கதை சொல்லும் குரான்
கதை 27
இணைவோம் பிரியோம்
ஜூஸு 4
ஓன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமையே வலிமை
Unity is strength
மனிதர்கள் ஓன்று சேர்ந்தால் , ஒற்றுமையாய் இருந்தால் அது மிகப்பெரிய பலம், வலிமை
என்பதைப் பறை சாற்றும் சொல் வழக்குகள் ஏராளம்
இஸ்லாம் ஒரு படி மேலே போய்
மனிதர்கள் ஒற்றுமையாய் இருந்து இறைவன் இறை நம்பிக்கை என்ற கயிறை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள வலியுறுத்துகிறது
இறைவனின் பிணைப்பை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்
பிரிந்து போய்விடாதீர்கள்
இறைவன் உங்களுக்கு அள்ளிக் கொடுத்த அருட்கொடைகளை நினைவில் கொள்ளுங்கள்
எதிரிகளாய் இருந்த உங்கள் உள்ளங்களை இணைத்து வைத்தான்
அவன் அருளால் எதிரிகள் உங்கள் சகோதரர்கள் ஆகி விட்டார்கள்
ஒரு தீக்குழியின் விளிம்பில் நீங்கள் நின்றீர்கள்
அதிலிருந்து இறைவன் உங்களை விடுவித்தான்
நீங்கள் நேர்வழியில் போக வேண்டும் என்பதற்காக சான்றுகளை வெளிப்படுத்துகிறான் (3:103)
இறைவனின் பிணைப்பு (கயிறு ) என்பது இறைவன் காட்டும் நல்வழியை, மார்க்கத்தைக் குறிக்கிறது
இறைவனனுக்கும் மனிதர்களுக்கும் ஒரு பிணைப்பை உண்டாக்கி அதில் நம்பிக்கையாளர்கள் அனைவரையும் ஓன்று சேர்க்கிறது
உறுதியாக இறுகப்பற்றிக்கொள்ளுங்கள் = எந்த நேரத்திலும் ,எந்தக் காரணம் கொண்டும் இறைவழியை விட்டு விலகி விடாமல்,ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்
எதிரிகள் சகோதரராகி விட்டார்கள் = இஸ்லாம் தழைத்து உறுதிப்படுமுன்
அரபியர்கள் பல குலங்களாக , குழுக்களாகப் பிரிந்து நின்று ஒருவொருக்கொருவர் எதிரிகளாய் சண்டையும் சச்சரவுமாக இருந்தனர்
இஸ்லாம் என்ற ஒரு குடையின் கீழ் அவர்கள் சகோதரர் ஆகினர்
ஒரு தீக்குழியின் விளிம்பில்= அரபு நாடு முழுதும் பகைமையின் உச்சத்தில் அழியும் நிலையில் இருந்தது . இஸ்லாம் கொண்டு வந்த ஒற்றுமை அந்தப் பேரழிவில் இருந்து அரபு தேசத்தைக் காப்பாற்றியது
மேலும் இறைவன் சொல்வது
பல தெளிவான சான்றுகள் வந்த பின்பும் சிலர் வேற்றுமை கொண்டு பற்பல குழுக்களாக சிதறிப் போய் விட்டார்கள் நீங்கள் அவர்களை ப்போல் ஆகி விடாதீர்கள்
அவர்களுக்கு கடும் தண்டனை காத்திருக்கிறது ( 3:105)
சில கூட்டத்தினர் அற்பமான ஐயங்கள், தேவை இல்லாத வினாக்களில் இறைவழியின் அடிப்படைக் கொள்கைகள் ,நல்ல செய்திகள் அனைவற்றையும் புறந்தள்ளி விட்டுக் குழுக்களாக சிதறுண்டு போகிறார்கள்
அப்படிப்பட்ட பிரிவினை வாதிகள் பற்றித்தான் மேலே சொல்லப்படுகிறது
சுராஹ் 3 ஆலு இம்ரான் (இம்ரானின் குடும்பம் )
வ 92 – 200 (முடிவு )
சுராஹ் 4 அந்நிஸா 1—23
என இரு சூராக்களின் பகுதியால் ஆனது இந்தப்பகுதி
இரண்டுமே மதீனமாநகரில் இறககப்பட்டவை
இவற்றில் நிறைய சட்டதிட்டங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் பற்றி வரும்
ஒரு சிலவற்றைப் பார்ப்போம்
நம்பிக்கை கொண்டோரே !
இறையச்சம் கொள்ளுங்கள் போதுமான அளவுக்கு
இறைவனுக்கு அடிபணிந்த நிலையிலே உங்கள் மரணம் நிகழ வேண்டும் (3:102)
இறைவன் ஒருபோதும் உலக மக்களுக்குத் தீங்கு நினைப்பதில்லை --- (3:108) 3.
வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் இறைவனுக்கே உரியவை
எல்லாவற்றையும் முடிவு செயவது இறைவனே (3:109)
மக்களுக்கு வழிகாட்டி சீர்திருத்த பணிக்கப்பட்ட மிகச் சிறந்த சமுதாயம் உங்களுடையது
இறைவனை நம்புங்கள்
தீயவற்றை விட்டு விலகி நல்லதை மட்டுமே பின்பற்றச் செய்யுங்கள்
-------(3:110)
هِ
சும்மா கிடைப்பதல்ல சுவனம்
இறைவழியில் கடும் உழைப்பு,
அதில் நீடித்த நிலைப்பு
இருந்த்ல்தான் சுவனத்துள் நுழைய ,உடயும் (3:142
ۡ
------------- வாழ்வைக் கொடுப்பதும் மரணத்தைக் கொடுப்பதும் இறைவனே (3:156)
-------முக்கியமானவை பற்றி கலந்து ஆலோசியுங்கள் .
ஆலோசித்து செயல் திட்டத்தை முடிவு செய்து விட்டால் இறைவன் மேல் முழு நம்பிக்கை வையுங்கள்
தன்னை நம்புபவர்களை இறைவன் நேசிக்கிறான் (3:159)
-------இறைவனையும் இறை தூதரையும் நம்பி இறை அச்சத்துடன் இருந்தால் உங்களுக்கு மிகப்பெரும் கூலி இருக்கிறது (3:179)
ஆண்கள் பெண்களுக்கு திருமணத்தில் கொடுக்கும் மஹ்ர்பற்றி விளக்குகிறது 4:4
சொத்துப்பங்கீடு பற்றிச் சொல்லும் வசனங்கள் 4:7 முதல் 14 வரை
இறந்தவரின் துணைவி இறந்தவரின் சொத்தின் ஒரு பகுதி என்பது போல் கணவன் வீட்டார் விதிக்கும் கட்டுப்பாடுகள் தவறு என்று சொல்கிறது வசனம் 4:19
திருமணம் செய்யும்போது ஆண்கள் கொடுத்த மஹ்ர் ஒரு பொற்குவியல் என்றால் கூட மணமுறிவின் போது அதைத் திரும்பப் பெறக் கூடாது
ஒருவருக்கொருவர் எவ்வளவு நெருக்கமாக வாழ்ந்திருக்கிறீர்கள்!
மேலும் அவர்களோடு நீங்கள் உடன்படிக்கை செய்திருக்கிறீர்கள். 4:20,21
பெண்களை , பெண்களின் சுதந்திரத்தை ஒடுக்கும் பிற்போக்கு சக்தி இஸ்லாம் என பரவலாக ஒரு கருத்து உண்டு
அது முற்றிலும் தவறு என்பது ஒரு சில வசனங்களைப் பார்க்கும்போதே தெளிவாகிறது
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
27ரமலான் 1443
29042022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment