிய செய்திகள ,எச்சரிக்கைகள்
மறுமை நாள் மிக அருகில் வந்து விட்டதோ . மக்கள் வேதனைக்கு உள்ளாக்கப்படுவார்களோ என் எண்ணவைக்கும் மிகக் கடுமையான எச்சரிக்கைகள்
இது இந்த சுராவுக்கு ஒரு அறிமுகமாகவும், அதன் மையக் கருத்தாகவும் அமைகிறது
“மறுமை நாளில் உங்களிடம் கணக்குக் கேட்கப்படும் “
இந்த எண்ணத்தை, நம்பிக்கையை உங்கள் வாழ்வின் அடிப்படையாக அமைத்துக்கொண்டு , ஏக இறைவனை மட்டுமே வணங்குங்கள் “
உலகின் மிக வலிமையான் சொற்களில் ஓன்று “நன்றி “
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினம் பற்றியும் இறைவன் நன்கு அறிவான்
அது வாழுமிடம் செல்லுமிடம் பற்றி எல்லாம் தெளிவாக ஒரு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
இவை அனைத்திற்கும் உணவு கொடுப்பது இறைவனின் பொறுப்பு (11:6)
யாராவது நமக்கு ஒரு உதவி செய்தால் , ஒரு வாழ்த்துத் தெரிவித்தால் கூட உடனே நன்றி செலுத்துகிறோம்
ஆனால் உலகைப் படைத்து , உயிரினங்களைப் படைத்து உணவும் அளித்துப் பாதுகாக்கும் இறைவனுக்கு நன்றிஉடையவராய் இருக்கிறோமா?
இது பற்றி இறைவன் என்ன சொல்கிறான்
மனிதனுக்கு நாம் கருணையினால் அளித்த நற்கொடையை எப்போதாவது திரும்ப எடுத்துக்கொண்டால் உடனே நம்பிக்கை இழந்து முழுதுமாக நன்றி மறந்தவனாகின்றான் (11:9)
ஒரு துன்பத்துக்குப்பின் மீண்டும் நம் கருணையை அவனுக்கு வழங்கினால் அவன் மிகவும் தன்னை மீறிய மகிழ்ச்சியில் தன துன்பமெல்லாம் நீங்கி விட்டதாக பெருமை பாராட்டுகிறான் (11:10)
இந்த சிறிய வசனம் அன்று மக்கமாநகரவாசிகள் கொண்டிருந்த மன நிலையைத் தெளிவாக்குகிறது
இறைவனின் கட்டளையை மீறினால் ஏற்படும் விளைவுகள் பற்றி நபி பெருமான் எச்சரிக்க முயலும்போதெல்லாம்
“உங்களுக்கென்ன பைத்தியமா ?
எங்கள் செல்வச் செழிப்பும் வலிமையும் உங்கள் கண்ணில் படவில்லையா ?
நல்ல வசதியான வாழ்க்கை வாழ்கிறோம்
எல்லோர் மீதும் எல்லாபொருட் செல்வங்கள் மீதும் எங்கள் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது
இந்த நிலையில் எங்கள் மீது எப்படி நீங்கள் சொல்லும் வேதனை வந்து இறங்கும் ?”
என்று கேலி செய்தார்கள்
இறைவனின் கருணையை மறந்து, மறுமை பற்றி சிந்தனை இல்லாமல் நன்றி மறந்த நிலையில் வாழ்வதே இந்தப் பேச்சின் அடிப்படை
(இந்த எச்ரிக்கை இன்று நமக்கும் பொருந்தும் போல் எனக்குத் தோன்றுகிறது .நான் , எனது, என் முயற்சி, என் திறமை எனும் ஆணவச் சொற்கள் எங்கும் ஒலிக்கின்றன
இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் ).
சுராஹ் 11 ஹுத் 123 வசனங்கள்
(வசனம் 50 முதல் 60 வரை ஹுத் நபி பற்றிச் சொல்லப்படுகிறது
அந்த ஹுத் என்ற சொல்லே சூராவின் பெயராக அமைந்துள்ளது
வசனங்கள் சில, அவற்றின் விளக்கங்களைப் பார்ப்போம்
நுஹ் நபி தன் கூட்டத்தாரிடம் ஏக இறைதத்துவத்தை பரப்ப பலவாறாக முயற்சிக்கிறார்
அவர்களோ நபியை பொய்யர் என்று தூற்றுகின்றனர்
“நுஹே உம்முடைய வாதம் நீண்டுகொண்டே போகிறது
நீர் உண்மையானவராக இருந்தால் நீர் சொல்லி அச்சுறுத்தும் அந்த தண்டனையை உடனே இறக்கி வையும் “ என்கிறார்கள் (11:32)
நுஹ் “இறைவன் மட்டுமே அதுவும் அவன் நாடும் போது உங்கள் மேல் இறக்கி வைக்க முடியும் . அது உங்களால தாங்க முடியாத ஒரு வேதனையாக இருக்கும் (11:33)
நான் உங்களை நல்வழிப்படுத்த முயற்சித்தாலும் இறைவன் உங்களை வழி கேட்டில் நடத்த எண்ணி விட்டான் . அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் (11:34)
நுஹ் நபி 1000 ஆண்டுகள் முயற்சித்தும் நூற்றுக்கும் குறைவானவர்களே ஓரிறை வழியை ஏற்கிறார்கள்
ஒரு மிகப்பெரும் மழைப் பொலிவு, அதனால் ஊரெங்கும் வெள்ளக்காடு
நுஹ் நபியைப் பின்பற்றியவர்கள் மட்டும் அவரின் மரக்கலத்தில் ஏறி உயிர் பிழைக்க , மற்ற அனைவரையும் வெள்ளம் அழித்து விடுகிறது
ஆத் சமுதாயத்தை நல்வழிபடுத்த இறைவன் ஹுத் நபியை அனுப்பி வைக்கிறான் . அவர்கள் அவரை ஏற்க மறுக்கிறார்கள்
“இவ்வுலகில் அவர்கள் சபிக்கபட்டார்கள்
தீரப்பு நாளிலும் அதே சாபம் அவர்களைத்தொடரும்
இறைவனை நம்ப மறுத்த ஆத் கூட்டத்தார் அழிக்கப்பட்டார்கள் --- (11:60)
தமுத் சமுதாயத்துக்கு இறைவன் ஸாலிஹ் நபியை அனுப்பி வைத்தான்
அவரை மறுத்த அந்த சமுதயத்தை அழித்து விட்டான்
ஒரு பலத்த வெடியோசை
அவர்கள் உயிரற்று தங்கள் வீடுகளில் விழுந்து கிடந்தார்கள்
அவர்கள் அங்கு வாழ்ந்தார்களா என்ற ஒரு ஐயம் ஏற்பட்டது --(11:67,68)
மிகத் தவறான வழியில் சென்ற லூத் நபி சமுதாயம் நபிக்குத் துணையாக வானவர்களை அனுப்பியும் அவர்கள் திருந்தவில்லை
எம் கட்டளை (சாபம்) வந்து இறங்கியபோது அந்த ஊர் தலை கீழாகப் புரட்டப்பட்டது.
சுட்ட செங்கல் கற்கள் மழை போல் பொழிந்தன (11:82)
மக்கள் நல்வழியில் செல்லும் எந்த சமுதாயத் தையும் நாம் தவறாக அழித்ததில்லை (இறைவன் )(11:117)
இறைவன் விரும்பியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயமாகப் படைத்திருப்பான்
அப்படிப் படைக்காததால் அவர்கள் வேறு வேறு வழியில்தான் போய்க் கொண்டிருப்ப்பர்கள் (11:118)
நபியே இந்த நிகழ்வுகளை சொல்லி உங்கள் உள்ளத்தை வலிமையாக்குகிறோம்
நபி மார்களின் வரலாறுகள் வழியே உங்களுக்கு சத்தியத்தையும் நம்புவோருக்குப் படிப்பினையும் நினைவூட்டலும் வழங்குகிறோம் (11:120)
19 ரமலான் 1443
21042022 வியாழன்
சர்புதீன்
May be an image of text that says "இறைவனுக்கு நன்றி சொல் சொல்வோம்"
Like
Comment
Share

No comments:

Post a Comment