கதை சொல்லும் குரான்
கதை 20
பள்ளிவாசல்
சுராஹ் 9 அத்தவ்பா(பிழை பொறுத்தல் ) j 11
“பள்ளி வாசல்”
தொழுகை , பாங்கோசை , நல்ல சொற்கள்
நல்ல செய்திகள் , திருமறை , சமுதாயச் சிந்தனைகள்
பள்ளி வாசல் என்றால் நினைவுக்கு வருவது இவை போன்ற நல்லவைதான்
ஆனால் இதற்கு முற்றிலும் மாறுபட்டு தீயவர் கூடாரமாய் ஒரு பள்ளி இருந்ததாம் – சொல்பவன் இறைவன்
இன்னும் ஒரு சிலர் ஒரு பள்ளிவாசலை உருவாக்கி உள்ளார்கள்
---உண்மை, சத்திய வழிக்கு ஊறு விளைவிப்பது
--நம்பிக்கை கொண்டோரிடத்தில் பிரிவினை உண்டாக்கி அவ நம்பிக்கையை வளர்ப்பது –
--இறைவனுக்கும் , இறை தூதருக்கும் எதிராக செயல் புரிவோருக்கு அடைக்கலம் கொடுப்பது
போன்ற தீய செயல்கள் , நோக்கங்களுக்காக
அவர்கள் சத்தியம் செய்வார்கள் – “நாங்கள் நல்லதையே நாடுகிறோம்” என்று
அவர்கள் பொய்யர்கள் என்று இறைவனே சான்று பகர்கிறான் [9:107]
இது பற்றிய விளக்கம் மிக நீண்ட ஓன்று
சுருக்கமாகத் தர முயற்சிக்கிறேன்
அபு அமீர் – இறைவன் , இறைதூதருக்கு எதிராக செயல் புரிந்தவன் –வேதங்களை நன்கு கற்றறிந்து கிறித்தவ துறவியாகப் பணியாற்றி பேரும் புகழுமாய் இருந்தவன்
நபி அவர்களை தன் பக்தி வணிகத்துக்கு போட்டியாக எதிரியாக எண்ணி அதனால் இஸ்லாமை எதிர்க்கத் துணிந்தவன்
பத்ருப் போரில் இஸ்லாமியர்கள் அடைந்த எதிர் பாராத வெற்றி கண்டு வெறிகொண்ட அவன் இஸ்லாமிய எதிர்ப்புப் பணியில் மிகத் தீவிரம் காட்டினான் . பல நாடுகளுக்கு சென்று இஸ்லாமிய எதிர்ப்பை பரப்பினான்
உஹுது போருக்குக் காரணமாக இருந்த இவன் ,போர்க்களத்தில் சில குழிகள் தோண்டி வைத்து , அதில் த டுக்கி விழுந்து நபி பெருமான் அவர்கள் காயமடைந்தனர் .
அல்அஹ்சாப் போர், ஹுனைன் போர், தபுக் போர் போன்ற பல போர்களில் இஸ்லாமுக்கு எதிராக மிகத் தீவிரமாக செயல்பட்டான்
இதற்கிடையே
மதினாவில் ஒரு புதிய பள்ளி கட்ட ஏற்பாடுகள் துவங்கின இதன் பின்னணியில் இருந்தவர்கள் மதினாவில் இருந்த நயவஞ்சகர்கள் .
அபு அமீருக்கு முழு ஒத்துழைப்பு அளித்த இவர்கள் தங்கள் இறை எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர , சந்திப்புகள் சூழ்சசிகள் நிகழ தங்களுக்கென்று ஒரு பள்ளி இருப்பது பாதுகாப்பானது, யாருக்கும் எந்த ஐயமும் தோன்றாது என எண்ணினர்
அப்போது மதினாவில் இருந்த இரண்டு பள்ளிகள் –
மஸ்ஜீது நபவி , குபா பள்ளி போதுமானதாக இருந்தது . இது அந்த நயவஞ்சகர்களுக்கும் தெரியும்
இருந்தாலும் நபி பெருமானை அணுகி ,முதுமைஅடைந்தோர் , நோயாளிகள் , ஊனமுற்றோர் போன்றவர்கள் ஐந்து வேளையும் பள்ளிக்கு குறிப்பாக மழை , குளிர் காலங்களில் வரத் தோதாக மூன்றாவது பள்ளி தேவை என்று சொன்னார்கள்
மேலும் கட்டி முடித்த பின் நபி அவர்களை பள்ளி வாசலைத் துவக்கி வைக்கவும் கேட்டனர்
நான் தபுக் போருக்குப் போய் வந்த பின் இதுபற்றி சிந்திப்பதாகச சொல்லி நபி தபுக்குக் புறப்பட்டுப் போய்விட்டர்கள்
உடனே நயவஞ்சகர்கள் தங்கள் எண்ணங்களை செயல் படுத்த முற்பட்டனர்
தபுக் போரில் இஸ்லாமியர்கள் படு தோல்வி அடைவார்கள் என்ற எதிர்பார்ப்பில்
நயவஞ்சகர்கள் தலைவன் அப்துல்லா பின் உபய்க்கு மகுடம் சூட்ட தீர்மானித்தனர்
இறைவன் அருளால் தபுக் போரில் வெற்றி அடைந்த இஸ்லாமியர்களுக்குத் தலைமை தாங்கி நபி பெருமான் மதீனா நோக்கிப் பயணிக்கிறார்கள்
மதீனாவை நெருங்கையில் மேலே சொன்ன இறைவசனம் இறங்க நபி பெருமான் சொல்படி அவர்கள் மதீனாவுக்குள் நுழையுமுன் அந்தப்பள்ளி இடித்துத் தள்ளப்படுகிறது
இறையச்சத்துடன் இறைவனின் உவப்பை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் கட்டடம் கட்டுகிறார்
இன்னொருவர் நீரோட்டத்தால் அரித்துப்போன நதிக்கரையில் கட்டடம் கட்டுகிறார் . கட்டடம் நொறுங்கி விழுந்து கட்டியவரை நரக நெருப்பில் தள்ளி விடுகிறது
இந்த இருவரில் யார் சிறந்தவர் ?
தவறு செய்வோருக்கு இறைவன் நல்வழி காட்டுவதில்லை
[9:109]
வெளிப்படையாகப் பார்த்தால் இந்த இறைவசனம் கட்டடங்களை , குறிப்பாக மேலே குறிப்பிட்ட இடிக்கப்பட்ட பள்ளி வாசலைக் குறிப்பது போல் இருக்கிறது
ஆனால் இதில் ஆழ்ந்துள்ள உட்கருத்து இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த வாழ்வின் வெற்றியையும்
அது இல்லாமல் அமைந்த வாழ்வின் தோல்வியையும் குறிக்கறது
மூன்று பேர்—அவர்கள் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது --அவர்களுக்கும் இறைவன் நல்ல தீர்ப்பை வழங்கினான் .
பரந்த இந்த பூமி சுருட்டப்பட்டு அவர்களுக்கு இடம் இல்லாத ஒரு நிலை
அவர்களுக்கு அவர்களே சுமை ஆகினார்கள்
இறைவனைத் தவிர யாரும் தமக்கு துணை இல்லை என்பதை நன்கு உணர்ந்தார்கள் .
மனம் திருந்தி தன்னை நோக்கி அவர்கள் திரும்புவதற்காக அவர்களுக்கு இறைவன் கருணை காட்டினான்
நிச்சயமாக இறைவன் மிகவும் மன்னிப்பவன், மிகப்பெரும் கருணையாளன் [9:118]
இந்த வசனத்தின் பின்னணியாக உள்ள ஒரு நிகழ்வு –சுருக்கமாக
தகுதி உள்ளோர் அனைவரும் தபுக் போரில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நபியின் கட்டளையை மீறி பலபேர் வீட்டிலேயே தங்கி விட்டர்கள்
நபி அவர்கள் வெற்றி வீரராய்த் திரும்பியதும்அவரிடம் போருக்கு வராமல் போனதற்கு காரணங்களை விளக்கினார்கள்
பல நயவஞ்சகர்கள் சொன்னது நொண்டிச் சாக்கு என்று தெரிந்தும் நபி அவர்களை மன்னித்தார்
இந்த மூவரும் --உண்மையில் இறை நம்பிக்கை உடையோர் இதற்கு முந்தைய போர்களில் நபிக்கு உறுதுணையாக இருந்தவர்கள்--- ,தங்கள் தவறை வெளிப்படை யாக ஒப்புகொன்டர்கள்
இவர்களைப்பற்றி தீர்ப்பு இறைவன்தான் வழங்க வேண்டும் என்று எண்ணிய நபி அது வரை அவர்களை சமுதாயத்திலிருந்து தனிமைப் படுத்தினார்
சமுதாய விலக்கு, மனைவி மார் விலக்கு என கடும் தண்டனை 50 நாட்களுக்கு .
இந்த 50 நாட்களில் பூமியே தங்களுக்கு இடம் கொடுக்காமல் ஒதுக்கியது போல் உணர்ந்தனர் மூவரும்
இந்த இறை வசனம் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி புத்துயிர் ஊட்டியது
விரக்தி நிலையில் வீட்டில் அமர்ந்திருந்த மூவரில் ஒருவரான மாலிக்குக்கு
`தெருவில் இருந்து ஒருவர் வாழ்த்துச் சொல்ல தன்னை இறைவன் மன்னித்து விட்டான் என்பதை உணர்ந்து உடனே சிரம் தாழ்த்தி இறைவனை வணங்கி நன்றி சொன்னார்
அதன் பின் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாழ்த்துச் சொன்னர்கள்
நேராக பள்ளிக்குபோய் நபிக்கு வாழ்த்துச் சொன்னார் .நபியின் முகத்தில் மகிழ்ச்சியின் மலர்ச்சி, பூரிப்பு
“உங்கள் வாழ்வில் இது ஒரு பொன் நாள் . வாழ்த்துகள் “ என்று சொன்ன நபியிடம் மாலிக் மன்னித்தது நபியா இறைவனா என கேட்க இறைவன்தான் என்று கூறிய நபி மேலே சொன்ன இறை வசனத்தை படித்தார் [9:118]
தான் உண்மையை சொன்னதால்தான் இறைவன் மன்னித்தான் என்பதை உணர்ந்த மாலிக் , தன் செல்வத்தில் பெரும்பகுதியை தருமத்துக்குக் கொடுத்து விட்டார்
மூன்று வசனங்கள்
மூன்றின் பின்னணியிலும் வேறு வேறு நிகழ்வுகள்
தொடர்பில்லா ஒரு தொகுப்பு போல் தோன்றுகிறது
மூன்றும் சொல்லும் மையக் கருத்து , நிறைவுக் கருத்து இதுதான் :
இறைவனின் ஆட்சி அதிகாரம், அவன் மாட்சிமை
அவனை நம்பியோர் கைவிடப்படார்
நம்பாதவருக்கு வீழ்ச்சி
உண்மையின் வெற்றி
சுராஹ் 9 அத்தவ்பா (பிழை பொறுத்தல் )
119 வசனங்கள் “பிஸ்மில்லாஹ் “வில் துவங்காத சூராஹ்
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குரானில் சிந்திப்போம்
20 ரமலான் 1443
22042022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment