கதை சொல்லும் குரான்
கதை 21
சப்பாத் தினம்
சுராஹ் 7 அல் அராப் (உயரங்கள்
“ “மாறி விடுங்கள் !
குரங்குகளாகி விடுங்கள் !!
இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள் !!!
இறைவனை மறந்து இறைவனின் ஆணைகளை மறந்து , இறைவனுடன்செய்து கொண்ட உடன்படிக்கைகளை மீறி தொடர்ந்து தவறு செய்தவர்களைப் பார்த்து இறைவன் இவ்வாறு சொல்கிறான்
.சப்பாத் தினம் –
சனிக்கிழமை இஸ்ரவேலர்களுக்கு சப்பாத் எனும் புனித தினமாகும்
அந்த நாளில் அவர்கள் உலக நடவடிக்கை எதிலும் ஈடுபடக் கூடது
சமையல் செய்யக்கூடாது . பணியாட்களையும் பரிமாறச் சொல்லக்கூடது
ஓய்வுக்கும் இறைவணக்கத்துக்கு மட்டும் உரிய நாள் அது இதை மீறுவோருக்கு மரண தண்டனை – இது இஸ்ரவேலர்கள் இறைவனோடு செய்து கொண்ட ஒப்பந்தமாகும் . (Exodus 31:
ஆனால் இஸ்ரவேலர்கள் இந்த ஒப்பந்தத்தை , இறைவனுடனான ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறினார்குள்
இந்த மீறலின் விளைவாக புனித ஜெருசலேம் நகர் தீப்பிடித்து எரியும் என்ற நபி ஜெர்மையாவின் எச்சரிக்கையை அவர்கள் சட்டை செய்யவில்லை
இப்படி மீறுவோரை சோதனை செய்வதற்காகவே கடலில் சப்பாத் தினங்களில் நிறைய மீன்கள் – தண்ணீரை மீறிக்கொண்டு வருமாறு செய்கிறான்இறைவன் . மற்ற நாட்களில் இப்படி வருவதில்லை
சப்பாத் தினக் கட்டுப்பாட்டை மறந்து அதிக மீனுக்கு ஆசைப்பட்டு மீன் பிடிக்கப் போகிறார்கள் இஸ்ரவேலர்கள்
அவர்களில் ஒரு சிலர் அவர்களைக் கண்டிக்கிறார்கள்
மற்ற சிலர் கண்டிப்பவர்களைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்
இப்படி மூன்று வகை மக்கள் இருக்கிறார்கள்
– ஓன்று தெரிந்தே தவறு செய்வோர்
இரண்டு தவறைத் தடுக்க நினைப்போர்
மூன்று கண்டும் காணாதது போல் அமைதி காத்து ஒதுங்கிப்போவோர்
இதில் தடுக்க நினைப்போரைத் தவிர மற்ற இரு கூட்டத்தாரையும் இறைவன் கடும் தண்டனைக்கு உள்ளாக்குகிறான்
தடுக்கப்பட்ட செயலைத் தொடரந்து செய்தவரகளை இறைவன் இழிவான குரங்குகளாக்கி விடுகிறான்
இறை வசனங்கள்
கடற்கரையில் இருந்த நகர மக்கள் மற்ற நாட்களில் இல்லாமல் புனித சப்பாத் நாட்களில் நீர் மட்டதைத் தாண்டி நிறைய மீன்கள் வரும்போது எப்படி சப்பாதை மதிக்காமல் போனார்கள் என்பதைமூஸா சமுதாயத்தினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்
அவர்களுடைய வரம்பு மீறிய கீழ்ப்படியாமையை நாம் இவ்வவாறு சோதனைக்குள்ளாக்கினோம் (7:163)
விளக்கம்
உரிய வாய்ப்பு கிடைத்தால் வரம்பு மீறுவோர்எவ்வளவு கீழ் நிலைக்குப் போவார்கள் என்பதை முழுமையாக வெளிப்படுத்துவதற்காக இறைவன் வரம்பு மீற வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறான்
ஒரு சாரார் சொன்னதை நினைவில் கொள்ளும்
“இறைவனின் கடுமையான தண்டனைக்கு ஆளாகி அழியப் போகும் மக்களுக்கு உங்கள் அறவுரையால் என்ன பயன் ?
அதற்கு அவர்கள் “நாங்கள் சொல்லக் கேட்டு அவர்கள் வரம்பு மீறாமல் இருக்கலாம்
மேலும் நாளை இறைவன் முன் நாங்கள் தீயதைத் தடுக்க முயற்சித்தோம் என்று மன்னிப்புக் கேட்கலாம் “ என்றார்கள் (7:164)
அவர்கள் தங்களுக்கு சொல்லப்பட்ட அறவுரைகளை மறந்தனர் . தீமையைத் தடுக்க முயன்றவர்களை நாம் காப்பாற்றினோம் ..
தவறு செய்தோருக்கு மிகக் கடுமையான தண்டனை அளித்தோம் (7:165)
ஒரு சமுதாயத்தில்தவறுகள் நடக்கும்போது “நான் தவறு ஏதும் செய்யவில்லை “ என்று சொல்லித் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது
பிறர் செய்யும் தவறுகளைக் கண்டிக்க , தண்டிக்க வழி இருந்தும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிப் போகிறவரும் தண்டனைக்குரியகுற்றவளியே
“அவர்கள் தொடர்ந்து தடுக்கப்பட்ட செயல்களை செய்ததால் “நீங்கள் இழிவான குரங்குகள் ஆகி விடுங்கள்” என்று சொன்னோம் [ (7:166)
“மேலும் மறுமை நாள் வரை அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்துகொண்டே இருப்போம் “ என உங்கள் இறைவன்அறிவித்ததை நினவு கூறும்
மிகவும் மன்னிப்பவனும் கருணை மிக்கவனுமாகிய உங்கள் இறைவன் தண்டிப்பதிலும் விரைந்து செயல் படுபவன் (7:167)
“வேதம் , இறைவனுடன் உடன்படிக்கை இவற்றின் படி நடக்காவிட்டாலும் கூட தங்களுக்கு பாவ மன்னிப்பும் சுவன வாழ்க்கையும் உறுதி செய்யப்பட்டவை “ என இஸ்ரவேலர்கள் நம்புகிறார்கள் , இது தவறான நம்பிக்கை, வேதத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததன் விளைவு 169 171 சுராஹ் 7 அல் அராப் (உயரங்கள் ,உச்சிகள் –வசனம் 46ல் வரும் சொல் இதன் பெயராகி விட்டது .மொத்தம் 206 வசனங்கள்
'
இறைவன் நாடினால் நாளை மீண்டும் கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
21ரமலான் 1443
23042022சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment