கதை சொல்லும் குரான்
கதை 8 அச்சபா J 23
நம்பிக்கை ஒளி
நடுக்கடலில் புயலில் சிக்கித் தவிக்கும் மரக் கலம். செய்வதறியாது திகைத்துபோய் நம்பிக்கை இழந்த பயணிகள், ஓட்டுனர்கள் .
இந்த நிலையில் ஒரு கலங்கரை விளக்கின் ஒளி , ஒரு மீட்புக்கலம் கண்ணில் பட்டால் எவ்வவளவு ஆறுதல், நம்பிக்கை உண்டாகும்!
“நமது கூட்டம் வெற்றி வாகை சூடும்”
என்ற இறை வசனம் அத்தகைய ஆறுதல் கொடுத்து நம்பிக்கை ஒளி ஊட்டுகிறது
கடந்த சில கதைகளில் பார்த்தன் தொடர்ச்சியாக நபி, அவர் கூட்டத்தினர் மீது வெறுப்பும் பகை உணர்வும் நாளுக்கு நாள் வலுகாக வளர்ந்து கொண்டே போக துன்பத்தில் உழன்று அவர்கள் சோர்வடைந்து விடுகிறார்கள்
எதிரிகளும் இந்த நம்பிக்கை கொண்ட கூட்டம் அழிந்து போய் அந்த இயக்கமே (இஸ்லாம்) மக்கமாநகரின் அருகில் உள்ள பள்ளத் தாக்குகளில் புதையுண்டு மறைந்து விடும் என மிகவும் நம்பினர்
அப்படிப்பட்ட துன்ப நிலைக்கு, கையறு நிலைக்கு ஆறுதலாக அருளப்படுகிறது இந்த இறைவசனம்
தொடர்ந்து வரும் வசனங்களில் இறைவன் கடுமையாக எச்சரிக்கிறான் எதிர்ப்பாளர்களை
அவர்கள் எள்ளி நகையாடிக்கொண்டிருக்கும் நபி அவர்களை வெற்றி கொள்வார்
எதிர்ப்பாளர்களின் படையும் பலமும் அவர்களுக்கு உதவாது .
அவர்களின் கண் முன்னே அவர்கள் வீட்டு முற்றத்தில் இறைவனின் சினம் வந்து இறங்கும்
இறைவன் சொன்னது போல், வாக்களித்து போல் சரியாக பதினை,ந்து ஆண்டுகளில் நபி அவர்கள் தம் கூட்டத்தாருடன் மக்க மா நாகரில் வெற்றி வீரராக தன்னிகரில்லாத் தலைவனாக நுழைகிறார்கள் .
அரபு நாட்டுக்கு மட்டுமல்ல, மிக வலிமையான ரோமப்பேரரசு ,இரான் உள்ளடக்கிய மிகப் பெரிய அரசின் ஆட்சியாளரானார்கள் நபி பெருமான்
நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் கொடுத்த வாக்குறுதி , ஏதிரிகளுக்கு விடுத்த எச்சரிக்கை எல்லாம் நடந்தேறின.
வசனங்களைப் பார்ப்போம்
சூராஹ் 37 அஸ்-ஸஃபாத் அணி வகுத்து நிற்போர் வசனங்கள் : 182
நம் தூதர்களாய் வந்த நமது அடியார்களுக்கு நாம் வாக்குறுதி அளித்துள்ளோம் , நிச்சயமாக அவர்களுக்கு உதவி கிடைக்கும் என்று (37:171, 172)
நம் கூட்டம் வெற்றி வாகை சூடும் (37:173)
நபியே அவர்களை (எதிர்ப்பாளர்களை) கொஞ்ச காலம் அப்படியே விட்டு விடுங்கள் (37:174)
விரைவில் அவர்கள் காண்பார்கள், நீங்களும் காண்பீர்கள்
( நபி அவர்களின் வெற்றியையும் , எதிர்ப்போரின் தோல்வியை யும் ) (37:175)
மறுமை நாள் விரைவில் வர வேண்டும் என அவர்கள் விரும்பிகிறார்களா?
அந்த நாளின் தண்டனை, வேதனை அவர்களிடம் வந்திறங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டோருக்கு அது ஒரு கொடிய நாளாக இருக்கும் (37: :176 177)
இந்த சூராவில் ஒரு வரலாறு நினைவு கொள்ளப்படுகிறது
அது நபி இப்ராஹீம் அவர்களின் மாபெரும் தியாகம்
.முதுமையில் இறைவனின்அருட்கொடையாய்க் கிடைத்த அருமை மகனை இறைவன் சொன்ன ஒரு சொல்லுக்காக மகனின் சம்மதம் பெற்று அவரைத் தம் கையால் பலி இடத் துணிந்தது
இந்தத் தியாக உணர்வுதான் இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கை என்று எல்லோருக்கும் பாடம் புகட்டப்படுகிறது
அவர்கள் இருவரும் ( நபி இப்ராஹிமும் அவர் மகன் இஸ்மாயிலும்) இறைவனிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டர்கள்------------- (37:103)
பின்னர் தோன்றிய தலை முறைகளுக்கு அவருடைய (நபி இப்ராகிம் )நற்பெயரையும் புகழையும் பரப்பு வித்தோம் (37:108)
நற் செயல் புரிவோருக்கு நாம் இவ்வாறு அருள் கொடையை வழங்குகிறோம் (37:110)
நபி மார்கள் நுஹ் , மூசா , ஹரூன் , இலியாஸ் , லூத் , யூனுஸ்
இவர்கள் பற்றியும் இந்த சூராவில் சொல்லப்படுகிறது
“அணி அணியாய் நிற்போர் மீது சத்தியமாக------” என்ற துவக்க வசனத்தில் வரும் அஸ்-ஸஃபாத் என்ற சொல் இந்த சூராவின் பெயராக அமைகிறது
நிறைவு வரிகள் எதிர்போருக்குக்கு கடும் எச்சரிக்கையாவும் , இறை அடியாருக்கு பெரும் நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டுவதாயும் அமைந்துள்ளன
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குரானில் சிந்திப்போம்
08ரமலான் 1443
10042022 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment