கதை சொல்லும் குரான்
கதை 22
மாதங்களை எண்ண------
சுரா 9 அத்தவ்பா (பிழை பொறுத்தல் ) j 10
மாதங்கள் எத்தனை ஒரு ஆண்டில் ?
பன்னிரண்டு என்பதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் ஐயமும் இல்லை.
சரி அதை நிர்ணயம் செய்தது யார் ?
ஏக இறைவன்தான்
அதுவும் வானங்களும் பூமியும் உருவாக்கப்படும் போதே இதையும் இறைவன் நிர்ணயம் செய்து விட்டான்
அந்தப் பன்னிரண்டில் நான்கை புனித மாதங்கள் என்றும் அறிவித்து விட்டான்
புனித மாதங்களில் போர் புரிவது போன்ற சில செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது
எந்தக் குழப்பத்துக்கும் இடமில்லாத இந்த எண்ணிக்கையிலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினர் அரபுநாட்டில் இருந்த இறை நம்பிக்கை இல்லாத கூட்டத்தினர்
நசி என்ற ஒரு முறையில் மாதங்களை கூட்டி ஆண்டுக்கு 13, 14 என்று ஆக்கிக் கொண்டார்கள்
இந்த முறையில் இரண்டு வகையில் அவர்கள் பயன் அடைந்தனர்
ஓன்று புனித மாதங்களை தாங்கள் போர் புரிவது போன்ற செய்லகளுக்காக புனிதமல்லாத மாதங்களாக அறிவித்து அதற்குப் பதிலாக வேறு மாதங்களை சேர்த்து அவற்றைப் புனித மாதமாக அறிவிப்பது
இன்னொன்று புனித ஹஜ் பயணம் ஒரே பருவத்தில் வருமாறு செய்வது .
இப்போது உள்ளது போல் முறையான பிறை அடிப்படையான ஆண்டைக் கடைப்பிடித்தால் புனிதப்பயணம் கோடை, குளிர் , பனி, மழை என எல்லாக்காலங்களிலும் மாறி மாறி வரும்
இதை மாற்றி பருவ மாற்றங்களில் இருந்து தப்பிக்க தவறான நாளில் ஹஜ் பயணத்தை மேற்கொண்டனர்
இந்தத் தவறு 36 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெற்றது
இதை தனக்கு எதிரான மிகப் பெரிய குற்றமாய்ப் பார்க்கிறான் இறைவன்
.
இது பற்றிய இறை வசனங்கள்
மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்
இது இறைவன் விதித்த ஓன்று .
வானங்களும் பூமியும் உருவாக்கப்பட்டபோதே இறைவன் இதையும் நிர்ணயம் செய்து விட்டான்
அவற்றில் நான்கு புனித மாதங்களாகும்
இதில் மாற்றம் செய்து உங்களுக்கு நீங்களே தவறு செய்து கொள்ளாதீர்கள் ----------இறை அச்சம் கொண்டவரோடு இறைவன் இருக்கிறான் [9:36]
நான்கு புனித மாதங்கள்
Zil-Qadah, Zil-Hajjah
Muharram
Rajab
ஹிஜ்ரி ஆண்டின் 12 மாதங்கள்
முஹர்ரம் @
சபர்
ரபி உல் அவ்வல்
ரபி உல் ஆகிர்
ஜமா அத்துல் அவ்வல்
ஜமா அத்துல் ஆகிர்
ரஜப் @
ஷfஆன்
ரமலான்
ஷவ்வால்
துல் கதா @
துல் ஹிஜ்ஜா@
• புனித மாதங்கள் @
•
புனித மாதங்களை மாற்றி, கூட்டிக் குறைக்கும் கயமைச் செயல் நாம்பிக்கை இல்லாதோரை மேலும் வழி தவறச் செய்கிறது-------அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு நல்ல செயல்கள் போல் தெரிகின்றன
உண்மையை மறுப்பவர்களுக்கு இறைவன் நேர்வழி காட்டுவதில்லை [9:37]
பிறையின் அடிப்படையில் அமைந்த ஆண்டு *என்பது மனித குலத்துக்கு இறைவன் கொடுத்த ஒரு வரமாகும் .கட்டாயபுனிதக் கடமைகளான நோன்பு,ஹஜ் பயணம் இவை கடும் கோடை, கடும் குளிர் ,மழை காலம் என எல்லாப் பருவ நிலைகளிலும் மாறி வருவது நல்ல உடற் பயிற்சியாகவும் உளப் பயிற்சியாகவும்ஆன்மீகப் பயிற்சியாகவும் அமைகிறது
இந்த வசனம் இறங்கியது ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு
அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு மேலாக பிறை ஆண்டின் அடிப்படையில் ஹஜ் பயணம் சரியான நாட்களில் நடை பெற்று வருகிறது
சுராஹ் 9 அத்தவ்பா (பிழை பொறுத்தல் )
119வசனங்கள் வசனம் 93வரை 10ஆவது ஜூஸுவிலும் 94முதல் 119வரை 11 ஆவது ஜூஸுவிலும் வருகின்றன
இதில் வரும் வேறு சில செய்திகள்
பத்ருப்போர், உஹுதுப்போர், தபுக் போர் என இதுவரை சந்தித்த போர்களில் எல்லாம் நபி பெருமானின் படை வலிமை எதிரியை விட மிகக் குறைவாகவே இருந்தும் இறைவன் அருளால் நபி பெருமான் வெற்றியை நிலை நாட்டினார்கள்
முதன் முறையாக ஹுனைன் போரில் இஸ்லாமியப்படை எதிரியை விடவலிமை மிக்கதாய் இருந்தது
12000 வீரர்கள் கொண்ட நபியின் படையை ஹுனைன் படையினர் மிக எளிதாக தோற்று ஓடும்படி செய்தனர்
இருந்தாலும் மனம் தளராத நபி அவர்கள் தன் வீரமிக்க தோழர்கள் சிலர் உதவியுடன்இடைவிடாது வீரப்போர் புரிந்து எதிரிகளைக் களத்திலிருந்து வெளியேற்றி, வெற்றிக்கொடி நாட்டினார்கள்
இந்த நிகழ்வின் வழியே இறைவன் மனிதருக்கு சொல்லும் செய்தி
இறைவனின் உதவி என்பது நம்பினோரின் எண்ணிக்கையைப் பொருத்தல்ல
அவர்கள் நபிக்கையின் தன்மையைப் பொருத்தே
என்பது
இடித்துரைக்கும் இறை வசனங்கள்
நிச்சயமாக இதற்கு முன் பல போர்க்களங்களில் இறைவன் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும்
ஹுனையுன் களத்தில் உங்கள் எண்ணிக்கை(படை பலம் ) உங்களை பெருமை கொள்ளச் செய்தது
ஆனால் அது உங்களுக்கு நன்மை பயக்கவில்லை
இந்தப்பரந்து விரிந்த பூமி உங்களைக்காட்டுப்படுத்தி நீங்கள் புறமுதுகு காட்டி ஓடினீர்கள் [9:25]
வெற்றியை அளிப்பது இறைவன் அருள்தான், உங்கள் படை பலம் அல்ல என்பதை இறைவன் சுட்டிக்காட்டி ஒரு ஆறுதலும் சொல்கிறான் இறைவன்
பிறகு இறைவன் நபிக்கும் அவரது தோழர்களுக்கும் உள்ளத்தில் ஒரு அனைதியை உண்டாக்கினான் . கண்ணுக்குத் தெரியாத படைகளை இறக்கி எதிரிகளை தோல்வி அடையச் செய்தான் இறைவன் .
உண்மையை மறுப்போருக்கு உள்ள கூலி இதுதான் [9:26]
அதன் பின் அதிகம் மன்னிப்பவன், மாபெரும் கிருபையாளனாகிய இறைவன் தான் நாடியவருக்கு பாவத்திலிருந்து மீட்சி அளிக்கிறான் [9:27]
மதத்தின் பெயரால் செல்வமும் பொன்னும் பொருளும் குவித்து மக்களை ஏமாற்றி உண்மை இறைவழியில் செல்லாமல் தடுக்கும் தலைவர்களுக்கு கடும் தண்டனை நிச்சயம். அவர்கள் குவித்த பொன்னும் வெள்ளியும் அவர்களுக்கு வேதனை தரும் தண்டனையாகும் [9:34:35]
இந்த சுராவில் மட்டும் துவக்கத்தில் “பிஸ்மில்லாஹ் “ இடம் பெறவில்லை . இதற்குப் பல விளக்கங்கள் சொல்லப்பட்டாலும்
நபி பெருமான் இந்த சுர்ரவைச் சொல்லும்போது “பிஸ்மில்லாஹ்” சொல்லவில்லை என்பதே காரணம்
இன்றளவும் குரானில் மாறுதல் எதுவும் செய்யப்படவில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு
இறைவன் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
22 ரமலான் 1443
2404 2021 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment