கதை சொல்லும் குரான்
கதை 23
வாழ்க்கை வாழ்வதற்கே
ஜூஸு 8
இறைவனை அடைய , இறை நிலை எய்த , மெய்ஞானம் பெற
கடுந்தவம், துறவறம் , உடலை வருத்தும் பயிற்சிகள் மிக எளிய உணவு குறைந்த அளவில்
எளிமையான வாழ்வு முறை
இவைஎல்லாம் தேவை என்பது மிகப்பரவலான ஒரு கருத்து
பல மதங்களும் மதத் தலைவர்களும் வலியுறுத்திச் சொல்வது
இது எல்லா மதங்களுக்கும் பொதுவான ஓன்று
இஸ்லாமிய இறை தியானம் என்னும் திக்ரு வில் கூட சில தலைவர்கள்
“கூடியவரை பழைய கஞ்சி போன்ற உணவுகளை உண்ணுங்கள் .அப்போதுதான் விரைவில் ஞானம் கிடைக்கும் “ என்று சொல்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்
இன்னும் ஒரு படி மேலே போய் “இல்லறத்தில் துறவறம் “ என்று வலியுறுத்தும் திக்ரு தலைவர்கள் பற்றியும் அறிந்திருக்கிறேன்
இந்தத் கட்டுப்பாடுகள் எல்லாம் தேவை அற்றவை , இறைவனுக்கு எதிரானவை என்கிறது திருமறை
இறைவனின் படைப்பில் மிக உன்னதமான ஓன்றான மனித இனத்தை தன் பிரதிநிதியாக vicegerent ஆக நியமித்து உலகில் உள்ள பொருட்கள் அனைத்தையும் மனிதனுக்குக் கட்டுப்பட்டவையாக , பயனுள்ளவையாக ஆக்குகிறான்
எண்ணற்ற வளங்களையும் நலன்களையும் வாரி வழங்கும் இறைவன்
இவர் இறை நம்பிக்கை கொண்டவர் , இவர் இறை எதிர்ப்பாளர் என்று பாகுபாடு செய்வதில்லை
இன்னும் சொல்லப்போனால் சில இறை மறுப்பலர்களுக்கு மிக வளமான வாழ்வைக் கொடுக்கிறான் இறைவன்
இந்த நிலையற்ற மிகக் குறுகிய இம்மை வாழ்வை அனுபவித்துகொள்ளட்டும் என விட்டு விட்டு
நிலையான மறுமையில் அவர்களுக்குரிய கூலியை சரியாக வழங்குகிறான் இறைவன்
நபியே சொல்லுங்கள்
“இறைவன் தன் படைப்பான மனிதனுக்கு ஆக்கிக் கொடுத்த அழகுகளையும் அலங்காரங்களையும் , தூய்மையான உணவையும் மனிதனுக்குத் தடை செய்வது யார் ?
தொடர்ந்து சொல்லுங்கள் “நம்பிக்கை கொண்டோருக்குக்காகவே சிறப்பாக இவ்வுலகிலும் மறுமையிலும் உவப்படைய இவற்றைக் கொடுத்துள்ளோம்
எம் வசனங்களை நாம் அறிவுடையோருக்கு இவ்வாறு விளக்குகிறோம் (7:32)
சுருக்கமாகச் சொல்வதென்றால்
வாழ்க்கை வாழ்வதற்கே
சில வரையறைகள் நெறி முறைகளுக்கு உட்பட்டு
அந்த நெறிமுறைகள் சில
நபியே சொல்லுங்கள் :’ என் இறைவன் தடுத்து விலக்கியவை
வெளிப்படையான, மறைமுகமான இழி செயல்கள்,
பாவங்கள்,
வரம்பு மீறுதல் ,இறைவனுக்கு இணை கற்பித்தல் -----(7:33)
இந்த வசனத்தில் வரும் இத்ம் ithm وَٱلْإِثْمَوَ الۡاِثۡمَ என்ற அரபுச் சொல் வேகமாக ஓடக்கூடிய ஒரு ஒட்டகம் வேண்டுமென்றே மெதுவாக நடப்பதைக் குறிக்கிறது
இதே போல் மனிதர்கள் வேண்டுமென்றே தங்களுக்கு அறிவு ,திறமை எல்லாம் இருந்தும் இறைவழியில் செல்ல மறுக்கும் பாவத்தைக் குறிக்க இந்தச் சொல் இங்கே வருகிறது
வரம்பு மீறுதல் –தங்களை இந்த உலகின் அதிபதிகளாக எண்ணிக் கொண்டு தம் மனம் போன போக்கில் செயல் படுதல் ,மற்றவர்களின் உரிமையைப் பறிப்பது போன்ற செயல்கள்
நபியே அவர்களிடம் சொல்லுங்கள்
இறைவன் உங்களுக்கு விதித்தவற்றை நான் சொல்கிறேன்
இறைவனுக்கு இணை வைக்காதீர்கள்
உங்கள் பெற்றோருக்கு நல்லதையே செய்யுங்கள்
வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைகொல்லாதீர்கள்.உங்களுக்கு உணவளிப்பது போல் அவர்களுக்கும் நாமே உணவளிப்போம்
மறைவாகவோ வெளிப்படையாகவோ மானக்கேடான செயல்கள் அருகில் கூடப் போய் விடதீர்கள் .
தகுந்த காரணம் இன்றி யார் உயிரையும் மாய்க்காதீர்கள்
நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதற்காக இறைவன் உங்களுக்கு இவற்றை எடுத்துச் சொல்கிறான்)
மேலும் சொல்கிறான் இறைவன்
ஆதரவற்ற அனாதை குழந்தைகளின் சொத்துக்களை மிகச் சிறந்த முறையில் கையாளுங்கள்
அளவையிலும் நிறுவையிலும் நீதியைய்க் கடைப்பிடியுங்கள்
யாருக்கும் அவர்கள் தாங்க முடியாத அளவுக்கு சுமையை நாம் கொடுப்பதில்லை (6:151
பேசும்போது நீதியுடன் பேசுங்கள் – உங்கள் நெருங்கிய உறவினர் பற்றியதாக இருந்தாலும் --------- (6:152)
இந்த செய்திகள் எதுவும் புதிதாக இல்லையே
பெரும்பாலும் காலம் காலமாகப் பேசப்பட்டு , ஓரளவு கடைப் பிடிக்கப் படுபவைதானே என்று தோன்றுகிறதா ?
ஆம் அதுதான் திருமறையின் சிறப்பு . அதில் வரும் ஆணைகள ,அறவுரைகள் எல்லாம் இயற்கையின் நியதிக்கு, சத்தியத்துக்கு உட்பட்டவைதான்
ஜூஸு 8
இதில் சுராஹ் 6 அல் அனாம் ( கால் நடைகள் )
சுராஹ் 7 அல் அராப் (உயரங்கள் உச சிகள்
இரண்டின் பகுதிகள் வருகின்றன
இந்த ஜூஸுவில் வரும் செய்திகளில் இன்னும் சில
ஏக இறைவனைத் தவிர்த்து மற்றவற்றை வணங்குபவர்களை இகழாதீர்கள்
அவர்கள் புரிந்து கொள்ள மறுத்து அறியாமையில் ஏக இறைவனை இகழ முற்படுவார்கள்
அவரவர் செய்வது அவரவருக்கு சரியாக, அழகாகத் தோன்றும்படி நாம் செதிருக்கிறோம்
இறுதியில் அவர்கள் எம்மிடமே திரும்பி வர வேண்டியிருக்கும்
அப்போது அவர்கள் செயல்கள் பற்றி இறைவன் அவர்களுக்கு அறிவிப்பான் (6:108)
(
இவ்வாறே (தீயவையும் நல்லவையும் ஒன்றாகக் கருதப்படும்போது) ஒவ்வொரு பகுதியிலும் அங்குள்ள பெரும் பெரும் குற்றவாளிகளை நாம் விட்டு வைத்திருக்கிறோம் . தங்களுடைய ஏமாற்று வலையை அவர்கள் விரிக்கட்டும் .
உண்மையில் அந்த ஏமாற்று வலைகளில் அவர்களே சிக்கிக் கொள்கிறார்கள் , அவர்கள் அதை உணர்வதில்லை (6:123)
இறை நெறியை ,தீனை , மார்க்கத்தை பிரித்துக் கூறு போட்வர்களுக்கும் உங்களுக்கும் எந்த விதமான் தொடர்பும் இல்லை
அவர்கள் செயல்கள் இறைவன் பொறுப்பில் இருக்கின்றன
அவர்கள் செயல்கள் பற்றி இறைவன் அவர்களுக்கு அறிவிப்பான் (6:159)
(குரான் வசனங்களை தொடர்ந்து படிக்கும்போது மனதில் திரும்பத் திரும்ப வரும் நினைவ
இது 1400 ஆண்டுகளுக்கு முன் அருளியதா !!
ஏதொ இன்று நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து அவ்வப்போது இறைவன் இறக்கி வைத்து எச்சரிப்பது போன்றே தோன்றுகிறது
எண்ணம் தவறாக இருந்தால் இறைவன் மன்னிப்பானாக )
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
23ரமலான் 1443
25042022 திங்கள்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment