கதை சொல்லும் குரான்
கதை 15
எனக்கு மகனா!
சுராஹ் 19 மரியம் j16
எனக்கு மகனா ! எப்படி !! எந்த ஆணும் என்னைத் தொட்ட்டதில்லை ---------------(19:20)
சுராஹ் மரியம்
மரியம் இறைவன் அனுப்பிய தூதரிடம் கேட்கிறார்
இதே கேள்வி இந்த சுராவில் இன்னொரு இடத்தில் வருகிறது
இறைவா நானோ தள்ளாத வயதில் , முதுமையின் உச்சத்தில்
என் துணைவியும் அப்படியே
எப்படி எனக்கு மகன் பிறப்பான் ? (19:8)
கேட்பவர் ஜகரிய்யாஹ் (Zechariah)
இரண்டுக்கும் ஒரே மாதிரி விடை அளிக்கிறான் இறைவன்
அவ்வாறே ஆகும் . உங்கள இறைவன் சொல்கிறான்
இது எனக்கு மிகவும் எளிது . அந்தக் குழந்தை மக்களுக்கு ஒரு சான்றாகவும் கருணையாகவும் இருக்கும் , இது நடந்தே தீரும் (19:21)
இது மரியம் அவர்களுக்கு இறை தூதார் சொன்ன விடை
அவ்வாறே ஆகும் . உங்கள இறைவன் சொல்கிறான்
இது எனக்கு மிகவும் எளிது . நிச்யமாக வெறுமையில் இருந்து உம்மை நாம் உண்டாகவில்லையா ? (19:9)
இது ஜககரிய்யாஹ் வுக்கு
(இதே போன்ற நபி இப்ராஹிமிக்கும் வானவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் வேறொரு சுராவில் வருகிறது
முதலில் மரியம் அவர்கள் பற்றி பார்ப்பதற்கு முன்
ஒரு சில குறிப்புகள்
114 சுராஹ்கள் கொண்ட திருமறையில் ஒரே ஒரு சுராவுக்கு ஒரு பெண்ணின் பெயர் கொடுக்கப்ப்ட்டிருக்கிறது .
அந்தச் சிறப்பு இந்த 19 ஆவது சுராவாகிய மரியம் சுராவுக்கு
(நபி பெருமானின் அன்னை ஆமினா பற்றி குர்ஆனில் எந்த இடத்திலும் வரவில்லை என்பதும் குரறிப்பிடதக்க ஓன்று )
98 வசனங்கள் கொண்ட இந்த சூராவில் ஜகரியாவுக்கு பிறந்த யஹ்ய (ஜான் )
ஈசா நபி பிறந்த அற்புதம்
தொட்டில் குழந்தைப் பருவத்தில் தன் தாய்க்காக மக்களுடபேசியது , தான் நபி என்று அவர் அறிவித்தது
ஈசா நபி இறைவனின் மகன் அல்ல என்று இறைவன் திட்டவட்டமாக அறிவிப்பது
நபி இப்ராகிம் , மூசா நாபியின் கதை
என பல்வேறு செய்திகள் வருகின்றன
முதலில் மரியம் ,ஈசா
இறைவன் அனுப்பிய ருஹ் (தூய ஆவி , வானவர்) மனித உருவில் மரியம்
தனிமையில் திரைக்குப்பின் இருக்கும் இடத்துக்கு வருகிறார்
உம்மிடமிருந்து இறைவனின் பாதுக்ப்பைக் வேண்டுகிறேன் என்கிறார் மரியம்
நான் உங்கள் இறைவனால் உங்களுக்கு ஒரு தூய்மையான ஆண் குழந்தையைத் தருவதற்காக அனுப்பப்பட்ட தூதர் என்கிறார் வானவர்
அப்போது மரியம் கேட்ட கேள்வி , அதற்கு வானவர் சொன்ன விடை இதைத்தான் துவக்கத்தில் பார்த்தோம் (19:16—21)
தாய்மை அடைந்த மரியம் தொலைவில் உள்ள ஒரு இடத்துக்குப் போகிறார்
பேறுகால வலியின் வேதனையில் துடித்து ஒரு பேரீச்சை மரத்தின் அடியில் ஒதுங்குகிறார்
அப்போது வானவர் ஒருவர் ஆறுதல் சொல்கிறார்
“இறைவன் உங்களுக்காக கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான்
மேலும் பேரீச்சை மரத்தைப் பிடித்து உலுக்கினால் புத்தம்புதிய பழங்கள் உதிரும்
உங்கள் பசி , தாகத்தை இவை தீர்க்கும்
யாரேனும் உங்களோடு பேச முற்பட்டால் – நான் இன்றிலிருந்து இறைவனுக்காக நோன்பு நோற்க நேர்ந்திருக்கிறேன் .- என்று சொல்லி பேச்சைத் தவிர்த்து விடுங்கள் “(19:22—26)
மரியம் குழந்தையோடு தம் மக்களிடம் வந்தார் . வழக்கம் போல் ஏச்சும் பேச்சும்
பேசுபவர்களுக்கு மறுமொழியாக மரியம் தன் குழந்தையின் (மகனின்) பக்கம் கை காண்பிக்கிறார்
பிறந்த குழந்தை எப்படிப் பேசும் ?
இந்தக் குழந்தை பேசுகிறது இறைவன் அருளால்
“நான் இறைவனின் அடிமை
இறைவன் எனக்கு வேதத்தை வழங்கி என்னை இறை தூதராக ஆக்கி பெரும் கருணையை வழங்கியிருக்கிறான்
என் வாழ்நாள் முழுதும் தொழுகை , சக்காத்தை நிறைவேற்ற ஆணையிட்டிருக்கிறான்
நல்ல குண நலன்களுடன் என்னைப் படைத்து என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாயும் என்னை ஆக்கினான்
என் பிறப்பிலும் இறப்பிலும் , உயிர்த்தெழும் நாளிலும் என் மீது சாந்தி உண்டாகட்டும் “(19:27—33)
இவர்தான் மரியமின் மகன் ஈசா (Jesus Son of Mary)
இது ,மக்கள் ஈசா பற்றி கொண்டிருந்த ஐயங்களுக்கு தெளிவான ஒரு விடை
எவரையும் மகனாகக் கொள்ள வேண்டிய தேவி இறைவனுக்குக் கிடையாது
இறைவன் புனிதமானவன்
அவன் ஒன்றை செய்ய நாடினால் “ஆகுக “ என் ஒரு சொல் சொன்னால் அது அவ்வாறே ஆகி விடும் (19:34—35)
துவக்கத்தில் சொல்லப்பட்ட மூன்று நிகழ்வுகளும் (மரியம், ஜகரியாஹ் , நபி இப்ராகிம்) இறைவனின் மாட்சிமைக்கு சான்றாய் அமைகின்றன
மேலும் ஈசா நபி சொல்கிறார்
என்னுடைய இறைவனும் உங்கள் இறைவனும் (அல்லாஹ் ) ஒருவனே
அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள்
அதுவே நேர்வழியாகும் “ (19:36)
ஆனால் மக்கள் அவர் காண்பித்த நேர்வழியை மறந்து ,அவர் மேல் வீண்பழி சுமத்தி குற்றவாளிகளில் ஒருவராக ஆக்கி விட்டார்கள்
மரியம் அவர்கள் பற்றியும் அவதூறு பரப்பினார்கள்
இந்த சுராவின் துவக்கமே ஜக்காரிய பற்றித்தான் . அது பற்றி சுருக்கமாக:
ஜகரியாவின் முதுமைப்பருவத்தில் , அவர் செய்த இறை பணிகளைத் தொடர இறைவன் அவருக்கு ஒரு மகனை வரிசாகா அருளுகிறான்
அந்தக் குழந்தைக்கு இறைவனே இது வரை யாருக்கும் வைக்காத யஹ்யா என்ற பேரையும் சூட்டுகிறான்
மேலும் இறைவன் சொல்கிறான்
“யஹ்யாவே வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்
குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு நாம் ஹுக்ம் எனும் தீர்வு காணும் ஆற்றலை வழங்கினோம்
இளகிய மனம், தூயமையை அவருக்கு வழங்கினோம்
நற்குணங்கள் கொண்ட அவருக்கு பிறப்பிலும், இறப்பிலும், மீண்டும் உயிர்த்தெழுதளிலும் சாந்தி உண்டாகட்டும் (19-12—15)
யஹ்யா (John the Baptist) பற்றி முன்பு விரிவாக எழுதியிருக்கிறேன்
இறுதிக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் , ஒரு நடன மங்கையின் விருப்பத்துக்காக அரசரால் கொலை செய்யப்பட்டு அவரது தலை ஒரு தட்டில் வைத்து அந்த மங்கைக்குப் பரிசாக அளிகப்ட்டது
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குரானில் சிந்திப்போம்
15 ரமாலான் 1443
17042022 ஞாயிறு
சர்புதீன் பீ
4
No comments:
Post a Comment