கதை சொல்லும் குரான்
கதை 25 j6
பிழையா ?! திரு மறையிலா ??!!
புனித குரான் முழுக்க முழுக்க இறைவன் படைப்பு
என்பதை மறந்து அதில் முரண்பாடுகள் ,பிழைகள் கண்டு பிடிக்க முயன்று தோற்றோர் பலர்
அவர்களில் ஒருவர்தான் அப்துல் அஹத்
பரவலாக அறியப்படாத இவரின் முதல் பெயரைச் சொன்னால் பலருக்கும் நினைவில் வரும்
கேரி மில்லர் Professor Gary Miller
கனடா நாட்டில் கணிதப் பேராசிரியர்
தீவிரமான கிறித்தவ மதப் பரப்புரையாளர்
திருமறையில் காணப்படும் வரலாற்று , அறிவியல் முரண்பாடுகள், பிழைகளை மக்களுக்கு எடுத்துச சொல்ல எண்ணி குரானை ஊன்றிப் படித்து ஆராய்ச்சி செய்கிறார்
விளைவு?
கேரி மில்லர்அப்துல் அஹத் ஆக மாறிவிடுகிறார்
இது பற்றி நான் ஏற்கனவே ஒரு விரிவான பதிவு போட்டிருக்கிறேன்
எனவே இப்போது சுருக்கமாக அவர் மன மாற்றதுக்கான காரணங்களை –அவர் சொன்ன காரணங்களைப் பார்ப்போம்
மனிதனுக்கு அறைகூவல் விடுக்கும் குரானின் நடை
இதில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் எனும் அழைப்பு
இவை குரான் இறைவனின் படைப்பே அன்றி வேறில்லை என உறுதி கூறுகின்றன
மேலும் நபி பெருமானின் தனிப்பட்ட வாழ்வு நிகழ்வுகளான அவர் அடுமை ,மனைவி அன்னை கதீஜா , நபி பெருமானின் குழந்தைகள்
மறைவு பற்றி குர்ஆனில் எதுவம் சொல்லபடவில்லை
குர்ஆனில் நபி பெருமான் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில்தான் வருகிறது
ஈசா நபியின் பெயாரோ 25 இடங்களில் வருகிறது
அன்னை ஆயிஷா ,அன்னை பாத்திமா பெயர்களில் சுராஹ் எதுவும் இல்லாத குர்ஆனில் மரியம் அவர்கள் பெயரில் ஒரு சுராஹ் இருக்கிறது
மேலும் பைபிளில் கூட இல்லாத அளவுக்கு மரியம் அவர்களை இறைவன் குர்ஆனில் கண்ணியப்படுத்துகிறான்
என இன்னும் பல காரணங்களை எடுத்துச் சொல்லி முழுக்க இறைவனின் படைப்பு இந்தக் குரான் என்பதை உணர்ந்து மனம் மாறி
கேரி மில்லர் அப்துல் அகத் ஆக மாறுகிறார்
மேலும் கத்தோலிக்கக் கலைக் களஞ்சியத்தில் (Contemporary Catholic Encyclopedia)
குரானின் நம்பகத் தன்மை, உண்மைத்தன்மையை தாக்கி குலைக்க மறுக்க எடுத்த முயற்சிகள் ஆராய்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன
என்று பதிவு செய்யப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறார்
மரியம் அவர்களை பைபிளுக்கு மேலாக குரான் கண்ணியப்படுத்தி உயர்த்துகிறது
அவ்வளவு மேன்மை வாய்ந்து மரியம் அவர்கள் பற்றி அவதூறு பேசுபவர்கள் பற்றியும் குரான் குறிப்பிடுகிறது
தவ்ராத் வேதம் வழங்கப்பட்ட இஸ்ரவேலர்கள், வேதத்தை மறந்து , இறைவனை மறந்து நபிமார்களை மறுத்து , பல நபி மார்களைக் கொலை செய்து தவறு மேல் தவறு செய்கிறார்கள்
தொடர்ந்து நபி பெருமானிடம் மிகத் தவறான முறையில் நடந்து கொள்கிறார்கள் அப்போதுதான் நபியைஇறைவனிடமிருந்து மறை நூல் இறங்குவதைக் கண்ணால் பார்க்கவேண்டும் அல்லது இறைவன் அவர்கள் ஒவொருவருக்கும் தனியாக ஒரு செய்தி அனுப்பவேண்டும் . அப்போதுதான் நபியை நம்புவோம் என்கிறார்கள் (4:153)
இறைவனிடம் செய்த உடன்படிக்கைகளை மீறினார்கள்
இறைவனின் கட்டளைகளை மதிக்கவிலை
சப்பாத்தினத்தையும் மீறினார்கள் அதனால் அவர்கள் இறைவனின் சினத்துக்கு ஆளானார்கள்
நபி மார்களைக் கொலை செய்தார்கள்
இறைவன் அவர்கள் உள்ளங்களைப் பூட்டி முத்திரை இட்டுவிட்டான் (4:154 -:155)
மேலும் அவர்கள் அவநம்பிக்கையில் ஊறிப்போய் மரியம் அவர்கள் மேல் அவதூறு சொல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டாரகள் (4:156)
தகுந்த காரணம் , சான்று எதுவும் இன்றி ஈசா நபியின் பிறப்பில் ஐயம் கொண்டு அவதூறு பரப்பினார்கள்
ஈசா நபி ஒரு அற்புதமான மனிதர் , அவர் பிறப்பும் ஒரு அற்புதமே என்பதை இறைவன் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியும் இது ஒரு தவறான பிறப்பு என்பது போல் செய்தியைப் பரப்பினார்கள்
ஈசாநபி தம் முப்பதாவது வயதில் நபித்துவம் பெற்று யூத மதத்தலைவர்கள்,குருமார்களின் தவறுகளை எடுத்துச் சொல்ல முற்பட்டபோது ஈசாநபியின் பிறப்பு தவறானது என்ற அவதூறை மிகத் தீவிரமாகப் பரப்பினர்கள்
ஈசா நபி .மரியம் பற்றிய அவதூறை இறைவன் பொய் என்றோ தவறு என்றோ சொல்லாமல்
குர்f , அவநம்பிக்கை என்று சொல்கிறான்
ஜூஸு 6
இதில் சுராஹ் 4 அந்நிஸாவி ன் ஒரு பகுதியும்
சுராஹ் 5 அல்மாயிதாவின் ஒரு பகுதியும் வருகின்றன
இந்த ஜுஸுவில் வரும் செய்திகளில்,சிலவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்
தவறு இழைகப்பட்டவரைத் தவிர வேறு யாரும் தவறுகள் பற்றிப் பேசுவதை இறைவன் விரும்புவதில்லை (4:148)
ஈசா நபி சிலுவையில் அறையப்படவுமில்லை கொலை செய்யப்படவுமில்லை(4:157)
இறைவன் அவரைத்தம்மிடம் உயர்த்திக் கொண்டான் (4:158)
L
உட சுத்திகரிப்பு – வுது . தயம்மும்
நம்பிக்கை கொண்டோரே
தொழுமுன் உங்கள் முகங்களைக் கழுவிக் கொள்ளுங்கள்
கைகளை மணிக்கட்டு வரைக் கழுவுங்கள்
தலைகளைத் துடையுங்கள்
கால்களைக் கணுக்கால்கள் வரை கழுவுங்கள்
சுத்தமாக இல்லாவிட்டால் குளித்து சுத்தமாகுங்கள்
தண்ணீர் கிடைக்காவிட்டால் தூய்மையான மண்ணால் சுத்தம் செய்து கொள்ளுங்கள்--------- ( 5:6)
வசனங்கள் 5::27- 31
ஆபேல் கைன்(Abel and Cain) ஆதம் நபியின் இரு மகன்கள
ஒருவரை மர்றவர் கொலை செய்து விடுகிறார்
உடலை என்ன செய்வது என்பது புரியாமல் சுமந்து கொண்டே அலைகிறார்
இறைவன் அனுப்பிய ஒரு காக்கை நிலத்தைக் கொத்திக் கிளருவதைப் பார்த்து நிலத்தைத் தோண்டி உடலைப் புதைக்கிறார்
வசனம் 38-40
( திருட்டுக் குற்றத்துக்கு தண்டனை யாக கையை வெட்டுதல் பற்றி சொல்லபடுகிறது
சிறிய திருட்டுகள், பசியால் உணவைத் திருடுதல் போன்ற பலவற்றிற்கு கையை வெட்டும் தண்டனை கிடையாது என மார்க்க அறிஞர்கள் விளக்குகிறார்கள் .
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
25ரமலான் 1443
27042022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment