கதை சொல்லும் குரான்
கதை 12
கடல் பிளந்து ----------
நாம் நாடினால் விண்ணிலிருந்து ஒரு சான்றினை அவர்கள்மேல் இறக்கி வைத்திருப்போம். அதன் முன்னே அவர்களின்பிடரி பணிந்து விடும் (26:4)
எல்லை கடந்த துக்கம், கவலையில் தோய்ந்து இருந்த நபி பெருமானுக்கு இறைவன் சொல்லும் ஆறுதலின் ஒரு பகுதி
எந்த அளவுக்குக் கவலை என்றால் கவலையிலே நபியின் உயிர் போய்விடும் நிலையில் இருக்கிறது
கவலை என்றால் வீடு பற்றியா தன்குடும்பம் பற்றியா இல்லை தன்னைப் பற்றியா !
அதெல்லாம் இல்லை .மக்கா நகர் வாழ் குறைஷிகள் இறைவழியை , இறைவனின் நற்செய்திகளை வெறுத்து ஓதிக்குகிரார்களே என்ற ஒரு சமுதாயக் கவலை
இவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக கவலைப்பட்டு உம்மையே நீர் மாய்த்துக்கொள்வீர் போலிருக்கிறதே (26:3)
மேலும்சொல்கிறன் இறைவன்
கருணை மிக்க இறைவனிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம் அவர்கள் (இறை மறுப்போர் ) அதனை அவர்கள் புறக்கணித்து விடுகிறார்கள் .(26:5)
எதிர்ப்பாளர்கள் நபியை , அவர் அறவுரைகளை மறுப்பதற்கு சொல்லும் பல காரணங்களில் ஓன்று நபிக்கு இறைவன் அற்புதங்கள் சான்றுகள் எதையும் அளிக்கவில்லை என்பது
இதற்கு மறுமொழியாக இறைவன் தன் மாட்சிமைக்கு சான்றாகப் பலவற்றை வரிசைப்படுத்தி நபி பெருமானுக்கு அறிவிக்கிறான்
உலகெங்கும் பரவிக்கிடக்கும் தாவரங்களை , அவை முளைப்பதை ,இணை இணையாக இருப்பதை அதில் செடி கொடி மரம் என பல வகைகள் வருவதை இறைவன் முதல் சான்றாக எடுத்துச் சொல்கிறன்
அடுத்து நபி மார்களுக்கு அருளப்பட்ட அற்புதங்களை எடுத்துச் சொல்கிறான்
முதலில் வருவது நபி மூசா பற்றி வசனம் 11 முதல் 68 வரை .
மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால் கடல் பிளந்து மலை போல் உயர்ந்து மூசா நபிக்கும் அவரது கூட்டத்துக்கும் வழி விட்டது அதே கடல் பிர அவுன் கூட்டதினரை மூழ்கடித்த அற்புதத்தைச சொல்லலாம்
இறைவன் தான் நாடியவருக்கு , அவர் எவ்வளவு வலிமை குன்றியவராய் இருந்தாலும் வெற்றியை வழங்கி விடுகிறான்
நபி இப்ராகிம் அவர்கள் பற்றி வசனம் 69முதல் 104 வரை வருகிறது
நபி இப்ராகிம் இறைவனியம் இறைஞ்சுகிறார் கள்
இறைவ எனக்கு நுண்ணறிவுத் திறனை வழங்குவாயாக
என்னை உத்தமர்களோடு சேர்த்து வைப்பாயாக
பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான் புகழை வழங்குவாயாக
அருட்கொடை சுவனத்தின் வாரிசுகளில் என்னையும் சேர்த்துக் கொள்வாயாக
என் தந்தையை மன்னிப்பாயாக
அவர் வழி தவறிப்போய்விட்டார்
மறுமை நாளில் என்னை இழிவு படுத்தி விடாதே (26:83 --87)
இப்ராகிம் நபியின் வரலாற்றில் உள்ள சான்றை, படிப்பினையை பெரும்பாலோர் ஏற்றுக்கொவதில்லை என்கிறான் இறைவன்
நுஹ் நபியின் வரலாறு அடுத்து வருகிறது . நபியின் அறவுரைகளை ஏற்க மறுத்ததோடு அவரைப் பொய்யர் என்று தூற்றினர் மக்கள்.
இறைவனின் சினத்தால் வெள்ளம் பெருக்கெடுத்து எல்லாவற்றையும் அழித்து விட , நுஹ் நபியைப் பின்பற்றி ஏக இறைக்கொள்கையை ஏற்றுக்கொண்டோர் மட்டும் நுஹின் மரக்கலத்தில் ஏறித் தப்பித்தனர்
இறைத் தூதர் ஹூத் ஆத் கூட்டத்தாரை நல்வழிப்படுத்த முயன்றார் .
பெரிய மாளிகைகள் கட்டி ஆடம்பரமாக வாழ்ந்த அந்தக் கூட்டம் தங்களை யாரும் எதுவும் செய்யமுடியாது என்ற இறுமாப்பில் ஹூதைப் பொய்யர் என்று தூற்றி , இறைவன் சினத்துக்கு ஆளாகி அழிக்கபட்டனர்
இதே போல் இறைதூதர் சாலிஹை மறுத்த ஸமூத் கூட்டம்
லூத் நபியை விரட்டிய அவர் கூட்டம்
ஷூ ஐப் பை விரட்டிய அய்க்கா வாசிகள்
எல்லாம் இறைவனால் அழிக்கப்பட்டனர்
இந்த அழிவுகள் பற்றி திருமறையில் பல இடங்களில் திரும்பத் திரும்ப இறைவன் எடுத்துச் சொல்லி எச்சரிக்கை செய்கிறான்
ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு இறை தூதரை அனுப்பி அவரின் சொல்லை அந்த மக்கள் மறுத்த பிறகே இறைவன் அழிவை ஏற்படுத்துகிறான்
அந்த அழிவு வரும்போது அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாழ்க்கைச் சாதனங்கள வசதிகள் அவர்களுக்கு எந்தப் பயனையும் பாதுகாப்பையும் தருவதில்லை
பொய்யர்கள் கேள்விப்படும் செய்திகளை ,ஆராயாமல் பரப்புவோர், செய்யாதவற்றை செய்ததாகக் கூறித் திரிபவர்கள் – இவரகள் இறைவனை சினத்துக்கு ஆளாவார்கள் என்ற ஒரு எச்சரிக்கையோடு சூராஹ் நிறைவடிகிறது
சற்று சிந்தித்துப்பார்த்தால் இந்த அறவுரைகள், எச்சரிக்கைகள் எல்லாம் இன்றும் பொருத்தமானவை போல்தான் தோன்றுகிறது
சுராஹ் 26 அஷ்ஷு அரா – 227 வசனங்கள் J 19
வசனம் 224 இல் வரும் சொல்லே இந்த சுராவின் பெயராய் அமைந்திருக்கிறது
(தமிழ் தட்டச்சில் உள்ள சில் சிரமங்கள் காரணமாக புனிதர்களின் பெயருக்குப்பின்ன்ல் வரும் ஸல் அலை , ரலி போன்ற சொற்களைத் தவிர்த்திருக்கிறேன்
இறைவன் மன்னிப்பானாக )
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
12ரமலான் 1443
14042022 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment