கதை சொல்லும் குரான்
கதை 10 j 21
ரோமின் வீழ்ச்சியும் வெற்றியும்
வெற்றி அவர்களுக்கே – இன்னும் சில ஆண்டுகளில்
ரோமானியர்கள் பற்றி இறைவன் இவ்வாறு சொல்கிறான்
முழு வசனங்கள் இதோ
ரோமனிய்ர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் (30:2)
அண்டை நாட்டில் ஆனால் இந்தத் தோல்விக்குப்பின் இன்னும் சில ஆண்டுகளில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் (30:3)
போர் என்றால் தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வருவது இயல்புதான்
இதில் என்ன பெரிய சிறப்பு ?
அடுத்து இஸ்லாம் – ரோம் என்ன தொடர்பு ?
பார்ப்போம்
இறைவன் எழுதிய திருமறையில் எந்த ஒரு சொல்லும் தேவை இல்லாமல் வராது .
ரோமானியர்கள் அடைந்த தோல்வி சாதாரணத் தோல்வி அல்ல
படு தோல்வி , மீண்டு எழுந்திருக்க முடியாத வீழ்ச்சி
ஆங்கில உரையாசியர்கள் முழுமையான அழிவு ,,தோல்வியைக் குறிக்கும் vanquished என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார்கள்
இந்த ஒரு சூழ்நிலையில் சொன்னதை செய்து காட்டும் இறைவனைத் தவிர வேறு யார் விரைவில் வெற்றி என்று சொல்ல முடியும் ?
இந்தப் போருக்குப் பின்னணியாக ஒரு நீண்ட வரலாறு –
கொலைகள், பழி தீர்த்தல், பழிக்குப் பழி வாங்குதல் என குரூரங்கள் மலிந்த ஒரு அஈசியல் வரலாறு
படித்தால் தலை சுற்றும் அந்த வரலாற்றை முடிந்த அளவுக்கு சுருக்கமாக விளக்க முயற்சி செய்கிறேன்
போர் நடந்தது ரோமுக்கும் ஈரானுக்கும் இடையில்.
இதில் இஸ்லாமியர்கள் ரோமையும் , எதிட்ப்பளர்கள் ஈரானையும் ஆதரித்தார்கள்
காரணம் ஈரானியர்கள் இதை ஈரானியறின் மகியானிசம் என்ற மதக் கொள்கைக்கும் ரோமானியர்களின் கிறித்துவ மதக் கொள்கைக்கும் இடையில் நடக்கும் ஒரு புனிதப்போர் போல துவக்கத்தில் சித்தரித்தார்கள் –
ஈரானியர்களின் மகியானிசம் ஓரிறைக் கொள்கைக்கு எதிரானது எனவே மக்காவில் உள்ள எதிர்ப்பாளர்கள் இவர்களை ஆதரித்தார்கள்
ரோமானியர்களின் கிறித்துவ மதக் கொள்கை பல மாறுபாடுகள் இருந்தாலும் ஏக இறைக் கொள்கை , மறுமையில் நம்பிக்கை, இறைவன் தூதர்கள் மூலம் அறிவித்த வேதங்களில் நம்பிக்கை என பல விதங்களில் இஸ்லாமியக் கொள்கையை ஒத்திருந்ததால் இஸ்லாமியர்கள் ரோமானியார்களை ஆதரித்தார்கள் . இன்னும் சொல்லப்போனால் கிறித்தவர்களும் முஸ்லிம்களே என்ற எண்ணம் நிலவியது
கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஹபாஷ் நாட்டு அரசர் புலம் பெயர்த்த முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களைத் திருப்பி அனுப்புமாறு மக்காவின் எதிர்ப்பாளர்கள் கேட்டதை மறுத்ததும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று
எனவே கிறித்தவர்களாகிய ரோமர்கள் தோல்வி இஸ்லாத்தின் அழிவுக்கு ஒரு முன்னுரை
அதே போல் நெருப்பையும் வணங்குகம் ஈரானியர்களின் வெற்றி மக்காவாசிளில் இறை எதிர்ப்பாளர்களுக்கு வெற்றியின் அறிகுறி என்றும்
மிகப் பரவலாகப் பேசப்பட்டது
இந்த நிலையில் இறை அடியாருக்கு நம்பிக்கை ஒளியாக இந்த வெற்றி குறித்த வசனம் இறங்கியது
புனிதப்போர் என்று வண்ணம் பூசப்பட்டாலும் அது போகப்போக பழி வாங்குதலாக , ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொடர் கொலையாக உருமாறிற்று ரோமானியப் பேரரசர் Maurice என்பவரைப பதவியில் இருந்து தூக்கி எரிந்து ஆட்சியைக் கைப்பற்றினான் Phocus,
அதோடு நில்லாமல் முந்தைய மன்னரின் 5 மகன்கள். மன்னர், அரசி, 3 மகள்கள் என குடும்பத்தையே கொடுரமாகக் கொலை செய்தான்
Mauriceசின் உதவியோடு ஈரானின் ஆட்சியைக் கைப்பற்றியவன் ஈரானிய மன்னன் Khusrau
தன் நண்பனின் குடும்பம் கொலையுண்தற்கு பழிவாங்க ரோம் மேல் படை எடுத்த Khusrau வெற்றி மேல் வெற்றி அடைந்தான்
இந்த நிலையில் ரோமைக்காப்பாற்ற வந்த ஆப்ரிக்க ஆளுநர் மகன் Heraclius ரோமின் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றி Phocus,சின் குடும்பம் முழுதையும் கொலை செய்தான்
இது நடந்தது முஹம்துக்கு நபித்துவம் அருளப்பட்ட அதே கி பி 610 ஆம் ஆண்டு
இதற்கு மேல் வரலாறை அறிய ஆர்வமுள்ளவர்கள் இனையத்தில் பார்த்துக் கொள்ளலாம்
ஒரு சில நிகழ்வுகளை இங்கே குறிப்பிடுகிறேன்
வெற்றி மேல் வெற்றி கண்டு ஆயிரக் கணக்கில் கிறித்தவர்களை, அந்த மத குருமார்களைக் கொன்று ,அவர்கள் ஆலயங்களையும் அழித்த ஈரானிய மன்னன் Khusrau ரோம் மன்னனுக்கு ஆணவத்தின் உச்சியில் எழுதிய மடல்
“அகில உலகின் அதிபரும் , கடவுள்களுக்கெல்லாம் கடவுளுமாகிய Khusrau
அடி முட்டாளும் , மிக அற்பமானவனுமாகிய Heraclius ஸுக்கு எழுதுவது
நீ நம்பிக்கை வைத்துள்ள உன் இறைவன் புனித நகரமான ஜெருசலத்தை என்னிடமிருந்து காப்பாற்ராதது ஏன்?
இப்படி தோல்வியில் துவண்டு விழுந்து கிடந்த ரோமின் மன்னன் Heracliusதேவாலயங்களின் பண உத்வியோடு மீண்டும் போர் புரிந்து ஈரானியர்களின் மதத் தலை நகர் Clorumia வையும் ,அவகளுடைய தலைமை வழிபாட்டுத் தலத்தையும் முற்றிலுமாக அழித்தான் இது நடந்தது கி பி 624 ஆம் ஆண்டு
அதே ஆண்டில் பத்ருப் போரில் முஸ்லிம்களுக்கு ஒரு எதிர் பாராத முதல் வெற்றி
இப்படியாக இறைவன் முன்னறிவித்த இரண்டு வெற்றிகளும் அறிவ்த்த பத்து ஆண்டுகளுக்குள் அவன் அருளால் நிறைவேறின
இதன் பயனாக இதுவரை குரானின் வசனகளில் நம்பிக்கை இல்லாதிருந்த பலரின் மனதில் அந்த நம்பிக்கை துளிர்க்கத் துவங்கியது
தொடர்ந்து கி பி 628 இல் நடந்த உள்நாட்டுக் கலவரத்தில் Khusrau சிறைபிடிக்கப்பட்டு அவனுடைய பதினெட்டு மகன்களும் அவன் கண் முன்னே கொலை செய்யப்பட்டு , சில நாட்களில் அவனும் சிறையிலேயே இறந்து விட்டான்
ஜெருசலம் நகர் மீண்டும் ரோமானியர்கள் வசம் வந்து அவர்களுக்கு ஒரு முழு வெற்றி ஆண்டாக அமைந்தது
இதே ஆண்டில் முஸ்லிம்களுக்கு “மாபெரும் வெற்றி “ என இறைவன் அறிவிக்கும் ஹுபைடியாஹ் உடன்படிக்கை நிறைவேறியது
நபி பெருமான் மதினாவுக்குப் போன பின் முதல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டதும் இதே ஆண்டில்தான்
சூராஹ் 30 அர் ரும் (ரோம் ) 60வசனங்கள்
இரண்டாம் வசனத்தில் வரும் ரும் என்ற சொல் இதன் பெயராக அமைந்தது
தொடர்ந்து சில வசனங்களைப் பார்ப்போம்
அனைத்து அதிகாரமும் வலிமையும் இறைவனிடம் மட்டுமே – முன்பும் பின்பும்
இறைவன் வெற்றியை வழங்கும் அந்த நாளில் நம்பிக்கியாளர்கள் குதுகலம் அடைவார்கள்
தான் நாடியவருக்கு வெற்றியை வழங்கும் இறைவன் யாவரையும் மிகைத்தவன் மாபெரும் கிருபையாளன் (30:4, 5)
இது இறைவனுடைய வாக்குறுதி . இறைவன் ஒருநாளும்தன் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போவதில்லை . ஆனால் இதைப் பெரும்பாலோர் அறிவதில்லை (30:6)
சொல்லப்படும் மற்ற சில செய்திகள்
.
மனிதன் படைப்பு, வானங்கள், பூமி, மொழிகள் , நிறங்கள் , உறக்கம் , மின்னல், மழை பூமியில் முளைக்கும் செடிகொடிகள் அனைத்தும் இறைவனின் அடையாளங்கள்
உற்றார், வறியவர், பயணிகளுக்கு தருமம் செய்யக்கட்டளை
இழி செயல் புரிந்து குழப்பத்தை உண்டாக்குவோர் அதற்கான பலனை சுவைப்பார்கள்
மனிதனைப் படைத்து மறுமை நாளில் அவன் முன் கொண்டு சேர்ப்பது இறைவனே
இந்த சூராவின் வரலாற்றுப் பின்னனி சற்று நீளமாகி விட்டது .
இருந்தாலும் பல வசனங்களுக்கு தெளிவான விளக்கமாக , எடுத்துகாட்டாக விளங்குவதால் இதற்கு மேல் சுருக்கவில்லை
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
10ரமலான் 1443
12042022 செவ்வாய்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment