Saturday, 9 April 2022

கதை சொல்லும் குரான் கதை 7 நம்பிக்கையாளர்கள் சூராஹ் 40

 கதை சொல்லும் குரான்

கதை 7
நம்பிக்கையாளர்கள் j24
“அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்று அவர் சொல்வதனால் அவரைக் கொன்று விடுவீர்களா?”
நபி மூஸா அவர்களை கொடுங்கோல் மன்னன் பிர் அவுன் கொலை செய்யத் துணிகையில் அங்கிருந்த ஏக இறை நம்பிக்கையாளர் பேசியதின் ஒரு பகுதி )
மூஸா --பிர் அவுன் நிகழ்வை இறைவன் சூராஹ் 40 (அல் முக்மினின்) இல் எடுத்துச் சொல்வது எதற்காக ?
நபி பெருமானாருக்கு எதிராக இரண்டு வகையான செயல்களில் இறங்குகிறார்கள் அவரது எதிரிகள்
ஓன்று , சண்டை, சச்சரவுகள், வீண் விவாதங்கள், தேவைஇல்லாத ஐயங்கள் மூலம் நபி பெருமான் பற்றியும் குரான் வசனங்கள் பற்றியும் ஒரு குழப்பத்தை மக்களிடையே விதைப்பது
அடுத்து நபி பெருமானின் உயிரைப் போக்கி விடுவது .
அதற்காக சதித்திட்டங்கள் உருவாகிக் கொண்டிருந்தன
திட்டத்தின் செயலாக்கமாக ஒரு நாள் நபிஅவர்கள் புனித காபா வளாகத்தில் இறைவனை வணங்கிக்கொண்டிருக்கும்போது அபி முஆஇத என்பவன் வேகமாக நபியை நோக்கிபோகிறான் . போன வேகத்தில் நபி அவர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கி குரல்வளையை நெரித்து அவரைக் கொல்ல முயற்சிக்கிறான்
தக்க சமயத்தில் அங்கு வந்த அபூபக்ர் அவர்கள் அவனைத் தள்ளி விடுகிறார்கள் .
அந்தப் போராட்டத்தின் போது அபூபக்ர் சொன்ன சொற்கள்
“அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்று அவர் சொல்வதனால் அவரைக் கொன்று விடுவீர்களா?”
சுராஹ் 40 அல் முக்மினின் (நம்பிக்கியாளர்கள் ) எண்பத்தைந்து வசனங்கள் கொண்ட இந்த சூராவில் 33 வசனங்கள் (23---55) எதிரிகளின் கொலை முயற்சிகள், சதித்திட்டங்களுக்கு மறுமொழி போல் அமைந்துள்ளன
இறைவன் ஆணைப்படி நபி மூஸா, அவரது சகோதரர் நபி ஹாருன் இருவரும் கொடுங்கோல் மன்னன் பிர் அவுனிடம் ஏக இறைக்கொள்கையை எடுத்துச் சொல்லப் போகிறார்கள் . அவனோ இவர்களை , இவர்கள் நல்லுரைகளை வெறுத்துத் தள்ளியதோடு மூசாவைக் கொலை செய்யவும் முயற்சிக்கிறான்
அந்த கொடுங்கோலன் கூட்டத்திலும் ஏக இறை நம்பிக்கையாளர் ஒருவர் இருக்கிறார் . தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அச்சம் அவருக்கு .
அவரைக் குறிப்பிட்டே இந்த சூராவுக்கு நம்பிக்கையாலார்கள் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது
அவர் பேசியதின் ஒரு பகுதிதான் துவக்கத்தில் கொடுக்கபட்டுள்ளது :
“அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்று அவர் சொல்வதனால் அவரைக் கொன்று விடுவீர்களா?”
முழு வசனம்
” இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் கொணர்ந்திருக்கிறார்
அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்று அவர் சொல்வதனால் அவரைக் கொன்று விடுவீர்களா ?
அவர் சொல்வது பொய்யாக இருந்தால் அது அவருக்கே கேடாகி விடும்
ஆனால் அவர் சொல்வது உண்மையாக இருந்தால் அவர் எந்த மோசமான விளைவுகள் பற்றி எச்சரித்தாரோ அவற்றில் சில உங்களைத் தாக்கக் கூடும்
வரம்பு மீறுவோருக்கும் பொய்யர்களுக்கும் இறைவன் நல்வழி காண்பிப்பதில்லை என பிர் அவுன் கூட்டத்தைச் சேர்ந்த இறை நம்பிக்கையாளர் ஒருவர் சொல்கிறர் . அவர் தான் நம்பிக்கை கொண்டது பிறருக்குத் தெரியாமல் காக்கிறார் (40:28)
தொடர்ந்து அவர் சொல்கிறார்
“என் சமுதாய மக்களே ! இன்று இது உங்கள் அரசாட்சி நீங்களே பூமியில் மேலோங்கி நிற்கிறீர்கள் . ஆனால் இறைவனின் தண்டனை உங்களுக்கு வந்தால் உங்களைக் காப்பாற்றுபவர் எவர் ? “
பிர் அவுன் சொல்வது :” எனக்கு சரி என்று படுகிற கருத்தை உங்களுக்குச் சொல்வேன் , நானே நேர் வழியைக் காண்பிக்கிறேன் (40:29)
இன்னும் சில வசனங்கள்
நிச்சையமாக நாம் மூசாவை சான்றுகள், தெளிவான அதிகாரத்துடன் பிர் அவுன் , ஹமான் , கோராஹ் இவர்களிடம் அனுப்பினோம்
அவர்களோ மூசா ஒரு முழுப் பொய்யர், மந்திரவாதி என்று தூற்றினர்(40:23,24)
“ நான் மூசாவைக் கொல்லப் போகிறேன் அவர் தன் இறைவனை அழைக்கட்டும்
அவரை விட்டு வைத்தால் அவர் உங்களை மதம் மாற்றி பூமியில் குழப்பத்தை உண்டாக்குவார் என அஞ்சுகிறேன் “ என்று பிர் அவுன் ஒரு நாள் சொல்கிறான் (40:26)
பிர் அவுன் சொல்கிறான் :”ஹமானே எனக்காக ஒரு உயரமானா கோபுரத்தைக் கட்டு. அதில் ஏறி நான் வானத்தின் வழிகளைக்கண்டு மூசாவின் கடவுளைப்பார்க்க வேண்டும் . நிச்சயமாக மூஸா ஒரு பொய்யர்தான் “
பிர் அவுனின் தீய செயல் அவனுக்கு அழகாக்கிக் காட்டப்பட்டது
நேர் வழியில் இருந்து அவன் தடுக்கப்பட்டான்
அவனுடைய சூழ்சிகள் அனைத்தும் அவனுக்கே அழிவுப் பாதை ஆகி விட்டன (40:36,37)
இந்த சூராவில் சொல்லப்படும் இன்னும் சில கருத்துக்கள் :
மறுமை நாளின் காட்சி
“என்னிடம் இறைஞ்சுங்கள் ;நான் உங்கள் இறைஞ்சுதலை ஏற்றுக்கொள்கிறேன் “ இறைவன்
நம்பிக்கை கொண்டு புரிந்து கொள்வோருக்கு கால்நடைகளில் இறைவன்
பற்றிய சான்று இருக்கிறது
இறைவனின் சினத்துக்குள்ளாகி அழிக்கப்பட்ட பல சமுதாயாங்கள் பற்றி அறிந்தும் இறைவனை நம்ப மறுக்கிறார்கள்
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குரானில் சிந்திப்போம்
07ரமலான் 1443
09042022 சனி
சர்புதீன் பீ
"
May be an image of text
1 comment
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment