கதை சொல்லும் குரான்
கதை 28
தருமத்தின் மேனமை
J3
சுராஹ் 2 அல் பக்ரா 253 -- ----286 (முடிவு)
சுராஹ் 3 ஆலு இம்ரான் 1 -- 91
இறை வழியில், மதத்தில்,
கட்டாயம் என்பதே கிடையாது
நேர்வழி , தவறான வழியிலிருந்து தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்படுகிறது
தவறான வழியை புறக்கணித்து இறைவனை நம்புவோர் ஒரு வலுவான ,உடையாத கைப்பிடியை பிடித்துக் கொண்டார்கள்
அது எல்லாம் அறிந்தவனும் எல்லாவற்றையும் செவி மடுப்பவனுமாகிய இறைவனின் துணையாகும்
(2:256)
இஸ்லாம் பற்றிய பல தவறான கண்ணோட்டங்களில் ஓன்று
இஸ்லாம் வாளால் ,வன்முறையால் ,கட்டாய மத மாற்றத்தால் வளர்ந்த ஓன்று என்பது
ஒரு பற்றி வரலாற்று சான்றுகள் பக்கம் நான் போகவில்லை
திருமறை வசனத்தை மேலே பார்த்தோம்
இதன் கருத்து இறை நம்பிக்கை, நீதி நன்னடத்தை இவற்றின் அடிப்படையில் அமைந்தது இஸ்லாம்
இந்த அடிப்படைக் கொள்கைகளை யார் மீதும்யாரும் திணிக்க முடியாது
இதற்கு முந்திய வசனம் (2:255)
உலகில் மிக அதிகமாக மனனம் செய்து ஓதப்படும் இறைவசனங்களுள் ஒன்றான
ஆயத்துல் குர்ஸி (வசனங்களின் சிகரம் )எனப்படும்
இறைவனின் பெருமையை , தனித்துவத்தை விளக்கும்
“இறைவன் – என்றும் நிலைத்திருப்பவன்
தேவைகள் இல்லாதவன்
அவன்தான் உலகில் உள்ள அனைத்தின் தேவைளையும் நிறைவேற்றி நிர்வகித்து வருகிறான்
அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை
அவனைத் தூக்கமும் பிடிக்காது சிறு துயிலும் பிடிக்காது
வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியன
அவன் அனுமதியின்றி அவனிடம் யாரும் பரிந்து பேசமுடியாது
அவனுக்கு கண் முன் இருப்பதையும் மறைவாக இருப்பதையும் அவன் அறிவான்
அவன் நாடியதைத் தவிர அவனுடைய ஞானத்தில் இருந்து யாரும் எதையும்அறிந்து கொள்ள முடியாது
அவனுடைய ஆட்சி அதிகாரம் வானங்களிலும் பூமியிலும் பரவி நிற்கிறது
அவற்றை நிர்வகிப்பதில் அவன் சோர்ரவடைவதில்லை
அவன் மிகவும் உயர்ந்தவன் ,மகத்துவம் பொருந்தியவன்” (2:255)
தருமம் பற்றி
நம்பிக்கை உடையோரே !
நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் மறுமை நாள். வருமுன் நல்லவழியில் செலவு செய்யுங்கள்
அந்த மறுமை நாளில் கொடுக்கல வாங்கல் எதுவும் நடக்காது நட்பு ,பரிந்துரை எதுவும் பயன் தராது
நிச்சயமாக நம்பிக்கை இல்லாதோர் தவறு செய்கிறார்கள் (2:254)
இறைவழியில் செலவு செய்வதன், தருமத்தின் நன்மையை இறைவன் ஒரு அழகிய எடுத்துக்காட்டு வழியாக விளக்குகிறான்
“ஒரு தானிய விதையில் இருந்து 7 கதிர்கள் முளைத்து வருகின்றன
ஒவ்வொரு கதிரிலு நூற்றுக்கணக்கான தானியங்கள் இருக்கின்றன
இதுவே தங்கள்செல்வத்தை நல்வழியில் செலவளிப்போருக்கு எடுத்துக்காட்டாகும்
எல்லாம் அறிந்தவனும் , அளவின்றிக் கொடுப்பவனும் ஆகிய இறைவன் தான் நாடியோருக்கு இவ்வாறு அவர்கள் செயல்களை பன்மடங்காக்குகிறான்”(2:261)
பிறருக்குக் கொடுக்கும் அறம் , தருமம் பற்றி இறைவன் மேலும் சொல்கிறான்
தருமம் செய்து விட்டு அவர்கள் ( தருமம் பெற்றோர் ) மனம் புண்படும்படி பேசுவதை விட
அன்பாக ஒரு சொல் பேசுவதும் , பிறர் குற்றங்களை மன்னிப்பதும் சிறந்த அறமாகும்
இறைவன் தன்னிறைவு பெற்றவன் மிகவும் சகிப்புத் தன்மை உடையவன் (2:263)
இதே கருத்து அடுத்த வசனத்திலும் வலியுறுத்தப்படுகிறது
நம்பிக்கை கொண்டோரே!
இறை நம்பிக்கை , மறுமை நாள் பற்றிய அச்சம் இல்லாமல்
பிறர் பாராட்டைப் பெறுவதற்காக சிலர் தருமம் செய்கிறார்கள்
பாறையின் மேல் இருக்கும் சிறிதளவு மண் பெரிய மழையில் அடித்துச் செல்லப்படுவது போல் அவர்கள் தருமம் அவர்களுக்கு எந்தப்பயனையும் கொடுப்பதில்லை
நீங்களும் (நம்பிக்கை கொண்டோரும்)உங்கள் தருமத்தை சொல்லிக்காண்பித்தும் , கடும் சொற்கள் பேசியும் உங்கள் தருமத்தின் பலனை வீணாக்கி விடாதீர்கள்
இறை மறுப்பாளர்களை இறைவன் நல்வழிப் படுதுவதில்லை (2:264)
தர்மம் பற்றி மேலும் சொல்லும்போது
உங்களுக்கு இறைவன் கொடுத்ததில் நல்லவற்றையும் இன்னும் அதில் சிறந்தவற்றையும்ம் தருமம் செய்யுங்கள் ,உங்களுக்குப் பிடிக்காததை தருமமாகக் கொடுக்காதீர்கள் என இறைவன் வசனம் 2:267இல் சொல்கிறான்
தீய சக்தியான சைத்தான் வறுமையை நினைவூட்டி அச்சமூட்டி தருமம் செய்யாமல் தடுத்து தீய வழியில் செலுத்துவான்
பேரறிவாளனும் அள்ளி அள்ளிக் கொடுப்போனுமாகிய இறைவன் தன் செல்வத்தையும் மன்னிப்பையும் உங்களுக்கு வாக்களிக்கிறான்(2:268)
இப்படி திருமறை முழுக்க தருமத்தின் மேன்மை பல இடங்களில் சொல்லப்படுகிறது
கட்டாய தருமத்தை குறிக்கும் ஜக்காத் என்ற சொல் குர்ஆனில் 80க்கு மேற்பட்ட இடங்களில் வருகிறது
வட்டியைத் தடை செய்தது வசனம் 4: 275-276 ல் வருகிறது
தருமத்தில் தன் அருளை இறக்கி வைக்கும் இறைவன் வட்டியில் அந்த அருளை அழித்து விடுகிறான் --------(2:276)
இன்னும் கடுமையாக
வட்டி வாங்குவதை நிறுத்தாதவர்களுக்கு எதிராக இறைவனும் நபியும் போர் தொடுப்பார்கள்
என எச்சரிக்கிறான் வசனம் 2:279இல்
ஒரு மனிதனின் சக்திக்கு மேற்பட்ட சுமையை யாருக்கும் இறைவன் கொடுப்பதில்லை
ஒவ்வொருவரின் நற்செயல்கள் அவர்களுக்கு நன்மையையும் அவர்கள் தீய செயல்கள் அவர்களுக்குக் கெடுதலையும் கொடுக்கும்
“இறைவனே எங்கள் பிழைகளைக் கொண்டும் ,மறதியைக் கொண்டும் எங்களை தண்டித்து விடாதே “ என இறைவனிடம் வேண்டுங்கள் நம்பிக்கை கொண்டோரே (2:286)
என்ற வேண்டுதலுடன் கூடிய வசனம் சுராஹ் 2 இன் நிறைவுப்பகுதியாக அமைந்துள்ளது
ஜூஸு 3
குரானின் மிக நீளமான சுராஹ் 2 அல்பக்றாவின் (பசுமாடு)ஒருபகுதியும்
சுராஹ் 3 அந்நிஸா(இதுவும் பெரிய சுராஹ்தான் ) பகுதியும் கொண்டது
இந்தப்பகுதியில் வரும் செய்திகளில் ,மேலே பார்த்தவை --
இஸ்லாத்தில் கட்டாயம் கிடையாது, கட்டாயம் என்பது இருக்க முடியாது
இறைவனின் மாட்சிமை (ஆயத்துல் குர்ஸி)
தருமத்தின் உயர்வு, வட்டியின் தீமை
இறைவனிடம் கேட்க வேண்டிய ஒரு வேண்டுதல்
மேலும் இந்தப்பகுதியில்
வணிகப் பரிமாற்றங்களை எழுதிப் பதிவு செய்யவேண்டும்
போன்ற செய்திகளும் வருகின்றன
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
28ரமலான் 1443
30042022 சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment