கதை சொல்லும் குரான்
கதை 18
கனியிருப்ப--------
சூராஹ் 14 இப்ராகிம் j 13
“பிறரைப் பார்த்து புன்முறுவல் பூப்பதும் ஒரு தருமமே”
“எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறரை சந்தித்து நலம் விசாரிப்பதும் ஒரு மிகப் பெரிய தருமமே”
செல்வந்தர்கள் போல் தருமம் செய்ய எங்களுக்குப் பொருள் வசதி இல்லை என்று சிலர் சொல்ல
அதற்கு நபி பெருமான் சொன்ன மறுமொழிகள் இவை
நல்ல சொற்களுக்கு உள்ள வலிமை. தாக்கம் அளவில்லாதது
சரி நல்ல சொற்கள் எவை ?
அதற்கு இறைவனே மறுமொழி சொல்கிறான் ஒரு எடுத்துக்காட்டு வழியாக
இறைவன் நல்ல சொல்லுக்கு என்ன எடுத்துக்காட்டு சொல்கிறான் என்பதை நீங்கள் அறியவில்லையா ?
வேரூன்றிய , வானுயர்ந்த நல்ல மரம் போன்றது
நல்ல சொல் (14:24)
விளக்கம்
.நல்ல சொல் என்பது உண்மை, நல்ல நம்பிக்கைக்கு அடையாளம் –இறைவனில் நம்பிக்கை, இறை தூதரில் நம்பிக்கை ,இறை மொழியில் நம்பிக்கை ,மறுமையில் நம்பிக்கை
இவை அனைத்தும் அடிப்படை உண்மைகள்
எனவே நல்ல சொல் என்பது இவற்றை எல்லாம் உட்கொண்டதாக இருக்க வேண்டும்
வேரூன்றி வானுயர்ந்த மரம் என்பது எப்படி ஒரு நல்ல சொல்லின் தாக்கம் பூமியிலும் வானங்களிலும் பரவி உண்மையை நிலை நாட்டுகிறது என்பதை எடுத்துச் சொல்கிறது.
வானங்களும் பூமியும் அவற்றிற்கு இடையே உள்ள அனைத்தும் உண்மையின் அடிப்படையில்தான் படைக்கப்பட்டவை என்பதை இறைவன் பலமுறை வலியுறுத்திச்சொல்கிறான்
மேலும் அந்த மரம் பற்றி
“இறைவன் அருளால் அந்த மரத்தில் ஆண்டு தோறும், பருவம் தோறும் தொடர்ந்து பழங்கள் பழுத்துக் கொண்டிருக்கின்றன
எல்லோரும்புரிந்து கொள்வதற்காக இறைவன் எடுதுக்காட்டுகளை தருகிறான் (14:25)
விளக்கம்
பழுக்கும் மரம் ஆண்டு முழுதும் அனைவருக்கும் பயன் படுகிறது
அதே போல நல்ல தூய சொல் மக்கள் அனைவருக்கும் பயன் அளிக்கிறது
- உள்ளத் தூய்மை , எதையும் ,சீர்தூக்கிப் பார்க்கும் மன நிலை செயல்களில் தூய்மை நேர்மை நல்ல சமூகப்பார்வை ,அரசியல் பார்வை, பொருளாதாரப் பார்வை
- ----என எண்ணற்ற நல்லவைக்கு அடித்தளமாக இருக்கிறது தூய சொல்
நல்ல சொல் என்று ஓன்று இருந்தால் அதற்கு எதிராக, எதிர்மறையாக ஓன்று இருந்தே ஆகவேண்டும்
- அதையும் இறைவனே எடுத்துக்காட்டி விளக்குகிறான்
-
- நிலையான தன்மை இல்லாத ,நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்ட` ஒரு தீய மரம் தீய ,பயனிலா சொல்லுக்கு எடுத்துக்காட்டு (14:26)
-
- விளக்கம்
- நல்ல சொல்லுக்கு உள்ள தன்மைகள் அனைத்துக்கும் எதிரான தன்மைகள் கொண்டது தீய சொல் . நன்மை ஏதும் பய்க்காதது
- உலக இயற்கையான உண்மைக்கு மாறாக இருப்பதால் அதற்கு நிலைத்து நிற்கும் தன்மை இல்லை
- வானங்கள், பூமி அதற்கு எதிராக செய்ல்பட்டு அந்த மரம் அதன் விதைகள் முளைக்காமல் தடுத்து விடுகின்றன
தீய, பயனிலா சொற்கள் நம்பிக்கிகைகள் அடிப்படையில் சிலர் (பலர் ) வாழ்ந்து ,வளர்ந்து கொண்டுதான் வருகிறார்கள்
இதற்கு இரண்டு காரணங்கள்
ஓன்று மனிதனுக்கு இறைவன் கொடுத்த சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல்
அடுத்து ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இறைவன் அளித்துள்ள காலவரையறை
நல்ல சொல், நம்பிக்கை காலத்தால் அழியாது ,மாறாது நிலைத்து நின்று அதை கடைப்பிடிப்பவருக்கு மட்டுமல்லாது அவர் சார்ந்த அனைவருக்கும் நன்மை பயக்கும்
மாறாக பயனிலா தீய சொல், தீய நம்பிக்கை மாறிக்கொண்டே வரும் . யாருக்கும் நன்மை பயக்காது
இப்படி ஒரு உறுதியான அறிவிப்பு வழியாக் நம்பிக்கையாளர்களுக்கு இம்மை வாழ்விலும் மறுமையிலும் ஒரு திடமானநம்பிக்கையை ஊட்டு கிறான் ---------(14:27)
சூராஹ் 14 இப்ராஹீம் (வசனம் 25இல் வரும் சொல்) 52 வசனங்கள்
இந்த சூராவில் வரும் இப்ராஹீம் நபியின் இறைஞ்சல்கள்
(து ஆக்கள் )
“இறைவா இந்த வறண்ட பாலை வனத்தில்
உன் புனித இல்லம் அருகில்
இறைபணியை ,இறை வணக்கத்தை நிலை நாட்டும்பொருட்டு என் மக்கள் சிலறை இங்கு குடி அமர்த்தியிருக்கிறேன்
அவர்கள் மேல் மக்கள் உள்ளங்களில் அன்பை விதைப்பாயாக
.
அவர்களுக்கு வாழத் தேவையான பொருட்களையும் உணவையும் பழங்களையும் வழங்குவாயாக
அவர்கள் நன்றி உடையவர்களாய் இருப்பார்கள் (14:37) "
இறைவன் இப்ராகிம் நபியின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டு அதை செயலாக்குகிறான்
முதலில் அரபு நாடு முழுதிலும் இருந்து , இப்போது உலகெங்கிலும் இருந்து புனிதப் பயணமாக வந்து கொண்டே இருக்கிறார்கள்
மேலும் விலங்குகளுக்கு உணவான புல் பூண்டு கூட முளைக்காத அந்த வறண்ட பூமியில் ஆண்டு முழுதும்
எல்லா வகையான பழங்களையும் உணவு வகைகளையும் இன்றளவும் குறைவின்றி வழங்கி வருகிறான்
இறைவனே எனக்கும் என் பெற்றோருக்கும் ,நம்பிக்கை கொண்டோருக்கும் கணக்குப்பார்க்கும் நாளில் பாவ மன்னிப்பை வழங்குவாயாக (14:41)
இறை மறுப்பாளரான இப்ராஹிமின் தந்தைக்கு பாவமன்னிப்பு கேட்டது பிழை என உணர இறைவன் இப்ராகிம் நபி யின் அந்தச் செயலை மன்னித்து விடுகிறான் (9:114)
சொற்களின் வலிமை
பாலைவனத்தை சோலையாக்கிய
இப்ராகிம் நபி அவர்களின் து ஆவின் வலிமை
பற்றி இந்தப்பதிவில் பார்த்தோம்
நல்ல சொற்களை மட்டுமே பேச முயற்சிப்போம் ( சற்று சிரமம்தான் )
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
18ரமலான் 1443
20042022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment